Quantcast
Channel: ரவி ஆதித்யா
Viewing all 56 articles
Browse latest View live

டிஸ்கவரி சேனல் -இயற்கையின் பிரமிப்புகள்

$
0
0
டிஸ்கவரி சேனல் தமிழ் வந்த பிறகு நிறைய சேனல்களின் டிஆர்பி ரேட்டிங் குறைவதாக எங்கோ செய்திப் படித்தேன். உண்மைதான்.கலக்குகிறார்கள்.

அதே ஆங்கிலம்தான் இப்போது தமிழில்.

சினிமா போல ஆரம்பம்,நடு, கிளைமாக்ஸ் என்று பதப்படுத்திக் கொடுக்கிறார்கள்.சில பிராணிக்குச் செல்ல பெயர் வைத்து பின் தொடர்ந்து கதைச் சொல்கிறார்கள்.இது அம்மா,இது அப்பா,இது அதன் குட்டிகள் என்கிறார்கள்.

மாதங்கள் வருடங்கள் காத்திருந்து படம் எடுக்கிறார்கள்.

ஒரு தனி கிரகமாக இயங்கிக்கொண்டிருக்கிறது.வாழ்வா-சாவா போராட்டம் நித்தம் நித்தம் நடக்கிறது.

பாம்பு விஷத்தைக் கழுகின் மேல் பீச்சி அடிக்கிறது.ஆமை ஜோடி சேர்வதற்கு படாத பாடு படுகிறது.ஒரு குருவி
வெகுளித்தனமாக வேறொரு குருவி குஞ்சு இனத்திற்க்கு உணவு ஊட்டுகிறது.லட்சக்கணக்கான மீன்கள் அலுக்காமல் நீந்திக்கொண்டே இருக்கின்றன.

குரங்குகள் குளிரில் நடுங்குகின்றன.பூச்சி ஒன்று எதிரி மேல் குசு விட்டு தப்பிக்கிறது.சிங்கங்கள் பிரபஞ்சமே கிடுகிடுக்கும்படி மோதுகின்றன.புணர்ந்த பின் சிலிர்க்கின்றன.வித விதமான பூக்கள் கொத்துக்கொத்தாக பூத்து குலுங்கிக்கொண்டே இருக்கிறது.வெளவால்கள் கண்டம் விட்டு கண்டம் உணவுக்கு பறக்கின்றன.குளிர் போய் வெப்ப காலத்தில் நிறைய மடிகின்றன. கன்றுகள் தொலைந்துப்போய் அம்மாவைத் தேடுகின்றன.
உஷார்...!காவல்காக்கும் மீர்காட்டுகள்
இயற்கையின் வினோதங்களை இண்டு இடுக்குவிடாமல் படம்பிடித்துப் போடுகிறார்கள்.விதவிதமான நவீன தொலைத் தொடர்பு சாதனங்களுடன் உலகத்தை வலம் வருகிறார்கள்.

சாப்பாடு,தற்காப்பு,செக்ஸ் முக்கியமான மூன்று தளங்களில் கோடிகோடி ஜீவராசிகள் தங்களின் இருப்பை நிலை நிறுத்திக்கொள்கின்றன.

எல்லாமே உள்ளுணர்வு மூலம் உந்தப்படுகின்றன.

Survival of the fittest  என்பது நிதர்சனம்.இங்கும் பொறாமை,தகிடுதத்தம்,குழு மனப்பான்மை,பிலிம் காட்டுதல்,அலட்டுதல்(செக்ஸ்ஸுக்காக),திட்டம் போடுதல்,அன்பு,பிரிவு,துக்கம்,போட்டி,வருத்தம், எல்லாம் உண்டு.



யூகிக்க முடியுமா. வெற்றி அல்லது தோல்வி அல்லது டை?

ஆனால் எல்லாம் இருப்புக்கான போராட்டம்தான்.எப்போதும் உயிர் பயம் என்ற டென்ஷனிலேயே இருக்கிறது.ஒரு புல்லைக் கடிப்பதற்க்குள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டி இருக்கிறது.24 மணி நேர கண்காணிப்பு கேமராதான்.



தாவரத்தை உண்ணும் பிராணிகள் தாவர பட்சிணி.இங்கு தாவரம் பூச்சியை வூடு கட்டி பிடித்து உண்கிறது. அதற்கு சத்துணவு தேவையாம்.

இயற்கையின் சீற்றங்கள்.மனிதனின் சாகசங்கள்.மருத்துவ உலகின் அதிசயங்கள் என்று உலகம் விரிகிறது.


மனிதன் இயற்கை மற்றும் பிராணிகளுடன் போராட்டம் நடத்தி பிரயாணம் செய்வதை ஒரு டிவி சீரியல் போல் சொல்கிறார்கள்.

ஒரு ஜீவராசிக்காவது, அதன் உள்ளுணர்வில் தெரியுமா, டிவியில் இதன் சொந்த விஷயங்களை நாம் எட்டிப்பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்று. தெரிந்தாலும் அது கவலைப்படப் போவதில்லை.


சேனலின் மொழிப்பெயர்ப்புத் தமிழை இன்னும் எளிமைப் படுத்தலாம்.


எம்.எஸ்.விஸ்வநாதன் -மெல்லிசை வித்தகர்

$
0
0
வலது கை விரல்களால் ஹார்மோனியப் பற்களை அழுத்தி இடது கை விரல்கள் இரண்டை உயர்த்திச் சொடுக்குப்போட்டு ரெடிமேடாக மேஜிக் மெட்டுக்கள் போட்டு திரையுலகத் தமிழ் இசையை மெல்லிசைத்து 50 வருடம் ஆண்டவர் எம்.எஸ்.விஸ்வநாதன்.முடி சூடா மெல்லிசை மன்னர்.

இவருடன் டி.கே.ராமமூர்த்தி இணைந்து பின்னால் பிரிந்தவர்.

இவரின் பல பாடல்களில் நடுநடுவே stunner(பிரமிப்பு) இசைத் துண்டு வந்து போகும்.லட்சணமாக இருக்கும்.

என்னால் மறக்க முடியாத பாட்டு “ அம்மம்மா கேள் ஒரு சேதி” ”பவள கொடியிலே”இதன் காட்சியும் நம்மை ஒன்ற வைக்கும்.தாளத்திற்கு “ஒரு பெண்ணைப் பார்த்து" " நீயேதான் என் மனவாட்டி” “அவளுக்கென்ன அழகிய” இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம.பல நாட்கள் ஆகும் முடிப்பதற்கு.

ரூமை(அதுவும் இரவில்) இருட்டாக்கி ஒரு திகிலுடன் “எங்கே நிம்மதி” பாட்டை ரசித்ததுண்டு.”ஆயிரம் கரங்கள்
போற்றி”(கர்ணன்),”நாம் ஒருவரை ஒருவர்(குமரிக்கோட்டம்),”நான் காற்று வாங்க”(கலங்கரை விளக்கம்) அடிக்கடி கேட்டு ரசிப்பதுண்டு.

இவரின் குரலில் பல அருமையான பாட்லகள்.”கண்டதை சொல்லுகிறேன்”
(சில நேரங்களில் சில மனிதர்கள்) ,”சொல்லத்தான் நினைக்கிறேன்””சிவ சம்போ” “இன்பத்திலும் துன்பத்திலும்” (சிவகாமியின் செல்வன்”""அல்லா அல்லா”(துக்ளக்)”பயணம்” (பயணம்).

பின் வரும் இசை பிரமிப்புக்களை கேளுங்கள்:-



மனையங்கத்து சுப்ரமணியன் விஸ்வநாதன்.பிறப்பு 24-06-1928.இன்றும் பல சேனல்களில் தன்னுடன் ஒட்டிப் பிறந்த தோரணையுடன் ஹார்மோனியத்தை செல்லமாக அணைத்தவாறு தன் இசையை சிலாகிப்பார்.

பன்முகத் திறமை இல்லாமல் இவ்வளவு வருடம் குப்பைக்
கொட்டமுடியாது.
பண்டித இசையை மெல்லிசையாக்கி அடுத்தக் கட்டத்திற்குநகர்த்திய முக்கியமான ஆளுமைகளில் முதன்மையானவர்.

அதுவும் சிவாஜியின் உதட்டுக்கும்/நடைக்கும் எம்ஜியாரின் கைஆட்டலுக்கும் கொள்கைக்கும் பாடல் எழுதப்படுகிறது.அதற்கு தன்னை உலுக்கிக்கொண்டு மெட்டுக்கள் போட்டு இளைத்துப்போனவர் மெல்லிசை மன்னர்.அவர்களுக்குத் தெரியாமல் நவீனத்தை மறைத்துக்கொடுத்தவர்.

இவர் காலத்தில் இசையமைப்பாளர்களுக்கு பொறுப்பு அதிகம். ஏன்? பல படங்களில் பாட்டிலேயே கதைச் சொல்ல வேண்டும்.வெயிட்டுஜாஸ்தி.சமூகம்,பக்தி,மாயஜாலம்,
சரித்திரம்,புராணம்,மேற்கத்திய நாட்டு கதை,திகில்,பேய்,கிரைம்,கர்நாடகம் என்று பல வித கூறுகளில் படத்திற்கு இசை அமைக்க வேண்டும்.

அயல் நாட்டு இசையை தமிழில் புகுத்தியவர். ”ஆட வரலாம்”(கறுப்புபணம்),”நினைத்தை நடத்தியே”(நம் நாடு),”மலரென்ற முகம்”(காதலிக்க நேரமில்லை)”என்னைத் தெரியுமா”(குடியிருந்த கோவில்).

அப்போது முக்கியமானது நேரலை இசை( live orchestra) அமைப்பு. எல்லா வாத்தியகாரர்களயும் கட்டி மேய்த்து இசை உருவாக்க வேண்டும். இடையில் தப்பு நேர்ந்தால் மீண்டும் இசைக்க வேண்டும்.

இவரின் தாக்கம் அவரின் சமகாலத்து இசையமையப்பாளர்களான வி.குமார்,சங்கர்கணேஷ்,
ஜி.கே.வெங்கடேஷ்,தேவராஜன்,விஜயபாஸ்கர்,ஆர்.கோவர்தன்,ஆர்.சுதர்ஸனம் இருந்தது.

இளையராஜா பாடல்களிலும்பார்க்கலாம்(நினைத்தால் போதும் பாடுவேன்(கலைக்கோவில்).ஆர்.ரஹ்மானுக்கு ரொம்ப செல்லமானவர்.தாக்கத்தில் ரிமிக்ஸ் போட்டதுண்டு.

பயணம் பாட்டைக் கேளுங்கள்.ஒல்டு இஸ் கோல்டு.

http://www.raaga.com/player4/?id=230558&mode=100&rand=0.031038899207487702

எம்.எஸ்.வி தமிழ்த் திரையுலகில் மாபெரும் தாக்கத்தை உண்டாக்கி விலகியவர்.


நன்றி

$
0
0
கடைசி தேர்வு எழுதி முடித்த உணர்வு.மண்டை குடைச்சல்கள் இனிமேல் இல்லை.நோ டென்ஷன்.ஏதேதோ யோசித்து பதிவுகள் போட்டு ஒரு வாரத்தை ஓட்டியாயிற்று.புது அனுபவம்.


புது மாப்பிள்ளை ஜோர் ஓவர்.அடுத்த புது மாப்பிள்ளை ரெடியாகிவிடுவார்.

என்னை நட்சத்திரமாக்கிய தமிழ்மணத்திற்கு நன்றி. ஒரு வாரம் என்னை ஆதாரித்து படித்தவர்கள்,பின்னூட்டம் போட்டவர்கள் எல்லோருக்கும் நன்றி.

ஜொலித்து முடித்து சாதாவாக ஆன பிறகும் தொடர்ந்து என் பதிவுகளைப் படித்து ஆதரவு கொடுக்கவும்.

நன்றி வருகிறேன் வணக்கம்.


ரொம்ப தூரத்து உறவு - கவிதை

$
0
0

எப்பவோ பார்த்திருந்த
தூரத்து உறவு அத்தைப் பாட்டி
இறந்துவிட்டதாக தகவல் வருகிறது

பண்டரிபாய் போல்
முகம் இருந்திருக்கிறது
நெய்வேத்தியம் செய்வதற்கு
முன்னமே ஒரு வடை கொடுத்திருக்கிறார்
சமத்தா படி என்று
வாஞ்சையாக கன்னத்தைக்
கிள்ளி இருக்கிறார்
ஈரத்தலையைத் துவட்டி விட்டிருக்கிறார்
சினிமாவுக்கு அழைத்துப் போயிருக்கிறார்
ரயில் ஜன்னல் ஒரத்தில்
உட்கார அனுமதித்திருக்கிறார்
அம்மா அடிக்கும்போது தடுத்திருக்கிறார்

இப்படியாக
அன்பு சுரந்து முடிகையில்
அவரே வீட்டிற்க்கு வருகிறார்

இறந்தது அவர் இல்லை
வேறு யாரோ ஒரு தூரத்து உறவு


பண்டரிபாய் போல்
முகம் இருக்கவில்லை
நெய்வேத்தியம் செய்வதற்கு
முன்னமே ஒரு வடை கொடுக்கவில்லை
அல்லது சமத்தா படி என்று
வாஞ்சையாக கன்னத்தைக்
கிள்ளி விடவில்லை
ஈரத்தலையைத் துவட்டி விடவில்லை
சினிமாவுக்கு அழைத்துப் போகவில்லை
ரயில் ஜன்னல் ஒரத்தில்
உட்கார அனுமதித்ததில்லை
அம்மா அடிக்கும்போது தடுக்கவில்லை

அந்த இறந்துப் போன
வேறு யாரோ ஒரு தூரத்து உறவின் மேல்
அன்பு சுரக்கிறது

அத்தைப் பாட்டிக்குச் சுரந்ததை விட
இரண்டு படி அதிகமாகவே சுரக்கிறது


முப்பொழுதும் உன் கற்பனைகள்..சித்தாரா சூப்பர்!

$
0
0
நேற்று டிவி ரிமோட்டில் சேனல்களை மாற்றிக்கொண்டே வரும்போது ஒரு பெண்ணின் குரலைக் கேட்டு சற்று அசந்துவிட்டேன். எனக்காகவே காத்திருந்தவர் போல் பாட ஆரம்பித்தார்.பாடி சிறிது நேரம் கழித்து நிகழ்ச்சி முடிந்துவிட்டது.

அந்த நிகழ்ச்சி “முப்பொழுதும் கற்பனைகள்” படத்தின் இசை வெளியிட்டு விழா. ஜெயா டிவி.

மேடையில் பாடிக்கொண்டிருந்தவர் சித்தாரா கிருஷ்ணகுமார் என்பது நெட்டில் பார்த்துத் தெரிந்துக்கொண்டேன்.அந்தப் பாடல் “கண்கள் நீயே... கடலும் நீயே”.இசை: ஜி.வி.பிரகாஷ்.படத்திலும் இவரேதான் பாடி இருக்கிறார்.

சித்தாரா
பாம்பேஜெயஸ்ரீ, சித்ரா குரலையும் மிக்சியில் போட்டு அடித்துக்
கலந்தாற் போல் இனிமையான ஜீவனுள்ளகுரல்.ஹைபிட்ச்சில் மழலை/கீச் தட்டாமல் அற்புதமாக வழுக்கியபடி பாடுகிறார்.கிளாசிகல் டச்.நல்ல தமிழ் உச்சரிப்பு.


ரொம்ப நாளைக்குப் பிறகு தமிங்க்லிஷ் இல்லாமல் பாடும் பெண்ணின் மெலடியோடு உயிர்துடிப்பானப் பாட்டு கேட்டேன்.ரொம்ப சந்தோஷ் ஆனேன்.

தமிழில் இவருக்கு முதல் பாடல் என்று நினைக்கிறேன்.மலையாளத்தில் சாஜன் மாதவ் இசையில் ”யாக்‌ஷியும் நிஜனும்” படத்தில் ஒரு பாடல் பாடி உள்ளார்.இன்னும் நிறைய மலையாள படப் பாடல்கள் பாடி உள்ளதாக தெரிகிறது. இக்குட்டி கேரளாவின்னு வந்துன்னூ.

தாமரையின் வரிகள் பாடலுக்கு மிகப் பெரிய பலம்.இப்பாடல் தெய்வம் தந்த பூவேவின் சாயல் வருகிறது.அடுத்து ஹாரிஸ் ஜெயராஜின் வழக்கமான மெலடி வாசனை.

இவர் கேரளா ஜீவன் டிவியில் பாட்டுப் போட்டியில் இரண்டு கோடி ரூபாய் பரிசு வாங்கி உள்ளாராம். கிழ் உள்ள வீடியோவில் ஜானகி அம்மாவின் மலையாளப் பாட்டு ஒன்று பாடுகிறார்.


சித்தாரா என்றால் வட மொழியில் காலை நட்சத்திரம்.மின்னுங்கள் சித்தாரா.வாழ்த்துக்கள்!


வாய்க்கரிசி,அவன் அவள் மற்றும் ஒரு புன்னகை

$
0
0
                                       வாய்க்கரிசி

”இதானே”

மார்ச்சுவரி அருகே ஸ்டெரச்சரில் பெண் பிணம் காலை விரித்தபடி சாம்பல் பூத்து கிடந்தது.நான்கு மாத கர்ப்பத்தில் வயிறு பூசி இருந்தது.பக்கத்தில் போலீஸ்காரர்.

“கைவுட்டுட்டு ஓடினனே.. அந்த பொறம்போக்கு என்ன ஜாதி?”

எதிரில் இருந்தவர் முகம் இறுகி எதுவும் பேசவில்லை.

”வாய்க்கரிசி தீர்த்தம்ன்னு சம்பிரதாயத்த முடிச்சிடுங்க “

“அதெல்லாம் வேண்டாமுங்க.களுத தொலைஞ்சா போதும்”கத்தையாக ரூபாய் நோட்டுக்களை போலீஸ் கையில் அழுத்தினார்.

“அட ரிக்கார்டலதான் அனாத பொணம்.உனுக்கு நீ பெத்த பொண்ணூ.” சொல்லி முடிப்பதற்குள் அவர் போய்விட்டிருந்தார்.

வார்டுபாயிடம் கால்கிலோ அரிசியும் தண்ணீர் பாக்கெட்டும் வரவழைத்து முகத்தில் தண்ணீர் பீச்சியடித்து கொத்தாக அரிசியை வாயில் போட்டார்.
                                        ------------------

                        அவன் அவள் மற்றும் ஒரு புன்னகை

சந்தியாவுடன் அவனும் சரிசமமாக கூடவே நடந்து வந்துக்கொண்டிருந்தான்.அவன் யாரோ? இவளுக்குத் தெரியாது.

இருவருக்கும் இடையே கால் இன்ஞ் இடைவெளிதான் இருக்கும்.அவள் செருப்பின் அடியும் அவன் ஷுவின் அடியும் பளிச்சென்ற hexagon வடிவ பிளாட்பார வில்லைகளில் மாறி மாறி வைக்கப்பட்டது. ஒவ்வொரு அடிக்கும் தன் செருப்பின் ”சரக்சரக்”கும் அவன் ஷுவின் ”டக்டக்கும்” ஒரு சினிமா பாட்டின் ரிதம் போல காற்றில் தொடர்ந்து வந்தது.

தெருவில் ஒரு திருப்பம் வந்து இருவரும் பிரிந்தார்கள்.

இணைபிரியாமல் நடந்து வந்தது எவ்வளவு நிமிடம் என்று யோசித்தாள். ஐந்து நிமிடம் என்று தெரிந்தது. அந்த hexagon பிளாட்பார கற்களைப் பார்த்தாள்.மெதுவாகப் புன்னகைத்துவிட்டு ஆபிசை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

                                        ------------------                     

என் வானிலே ஒரு மகேந்தரன்,அசோக்குமார்,இளையராஜா

$
0
0
டைரக்டர் ஜெ.மகேந்திரன் தமிழ்த்திரையுலகில் (1978-90)ஒரு முக்கியமான ஆளுமை.சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியவர்களுள் ஒருவர்.சினிமா ஒரு காட்சி ஊடகம் என்பதை காட்சிகளுனூடே பார்வையாளனை பயணிக்க வைத்துக் கதைச் சொல்பவர்.

மிக முக்கியமாக ரஜினியை வித்தியாசமாக காட்டியவர்.

காட்சிகளும் கதாபாத்திரங்களாக கதையோடு ஒன்றும். கதாபாத்திரங்களின் யதார்த்தமான உணர்ச்சிகளை செதுக்கி நம் முன் உலவ விடுவார்.
வெள்ளை உடையில் மகேந்திரன்

அடுத்து இவரின் கற்பனையை கேமரா மூலம் ஓவியமாக தீட்டுபவர் ஒளிப்பதிவாளர் அசோக்குமார்.இருவருக்கும் இருக்கும் புரிதலைக் காட்சி சொல்லும்.

அந்தக் காலகட்டதில் இவரும் முக்கியமான ஆளுமை.
ரசிகன் ஒளிப்பதிவுக்கும் கைத்தட்டல் கொடுத்த காலம்.உதிரிப்பூக்கள்,நெஞ்சத்தைக் கிள்ளாதே போன்ற அருமையான படங்களுக்கும் இவர்தான் ஒளிப்பதிவு.
ஜீன்ஸ் படத்திற்கும் இவர்தான் ஒளிப்பதிவு.

அடுத்து இளையராஜா.இருவரின் கற்பனைத்திறனை வியந்து அதற்கு உயிர்கொடுப்பவர்.மகேந்திரன் படங்களில் பின்னணி அமைதியே இசையாக இருக்கும்.

மூவரும் கைக்கோர்த்து ஜானி படத்தில் வரும் ”என் வானிலே ஒரே வெண்ணிலா” பாட்டின் ஒவ்வொரு துளியையும் ஓவியமாகத் தீட்டி இருக்கிறார்கள்.

தமிழ்த் திரைப்பட வரலாற்றில் சில பாடல்கள் கவிதையாக
படமாக்கப்பட்டதில் இதுவும் ஒன்று.

எனக்குப் பிடித்த மற்றொரு பாடல் “காற்றுக்கென்ன வேலி” படம்:அவர்கள்.இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்.
பாடல் பற்றி சில (மீதியை வீடியோவில் அனுபவிக்கவும்)வார்த்தைகள் .....

தி.ஜானகிராமன் தன் கதைகளில் ஒவ்வொரு கணத்தின் துளியையும் இண்டு இடுக்கு விடாமல் விவரித்து நம்மைப் படுத்துவார்.அதேபோல் மகேந்திரனும்.

ஆரம்பமே கேமரா ஊர்ந்து தூரிகையால் ஓவியத்தை தீட்ட ஆரம்பிக்கும்போது சில்லிடுகிறது.இதில் காட்சியின் பின்னணி அதி அற்புதம்.இண்டோர் மற்றும் அவுட்டோர் என்று அலங்கரிக்கப்பட்ட பங்களாவின் ஹால் மற்றும் ஒரு குளிர்வாசஸ்தலம்.


அவுட்டோரில் ரஜனியின் ஒரு பிரேம் 1.22 உயிர்துடிப்பானது.stunning!
முதல் சரணத்தில் ”நீரோடை போலவே’ 1.33 -1.56 ஆரம்பித்து முடியும் வரை
ரஜினி,ஸ்ரீதேவி,பிரேமி மூவரும் வாழ்ந்திருக்கிறார்கள்.குறிப்பாக 1.46-1.47ல் கேமரா திரும்ப, படிக்கட்டில் கன்னத்தில் கைவைத்து உட்கார்ந்தபடி பிரேமி ஸ்ரீதேவியைப் பார்க்கும் (பெருமிதம்?) பார்வை யதார்த்தம்.

Hats off Mahendran and Ashok Kumar.

அடுத்து 1.56ல் ”நீராட வந்ததே என் மென்மை” என்று ஸ்ரீதேவி தன் குண்டு விழிகளில் எதையோ தேக்கி (காதல்?காமம்?)புன்சிரிப்போடு காட்டிவிட்டு தலைகுனிவது அட்டகாசம்.

3.26ல் வாசித்துக்கொண்டே பிரேமியை எட்டிப்பார்க்கும் இடம் ரொம்ப சுட்டி.

ஸ்ரீதேவியின் உடை இப்பாட்டில் தனிமொழியே பேசுகிறது.

இளையராஜாவின் வெஸ்டர்ன் கிளாசிகல் வயலின்/பியானோ இழைகள் பாட்டு முழுவதும் தென்றல் போல் வீசிக்கொண்டே இருக்கிறது.

மகேந்திரனின் முள்ளும் மலரும் படத்தில் வரும் செந்தாழம் பூவில் படமாக்கப்பட்ட விதம் ? அது ஒரு வகை அனுபவம்.


நீலப்பட நாயகியும் டோனியின் நாட் அவுட்டும்

$
0
0
யுகத்திற்கு யுகம் ஊருக்கு ஊர் தர்மங்களும் நியாயங்களும் மாறுபடும்.இதைத்தான் திரு.மார்கண்டே கட்ஜூ,சேர்மன்,பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா ஒரு விஷயத்தில் சொல்லி இருக்கிறார்.
மார்கண்டேய் கட்ஜூ
ரொம்பவும் மாறுபட்ட கருத்து.இதை ஒட்டித்தான் கருத்து வருகிறது.ஆங்கில தினசரியில் படித்தது.

சன்னி லியோன்-Sunny Leone(லிஒன்?) என்னும் நடிகை பஞ்சாபி அம்மா அப்பாவிற்குப் பிறந்தவர்.இந்தியாவில் படிக்கும்போது 11 வயதில் முதல் முத்தமும் 16 வயதில் கன்னித்தன்மையும் இழந்து அமெரிக்கா சென்றார்.


அங்கு Penthouse /Hustler போன்ற adult பத்திரிக்கைகளில் மாடல் தொழில் செய்துவிட்டு பிறகு பல வருடம் நீலப் படங்களில்(hardcore) நடித்து புகழ் பெற்றார்.லெஸ்பியன் பாத்திரத்தில்தான் நடிப்பேன் என்று அக்ரிமெண்ட் போட்டு நடித்தார். பின்னால் அதை மாற்றிக்கொண்டு தனக்கு பரிசம் போட்டவனுடன் ”வேறு”  பாத்திரங்களில் நடித்தார்.அதையும் பின்னால் மாற்றிக்கொண்டு எல்லோருடனும் நடித்தார்.

சில அவார்டும் (???) வாங்கி இருக்கிறார்.அவரே சொந்தமாக நீலப் படங்கள் எடுத்து வெற்றியும் பெற்றுள்ளார்.அவார்டு வாங்கின படத்த இந்தியாவுல யாராச்சும் பார்த்திருந்த நடிப்பு எப்படின்னு சொல்லுங்கப்பா.

பார்க்க விக்கிபீடியா.ரொம்ப சுவராசியமா இருக்கு.
Sunny Leone

சரி விஷயத்திற்கு வருவோம்.

இவர் இப்போது “Colors" என்னும் இந்திய டிவி சேனலில் ”பிக் பாஸ்” என்னும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுவருகிறார்.அதை தன்னுடைய வெப்சைட்டில் விளம்பரப்படுத்திக் கொள்கிறார் என்று இவர் மேல் ஒளிப்பரப்புத் துறை மற்றும் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவிற்கும் புகார் போய் இருக்கிறது.

கலர்ஸ் சேனல் இவரை வைத்து அவரின் வெப் சைட்டுக்கு விளம்பரம் கொடுக்கிறது என்பதுதான் தாத்பரியம்.

அதுபற்றி திரு.மார்கண்டே கட்ஜூ, சொல்வது:

”சன்னி பொருளீட்டுவது (நீலப்படங்களில் நடிப்பது)அங்கு(அமெரிக்காவில்)சட்டபூர்வமான தொழில்.ஆனால் இங்கு சட்டவிரோதம்.இந்தியாவில் அவர் இருக்கும்போது இந்திய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுத்தான் இருக்கிறார்.கடந்தகாலம் இல்லாத புனிதனும்,எதிர்காலம் இல்லாத பாவியும் கிடையாது.சன்னியின் கடந்த காலத்திற்காக அவரைத் தண்டிக்கக் கூடாது.
அம்பா பாலி
தேவதாசி அம்(பா)ராபாலியும்,மேரி மேக்டலின்னும் பிற்காலத்தில் புத்தருக்கும் ஏசுநாதருக்கும் பக்தையானர்கள்”
மேரி மேக்டலின்
_______________________________________________

பிரகாஷ்ராஜின் சொந்த தயாரிப்பில் உருவாகி வெளிவர இருக்கும் படம் “டோனி நாட் அவுட்”இது பெங்காலிப் படத்தின் தழுவலா?  பார்க்க யூ டூப்.




டோனி நாட் அவுட் முன்னோட்டம்:


அப்ப டோனி அவுட்டா?

பாண்டு,பொம்மை,அருண்மொழி,பரத நாட்டியம்

$
0
0
நடிகர் பாண்டு ஒரு நகைச்சுவை நடிகர் என்றுதான் பலருக்குத் தெரியும்.அவர் சிறந்த ஓவியர் என்பது எவ்வளவு பேருக்குத் தெரியும்.அவர் தன் ஓவியங்களை வைத்து கண்காட்சியெல்லாம் நடத்தி இருக்கிறார்.
பாண்டுவும் அவர் மகனும்
முக்கியமான விஷயம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி துறையின் லோகோவை வடிவமைத்தவர் பாண்டுதான்.கிழே படத்தில் உள்ள குடை லோகோவை வடிவமைத்து பத்தாயிரம் ரூபாய் பரிசு பெற்றவர் பல வருடங்களுக்கு முன்பு.

_______________________________________________________

இந்த வருடம் புத்தகக் கண்காட்சிக்கு போகவில்லை.போனவருடம் வாங்கிய புத்தகங்களே(நீண்ட நாவல்கள்) இன்னும் முடித்தப் பாடில்லை.எந்த ஒரு புத்தகமும் முழு மூச்சில் படிப்பதில்லை.திடீரென்று பத்தாவது பக்கத்தில் நிறுத்திவிட்டு அடுத்த புத்தகத்திற்குத் தாவுவது.

தாவும் புத்தகம் துளி கூட சம்பந்தம் இல்லாமல் இருக்க வேண்டும்.பார்ப்பவர்களுக்கு லூசுத்தனமாக இருக்கும். சத்தியமாக எனக்கு இது ஒரு ரிலாக்ஸேஷன் மாதிரி உள்ளது.தாவுதலில் சுவராஸ்யம் கெட்டும் போவதில்லை.

பள்ளி பருவத்திலும் தேர்வுக்குப் படிக்கும்போது சம்பந்தமே இல்லாமல் சட்டென்று தாவி வேறு ஒரு பாடம் படிப்பேன்.

அடுத்து வாங்குவதற்கு முன் வைப்பதற்கு இடம் யோசிக்க வேண்டி இருக்கிறது.
_______________________________________________________

இளையராஜாவின் இசை நிகழ்ச்சிப் பேட்டியில் புல்லாங்குழல் வித்தகர் அருண்மொழி(நெப்போலியன்) சொன்னது:



இதில் சில விஷயங்கள் தெளிவாகிறது:-

1.ரசிகன் அளவுக்கு சில படைப்பாளிகள் படைப்பில் ஒன்றுவதில்லை??? நான் படைத்தேன் என்னும் உளவியல்...?????????

2.படைப்பவனுக்கு படைப்பு தொழில்.ரசிகனுக்கு பொழுதுபோக்கு

3.காலம் கடந்து மிளிர்ந்து நிற்கும் படைப்புக்களை மறு உருவாக்கம் செய்ய முடியாது.

4.அருண்மொழி வேறு எந்த வெளி மெல்லிசைக் கச்சேரிகளுக்கு வாசிப்பதில்லை??
_______________________________________________________

பரத நாட்டியம் எனக்குப் பிடித்தமான ஒன்று.அதைப் பற்றி ஒன்றும் தெரியாது.அதில் உணர்ச்சிகள் பலவித பாவத்தில் அபிநயம் பிடிக்கப்படுவதால் ஒரு ஈர்ப்பு.மற்றும் வண்ணமயமான உடை அலங்காரம்.ரொம்ப ரொமாண்டிசைஸ் செய்யப்பட்ட கலை.

இதில் பிடிக்காதது ரொம்ப வயது முதிர்ந்த முகத்தில் சுருக்கம் விழுந்த நடனமணிகள் ஆடுவது.முக பாவங்கள் ரசிக்க முடியவில்லை.


தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் ஆயிரம் ஆண்டு கடந்ததை ஒட்டி ஆயிரம் பேர் பத்மா சுபரமணியன் தலைமையில் நாட்டியம் ஆடுகிறார்கள். அற்புதம்.


_______________________________________________________

"பொம்மை” என்று ஒரு க்ரைம் த்ரில்லர் படம் 1963 ரிலீஸ் ஆகியது.சிறு வயது,கல்லூரி பருவம் மற்றும் வேறு சந்தர்ப்பங்களில் இந்தப் படம் பார்த்திருக்கிறேன்.இப்படத்தை இயக்கியவர் வீணை மேதை எஸ்.பாலசந்தர்.இப்படத்திற்க்கு இசையும் இவரே.
இந்தப் படத்திற்க்கு தேவையான முக்கியமான விஷயம் மிஸ்ஸிங்.அது விறுவிறுப்பு மற்றும் சஸ்பென்ஸ்.இவரே முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றி நடிக்கிறார்.ஆனால் பொருந்தாத மிகை நடிப்பு.அந்த கால டிராமா.

பொம்மை நடந்துவருவதை வைத்து திகில் கிளப்பி இருக்கலாம்.ஒரு வேளை அந்தக் காலத்தில் விறுவிறுப்பாக இருந்திருக்குமோ?

படத்திற்கு தனியாக டைட்டில் கிடையாது.படம் முடிந்தவுடன்
இந்த சேரில் உட்கார்ந்தவாறே நடிகர்களை அறிமுகப்படுத்துவர்.
ஒவ்வொருவரும் மேக்கப் இல்லாமல் அவர்கள் தங்கள் பெயரைச் சொல்லுவார்கள்.
முதல் பெண் எல்.விஜயலஷ்மி வேட்டியில் இருப்பவர் வி.எஸ்.ராகவன் கடைசியில் சதன்
படங்கள் ஹாலிவுட் பாதிப்பில் இருக்கும்.பல புதுமைகளைப் புகுத்துவார்.பாடல்கள் இல்லாமல் “அந்த நாள்” படம் இயக்கினார்.”நடு இரவில்” “அவனா இவன்” போன்ற சஸ்பென்ஸ் படங்களை எடுத்தவர்.




கொத்து கொத்தாக இசையமைப்பாளர்கள்

$
0
0
பாடல் தளங்களுக்குப் பாட்டு கேட்கப் போனால் நிறைய புதுப்படங்கள் புது இசையமைப்பாளர்கள்.கடந்த 15 வருடம் கும்பல் கும்பலாக (200-300?) புது இசையமைப்பாளர்கள்,புது பாடகர்கள்.அம்மாடியோவ்!

ஒரு காலத்தில் வாய்ப்புக்குக்காக முட்டி மோத வேண்டும்.அவருக்கு இவர்,இவருக்கு அவர்தான் பின்னணி பாட வேண்டும் ரசிகர்கள் ஏமாற்றம் அடைவார்கள் அந்த நியதியெல்லாம் உடைந்து சுக்கு நூறு ஆகிவிட்டது.
படங்கள் மாறிவிட்டது.பாட்டுக்கள் மாறிவிட்டது.

இதில் யாரும் பிரபல ஸ்டார் படங்களுக்கு இசைஅமைக்கவில்லை.வாய்ப்பு கொடுக்கவும் விரும்பவில்லை.ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.இசை அமைத்து வெற்றிப்பெற்றால் விமோசனம் உண்டு.

கிழே 28 புது படங்கள்.ரிலீஸ்(ஊகம்) ஆனது ஆகாதது லிஸ்ட்.
இசையமையப்பாளர்கள் 28.28*5=140 பாடல்கள்.இதில் தீம் சாங் வேறு.யார் கேட்பார்கள்.எவ்வளவு பாட்டு கவனத்தைப் பெறும்.காலத்தை வெல்லும்.நன்றாக இசையமைக்கப்பட்டப் பாடல்கள் கும்பலில் நசுங்கி அட்ரஸ் இல்லாமல் ஆகிவிடும்.கொலைவெறி இசையமைப்பாளரின் மற்றப் பாடல்கள் என்ன ஆயிற்று.

அப்படி எல்லா பாடல்களையும் தொடர்ச்சியாக கேட்டால் பெரும்பாலான பாடல்கள் ஒரே சாயலில் இருக்கும். காரணம் லேட்டஸ்ட் டிரெண்டை மெயிண்டன் செய்வதால்.”வாகை சூடவா” ஜிப்ரான் கவனத்தைப் பெற்றார்.இவரின் அடுத்தப்படம்?

ரசிகர்கள் தீடிரென்று கேட்டு ஈர்ப்பாகி செல் காலர் டியூனாகத்தான் கேட்கிறார்கள்.இது ஒரு வகையில் ஆறுதலான விஷயம்.

இப்போதெல்லாம் பாடல்களைப் பார்க்கிறோம்(வீடியோ) கேட்பதில்லை.

கிழ் லிஸ்டில் கழுகு,முப்பொழுதும்,மயிலு பெரிய இசையமைப்பாளர்கள்.
  1. கழுகு-யுவன்
  2. 18 வயசு
  3. பேச்சியக்க மருமகன்
  4. சிவ பூஜைல கரடி
  5. பழைய வண்ணாரப்பேட்டை
  6. கனவுக் காதலன்
  7. உன்னதமானவன்
  8. மயிலு-ராஜா
  9. கிருஷ்ணவேணி பஞ்சாலை
  10. தலகோணம்
  11. கொண்டான்கொடுத்தான்
  12. உன்னோடு ஒரு நாள்
  13. அட்ட கத்தி
  14. மெரீனா
  15. உடும்பன்
  16. பெருமான்
  17. பாரி
  18. பிசினஸ் மேன்
  19. விருது நகர் சந்திப்பு
  20. முப்பொழுதும் கற்பனைகள்-ஜி.வி.
  21. மை
  22. உருமி
  23. கம்பன் கழகம்
  24. துள்ளி எழுந்தது காதல்
  25. மூணு
  26. ஆசாமி
  27. மழைக்காலம்
  28. தேனி மாவட்டம் 
எல்லாப்பாட்டையும் (8,20,3 தவிர)கேட்டு யாராவது feedback கொடுங்கப்பா.எஸ்கேப்!


பார்க்காமலே ஒரு காதல் delete

$
0
0




ஏதோ ஒரு நாட்டைச் சேர்ந்த
ஹேன்னா ஸோய்ஸ்
400 மில்லியன் டாலர்
சொத்துடன்
என்னைக்காதலிப்பதாக சொல்லி
மெயில் செய்தாள்
தவிர்க்கமுடியாத காரணங்களால்
அவள் காதலை
ஏற்றுக்கொள்ளமுடியவில்லை
டெலீட் செய்யும்போது
அவள் மீது கொஞ்சம் காதல்
இருக்கத்தான் செய்தது

தோனி - சினிமா விமர்சனம்

$
0
0
தோனி திரைப்படம் Shikshanachya Aaicha Gho என்ற மராத்திப் படத்தின் தாக்கம் என்று சொல்லப்படுகிறது.பிரகாஷ்ராஜின் இயக்கத்தில் முதல் படம்.வெற்றி பெற்றுவிட்டார்.சொல்ல வந்த விஷயத்தை பலமான காட்சி அமைப்புகளுடன் தெளிவாகச் சொல்லி இருக்கிறார்.
பிடிக்காத ஏட்டுப்படிப்பை பிள்ளைகளின் மண்டையில் ஏற்றி அவர்களின் மற்ற துறை ஆர்வத்தை கண்டுக்கொள்ளாமல் அவர்களை சீரழிப்பதுதான் கதை.

பிரகாஷ்ராஜ மிடில்கிளாஸ் மாதவனாக வந்து பிரச்சனையை மிடில் கிளாஸ்தனமாகவே கையாண்டு நொந்து நூலாகும் பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். நடிகராகவும் வெற்றி.அடுத்து பையன் ஆகாஷ் அற்புதம்.



முகத்தில் எப்போதும் ஒரு சோகம்.பக்கத்துவீட்டுக்காரியாக வரும் ராதிகா ஆப்தே கோலிவுட்டுக்குப் புது வரவு.தோற்றமும் அடுத்தவீட்டுப் பெண் தோற்றம்தான்.இந்தத் தோற்றத்தில் எல்லா படங்களிலும் நடிக்க முடியுமா. நடிக்கத்தான் விடுவார்களா.பாலிவுட்டில் வேறு மாதிரி இருக்கிறார்.


மொழி படத்தின் வசன கர்த்ததான் இதிலும்.ஞானவேல்.காமெடி வசனங்கள் கலக்கல்.படத்தின் மிகப் பெரிய ப்ளஸ்.எல்லா பிரச்சனைகளும் பாசீட்டிவாக முடிவதாக காட்டப்படுவது ஒரு புது முயற்சி.

இரண்டுமொழியில் எடுக்கப்பட்டு இருப்பதால் பாத்திரங்கள் இரண்டுக்கும் பேலன்ஸாக இல்லாமல் தெலுங்கு சாயல்.போலீஸ் ஸ்டேஷன் ஆபிஸ் எல்லாம் பளிச் பளிச்சென்று இருக்கிறது.கந்துவட்டிக்காரராக வருபவர் ஒட்டவே இல்லை.

கடைசி கால் படம் ஓவர் மிகை.விசுவின் அரட்டை அரங்கம் பார்ப்பது போல இருந்தது.

படத்தின் அடுத்த பலம் இளையராஜா. பின்னணி இசை படத்தோடு இசைந்துப் போகிறது.”விளையாட்ட படகோட்டி” பாடல் வைத்த இடம் அற்புதம்.



வங்கிக் கொள்ளை- எதிர்பாராத அதிர்ச்சி கிளைமாக்ஸ்

$
0
0
வழக்கமாக இது போன்ற குற்றங்களில் போலீஸ் குற்றவாளிகளைப் பிடிப்பார்கள்.பிடித்தவுடன் பிடிப்பட்ட பணத்தை மைசூர்பாக் போல் டேபிளில் அடுக்குவார்கள்.பின் பக்கம் குற்றவாளிகள் முகத்தில் துண்டு அல்லது முகமூடி அணிந்து தலைகுனிந்து நிற்க போலீஸ்காரர்கள் மிடுக்காக
போஸ் கொடுப்பார்கள்.கமிஷனர் அல்லது எஸ்பி பேட்டிக்கொடுப்பார்.

சேனல்கள் இதையே மாறிமாறி கோழிகூவும் வரை காட்டிக்கொண்டே இருப்பார்கள்.எப்போது டிவியை ஆன் செய்தாலும் இதுதான் வரும்.
ஆனால் நேற்று வங்கிக் கொள்ளையர்கள் ஐந்து பேர் ரத்தம்தெறிக்க சுட்டக்கொல்லப்பட்டது அதிர்ச்சி கிளைமாக்ஸ்.சென்னை மக்கள் எதிரே பார்க்கவில்லை.சேனல்களும் மக்களின் நாடி அறிந்து அடக்கி வாசித்தன.

யோசித்தால் இதில் முக்கியமான செய்தி ஒன்று சொல்லப்படுகிறது.அது சமீபத்தில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டுக்கொண்டிருக்கும் வட இந்திய குற்றவாளி கும்பலுக்கா?

அடுத்த விஷயம்.....
எந்த குற்றவாளியுமே தனக்குத்தெரியாமல் ஏதாவொறு
தடயத்தை குற்றம் நடந்த இடத்தில் விட்டுச் செல்வான் என்பது
எழுதப்படாத விதி.இதிலும் தவறாமல் நடந்திருக்கிறது.வீடியோவில் மாட்டிக்கொண்டது.

கடந்த பல வருடங்களாக பீஹார்,சட்டீஸ்கர் மற்றும் வேறு மாநிலத்தவர்கள் இங்கு பிழைப்புக்காக வந்து கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கிறார்கள்.கண்கூடாகப் பார்க்கிறேன்.ஆனால் இந்த வட இந்திய வங்கிக் கொள்ளையர்கள் அமெச்சூர்த்தனமாக் ஏதோ செய்துவிட்டு ரத்தம் கக்கி இறந்துப்போனார்கள். தேவையா?

ஆ.. இவங்களா இப்பத்தானே!லாஜிக் லஞ்சம்?எட்டுக்கால் பூச்சி கேள்விகள்

$
0
0
வாழ்க்கையில் இந்த திடுதிப் சந்தோஷம் ஏதாவொறு விஷயத்தில் நம்முன் திடுதிப்பென்று தோன்றி பரவசப்படுத்தும்.உள்ளுணர்வில் அதைப் பற்றி திடுதிப்பென்று உதிக்க அதே சமயத்தில் நம் கண் முன்னால் நடக்கவும் செய்தால் விவரிக்க முடியாத குஷி.

போன(11-03-12) ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட உள்ளுணர்வு முன்னால் தூர்தர்ஷன் சினிமா நிகழ்ச்சியும் அதை நடத்திய பெண்ணைப் பற்றியும்தான்.அதை நினைத்தவாறு டிவியை ஆன் செய்ய விஜய் டிவியில் (நீயா நானா) கைத்தட்டல் ஒலி அதனூடே நடந்துவருபவர் சற்று முன் என் உள்ளுணர்வில் வந்த தூர்தர்ஷன் ”மெட்ரோ ப்ரியா”.

மார்க்கெட் போய் கல்யாணம் ஆகி குடும்பம நடத்தும் தமிழ் நடிகைகளின் அதே உப்பல் கன்னம் உடம்பு தொகுப்பாளினிக்கும்.


அப்போது ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு சேனல்.இவரும் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு  தமிழ் டிடி மெட்ரோ டூவின் முதல்(?) பெண் தொகுப்பாளினி.ஒரு மணி நேர நிகழ்ச்சி என்று நினைக்கிறேன்.

கையை ஆட்டி ஆட்டி தொகுக்கும் ஸ்டைலை அப்பவே கொண்டு வந்தவர்.துடிப்பாக பேசுவார்.இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.பிறகு லாவண்யா என்ற பெண்ணை வைத்து (பாட்டு பாடவா கதாநாயகி) இதே மாதிரி முயற்சித்தார்கள் ஆனால் வெற்றி அடையவில்லை.

இப்போது எவ்வளவு சேனல்கள் எவ்வளவு கை ஆட்டல்கள்/தலையசைத்தல்கள்/கத்தல்கள் ... தோன்றி மறைந்துவிடுகிறார்கள்.காரணம் இப்போது supply is more and demand is less. அப்போ Demand is more because supply is less.

அந்த நிகழ்ச்சியைப் பார்க்க:
டிவி பார்ப்பதில் வீட்டில் சண்டை
________________________________________
லாஜிக் லஞ்சம்?

சமீபத்தில் ஆரணி அரசு ஆசிரியர் பணிக்கு பன்னிரெண்டு,பத்து,எட்டு என்று லஞ்சம் கொடுத்து நிறைய பேர் வேலைக்குச் சேர்ந்துள்ளார்கள்.(வாங்கிய ஹெட்மாஸ்டர் போலீசிடம் சிக்கிவிட்டார்)ரொம்ப வருடமாகவே நடக்கிறது. கால் காசனாலும் கவர்மெண்ட்வேலை அதன் பயன்கள் என்றாலும் டீச்சர்கள் லஞ்சம் கொடுப்பதில் லாஜிக் புரியவில்லை.

ஆர்டிஓ,பத்திரப்பதிவு,தாலுக்கா ஆபிஸ் இத்யாதி வேலைகள் என்றால் கொடுத்த லஞ்சத்தை மீட்டு எடுக்க வழி இருக்கிறது.டீச்சர் வேலையில்?இதை நேர்மையாக சம்பாதித்து மீட்பதற்கே 6 அல்லது 7 வருடம் ஆகாது? அதுவும் இந்த கேசில் 5000 அல்லது 6000தான் சம்பளம் வாங்குகிறார்களாம்.

ஒரு வேளை இவர்கள் ஹெட்மாஸ்டர் ஆகி மீட்டு எடுப்பார்களோ?

புரியலா ...தெரிஞ்சா சொல்லுங்க!
________________________________________
எட்டுக்கால் பூச்சி கேள்விகள்


16 பூச்சிக் காலுக்கு எத்தனை கால்?
சூர்யா நடத்தும் “நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி” யை “எல்லோரும் 6.40 லட்சம் வரை வெல்லலாம்” என்று கிண்டல் செய்யப்படுகிறது.ஏன் என்றால்  6.40 வரை கேட்பதெல்லாம் “எட்டுக்கால் பூச்சி” (எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்கள்)கேள்விகள்.

ஏன்? நிறைய பார்வையாளர்களை ஈர்க்க வேண்டும்.நிறைய
பார்வையாளர்கள் நிறைய விளம்பரம். நமக்கு இருக்கும் பொது அறிவுக்கு பிபிசி லெவலில் கேள்விகள் கேட்க முடியாது.”அச்சு..அச்சு..” என்றால் 1. இருமல் 2.கொட்டாவி 3.தும்மல் 4.விக்கல் என்று கேட்டு பார்வையாளர்களை ஈர்க்க வேண்டும்.

மேலும்....

இது குவிஸ் கம் சூப்பர் சிங்கர் கம் கதையல்ல நிஜம் கம் நீயா நானா கம் ரியாலிடி ஷோவாக நடத்துகிறார்கள்.”அப்பாவுக்கு நெஞ்சு வலி தேவலயா?” என்று கேட்டுவிட்டு கேள்வியை சூர்யா ஆரம்பிக்கிறார். கலந்துக்கொள்ளும் சில இளம் பெண்கள் முதலில் ஜொள்ளை துடைத்துக்கொண்டுதான் சேரில் உட்காருகிறார்கள்.
நிகழ்ச்சியின் அரங்கம்,கலர்,இசை,லைட்டிங் எல்லாம் அட்டகாசம். ரொம்ப கிராண்ட்.Professional to the core. அசட்டுத்தனம் இல்லை.

கேபிசியின் டெம்பிளேட் பார்மட்தானே.

கையில் ஒரு கோடி ஆர் யூ ரெடி -சன் டிவி குவிஸ்


பணம் என்றால் டெட் பாடி ஆல்சோ ரெடிஎன்ற சித்தாந்தத்தில் இதுவும் வருவதால் பார்வையாளவர்கள் வாய் பிளந்து கலந்துக்கொள்ள தூண்டப்படுகிறது.கையில் அள்ள முடியாத கட்டுகட்டாக பணம்,பெண் செக்யூரிட்டிகள், ஏழு கேள்விகள் என்று பணத்தைத் துரத்திக்கொண்டு போகும்விளையாட்டு.

ஏழு கேள்விவரை விளையாட வேண்டும்.போதும்பா என்று கழட்டிக்கொள்ள முடியாது.சுலபமாக இருந்தாலும் புத்திசாலித்தனமாக விளையாட வேண்டும். இந்த நிகழ்ச்சி எனக்குப்பிடித்திருக்கிறது.

ஆறு கேள்விகள் வரை ஒரு கோடியை விடாமல் ஜெயித்துவிட்டு ஏழாவது கேள்வியில் தவறினால் ஒரு கோடி ஊத்தி மூடிக்கொண்டுவிடும்.

தாங்கமுடியாது.ஏழாவது பதில் தப்பாக இருக்கக்கூடாவே கூடாது. ஆப்ஷனும் கிடையாது. ஆனால் தோற்றால் ஆறுதலாக சன் டிவியின் ஒரு லட்சம் உண்டு.



DTS கர்ணா..நீயும் நானுமா!என்டிஆர் டப்பிங் வாய்ஸ்

$
0
0
அப்போது கர்ணன்,வீ.பா.கட்டபொம்மன்,ஆ.ஒருவன்,காதலிக்க நேரமில்லை, இத்யாதிகள் எல்லாம் ஒரு cult படம் ஆக இருந்தது.ஒரிஜினல் ரீலீஸ் முடிந்து பல மாதங்கள் கழித்து ‘புத்தம் புதிய காப்பி” “கண்டிப்பாக ஒரு வாரம் மட்டும்” “கடைசி இரண்டு நாள்” ” இன்றே கடைசி” “வைகுண்ட ஏகாதேசியில் இத்துடன்” ”ஏதோவை முன்னிட்டு” என்று தியேட்டர்களில் ரீரிலிஸ் செய்யப்படும். ஒவ்வொரு ரீலிசுக்கு கூட்டம் முண்டியடிக்கும்.

முக்கியமாக இளைஞர்கள் கூட்டம்.

பழைய கர்ணன்
முதல் காரணம் சிம்ம குரலோன் சிவாஜி!இரண்டாவது இதிகாசம் அதுவும் கர்ணனைப் பற்றி. அடுத்து அப்போது ஸ்பெஷல் எபக்ட்ஸ் கம்புயூட்ட்டர் கிராபிக்ஸ் இல்லாமல் சிரத்தையோடு எடுத்த பிரம்மாண்டபடம்.

விஸ்வநாதன் ராமமூர்த்தியின் அட்டகாசமான உயிர்துடிப்பான இசை மற்றும் பாடல்கள்.

பலவித சரித்திர புராண இதிகாச கதாபாத்திரங்களை சிவாஜியின் பிம்பத்தில்தான் ஒரு தலைமுறை உருவகபடுத்தி உள்ளோம்.கர்ணன் பெயரை உச்சரிக்கும்போதே சிவாஜியின் கம்பிரமான உருவம்தான் கண்முன் தோன்றும்.” இரவும் நிலவும்” பாட்டின் ஒரு இடத்தில் சிவாஜியின் நடைக்கு விசில் பறக்கும்.

இந்தப் பாட்டின் சில வரிகள் இலக்கிய நயத்தோடு இருந்தாலும் டபுள் மீனிங்கும் இருக்கு என்று அப்போதைய யூத்துகள் கிசுகிசுப்பார்கள்.(சுபாங்கி கர்ணன் மனைவி)

சுபாங்கி: மல்லிகைப் பஞ்சணை விரிக்கட்டுமே
கர்ணன்:  மங்கையின் தாமரை சிரிக்கட்டுமே.... அங்கு
சுபாங்கி: இல்லையென்னாமல் கொடுக்கட்டுமே
கர்ணன்: நெஞ்சில் இருக்கின்றவரையில் எடுக்கட்டுமே

இப்போது இந்த ஏற்கனவே கம்பீரக் கர்ணனை சினிமாஸ்கோப்பில் உப்ப வைத்து(blow up)  DTSல் இசையை செலுத்தி மெருகேத்தி ரிலீஸ் செய்து இருக்கிறார்கள்.சிவாஜி குடும்பத்தார்.புதிய தலைமுறை பார்க்கவேண்டும் என்ற நோக்கத்தில்.

DTS  Karnan
பல முறை டிவி சேனல்களில் ஓடிற்று.அப்போது புதிய தலைமுறை பார்த்ததா?காலம் மாறிவிட்டது.ரசனைகளும் மாறிவிட்டது.நேரம்?பொறுமை?????

எனக்கே கூட இந்த டிடிஎஸ் கர்ணனைப் போய் பார்ப்பதைவிட சின்ன வயதில் பார்த்து அந்த நினைவில் ஓடும் கர்ணன்தான் பிடித்திருக்கிறது.

இந்தக் கர்ணன் வெளி வந்ததும்தான் ஒரு விஷயம் நேற்று எனக்குத் தெரிய வந்தது.அது என் டிஆர் படத்தில் சொந்தக்குரல் கிடையாது.டப்பிங் குரல் என்று.சின்னவயசில் அவர்(கிருஷ்ணர் )தமிழ் குரலாக உள்வாங்கி நேற்றுவரை அதே நினைப்பு.

அவருக்கு டப்பிங் பேசியவர் கே.வி.சினுவாசன் என்பவர்.போட்டோவில் ஒய்ஜி மகேந்திரனுடன் இருக்கும் முதியவர்(92).சிவாஜி கணேசனை ஒரு டிராமா கம்பெனிக்கு சிபாரிசு செய்தவர். சிவாஜியால் அய்யர் என்று செல்லமாக அழைக்கப்பட்டவர்.

இவரின் சுவராசியமான பேட்டி பார்க்கவேண்டிய ஒன்று.

NTR Voice - K V Srinivasan Exclusive interview


மெல்லிசை ஹிம்சைகள்/கேர்ள் பிரெண்ட் மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ்

$
0
0
மெல்லிசைக் கச்சேரிகளுக்கு நான் செல்லுவது இல்லை.திறந்த அல்லது மூடிய (Closed hall)அரங்கு எல்லா கச்சேரிகளும் இதில் அடக்கம். முக்கியமாக மூடிய சின்ன கல்யாண மண்டபங்களில் ரிசப்ஷனில் வைக்கப்படும் கச்சேரிகள்.அதுவும் லோக்கல் இசைக் குழுக்கள் இசைக்கும் இசை?பட்டீஸ் டிட்டீஸ் என்று ட்ரம்ஸ்ஸூம் கொய்ங் என்ற கீபோர்ட்டு ஒலியும்.இதில் பாடுபவர்கள் அமுங்கிப்போய் ஈன ஸ்வரத்தில் கேட்கும்.

முக்கிய காரணம் இசை இரைச்சல் ஹிம்சை.ஒலி அமைப்புகள் சரியாக இல்லாமை.அதற்கேற்றார் போல் மண்டபங்கள் வடிவமைப்பதில்லை.மேடையில் உட்காரும் ஆர்கெஸ்ட்ரா குழு ஷேர் ஆட்டோவில் உட்காருவது மாதிரி நெருக்கி அடித்து உட்கார்ந்து இசைப்பது.மறுஉருவாக்கத்தில் சுத்தமாக லட்சணம் இல்லாமல் இருப்பது.

அதன் நடுவில் பாடகி-பாடகர்கள்(பின்னணியில் ஓவர் சவுண்டு)பாடுவது சோகம்.சத்தியமாக ரசித்துப் பாடுவது மாதிரி தெரியவில்லை.இசைக் குழுக்களுக்கும் வேறு வழியில்லை.வயிற்றுப் பிழைப்பு.

இப்படி கேட்பது கண்டிப்பாக ஆரோக்கியமும் இல்லை.

அடுத்து அசல் அசல்தான் அது பழசோ புதுசோ நாம் ரசித்து அனுபவித்து வாழ்ந்த பாடல்களை அதன் ஒரிஜனல் இசைக்கருவிகளுடன் இசைக்கப்படாமல் கேட்டால் என்னவோ மாதிரி இருக்கிறது.அதுவும் ராஜாவின் பாடல்கள் சத்தியமாக அவராலேயே மீண்டும் உருவாக்க முடியாது.

ஏதோ வைக்கவேண்டுமே என்று திருமணங்களில் இசைக்கச்சேரி வைக்கப்படுகிறது.இதில் மாப்பிள்ளை-பெண் வீட்டுக்காரர்களின் பந்தாதான் இசை மேல் காதல் இல்லை.

தவிர்க்க முடியாவிட்டால் வெளியே வெகு தூரத்தில் நின்றுகொள்வேன்.இரைச்சல் குறைந்து ஒரளவுக்கு ரசிக்கலாம்.

எப்படி இருக்க வேண்டும்?பின்னணியில் ரம்யமாக மெல்லிசை ”மெலிதாக”இசைத்தபடி இருக்க பார்வையாளர்கள் கல்யாண குஷி காட்சிகளை ரசித்தவாறு இருக்க வேண்டும்.ரசித்தவாறே உறவுகளிடம் உரையாடலாம்.

வீணை வித்தகி ரேவதி கிருஷ்ணா
 

பாடல்:காலையும் நீயே மாலையும் நீயே படம்: தேன் நிலவு

இதே வீணையில் இவர் "மன்மதா ராசா” பாட்டும் வாசித்துள்ளார்.”உன் சமயலறையில்” பாட்டும் அருமை.

நான் விரும்பும் உண்மையான மெல்லிசை “ மெலிதான இசை”. சினிமா அல்லது கர்நாடக கீர்த்தனைகளை ஒற்றை இசைக் கருவிகளில் (புல்லாங்குழல்/வயலின்/சிந்த்,வீணை) வாசிப்பது.முக்கியமாக பின்னணியில் தாளக் கருவிகள் தபேலா,டோலக்,மிருதங்கம்.ஓவர் சவுண்டு இல்லாமல் மற்ற இசைக் கருவிகள் இருக்கலாம்.

இதுதான் மூடிய கல்யாண மண்டபங்களுக்குத் தோதுபட்டு வரும்.இல்லாவிட்டால் சத்தம்தான்.மார்பு கூடு அதிரும்.இல்லாவிட்டால் 1965க்கு முன் உள்ள பாடல்களை இசைக்கலாம். இசைக் கருவிகள் குறைவு.

சமீபத்தில் கலந்துக்கொண்ட திருமணத்தில் மெல்லிசைக் கச்சேரி.ஆச்சர்யம் பிளஸ் அதிர்ச்சி.(திருமண பத்திரிக்கையில் இதைப் பற்றி இல்லை) காரணம் இதை ஒட்டிய (annexe) இன்னொரு மண்டபம் தியான மண்டபம் கம் கோவில்.
அதில் பக்தி பஜனை நடக்கிறது.இதில் மெல்லிசை.சபாஷ் சரியான போட்டி.ஸ்டார்ட் மியூசிக்!

எஸ்கேப்...! எங்க? அவுட் சைட் டிஸ்டென்ஸ் ஸ்டாண்டிங்தான்.

கேர்ள் பிரெண்ட் மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ்


தாம்பரம் மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் தன்னுடைய 75 வருடத்தைக் கொண்டாட இருக்கிறது.இப்போது பொறியியல் கல்லூரிகளுக்கு மவுசு கூடி கலைக் கல்லூரிகள் மங்கிவிட்டன.அப்போது கலைக் கல்லூரிகளிலேயே இது தனித்தன்மை கொண்டது.

ஒன்று கோ-எஜூகேஷன் சிஸ்டம்.இரண்டு இதன் இயற்கை சூழல்.


இப்போது தெரியாது ஆனால் அதன் அன்றைய தோற்றத்தை நினைக்கும்போது சிலிர்க்கிறது.இருபுறமும் மரங்கள் அடர்ந்து பொதிந்த இயற்கையின் ஊடே கல்லூரி வளாகம்.... சர்வகலாசாலை?உள்ளே நுழைந்து ஒரு முறை பார்த்து வருவதே பெரிய பாக்கியம்.ஆறு மாதம் (???)படித்த அனுபவம் உண்டு.ஈஸ்ட் இண்டியா காலத்தில் கட்டப்பட்ட கல்லூரி.

ஒரே மாதிரி தோற்றத்தில் சேலையூர்,செயிண்ட் தாமஸ், பிஷப் ஹீபர் என்று மூன்று ஹாஸ்டல்கள்.கண்ணைக் கட்டி விட்டால் அடையாளம் காண்பது கஷ்டம்.

மாணவ மாணவிகள் ஜோடி ஜோடியாக சுதந்திரமாக உள்ளே வளைய வருவார்கள்.கண்டிப்பு கிடையாது.படிப்பதை விட கேர்ள்பிரண்ட்ஸ் கிடைக்கும் என்று சேர்வதில் நிறைய பையன்கள் துடிப்பார்கள்.அப்போது கேர்ள் பிரெண்ட்ஸ் இப்போது “பிகர உசார் பண்ணுவது”.

கோ எஜூகேஷன் என்பதால் பெற்றோர்கள் சேர்ப்பதற்கு தயங்குவார்கள்.  இங்கு படித்துப் பட்டம் பெற்ற மிடில்கிளாஸ் பெண்களுக்கு மாப்பிள்ளை சற்று தயக்கத்துடன்தான் கிடைப்பார்கள்.

பாவாடை தாவணி(half saree) பெண்களுடன் மார்டன் உடை பெண்களும் சேர்ந்து படித்த அபூர்வ காலேஜ். ஜீன்ஸ் அணிந்த பெண்களை முதன் முதலில் பார்த்தது இங்குதான்.வெளி நாட்டு மாணவி/மாணவர்கள் இங்கு பார்க்கலாம். புத்த பிட்சுக்கள் நிறைய பார்த்திருக்கிறேன்.


கலைக் கல்லூரிதான் ஆனால் இதில் படித்து பட்டம் பெற்ற ஜாம்பவான்கள் பலர் பெரிய லெவலில் இருக்கிறார்கள்.சிபிஎம் கட்சி பிரகாஷ் கரத் முன்னாள் மாணவர்.மறைமலையடிகள் மற்றும் பரிதிமாற்கலைஞர் இருவரும் ஆசிரியர்களாக பணியாற்றினார்கள்.

இங்கு நிதி நிர்வாகம் செய்பவரை “Bursar" என்பார்கள். இது bursa(purse) என்கிற லத்தீன் சொல்லின் மூலம். முதன் முதலில் காண்டீன் என்பதை கேப்டீரியா என்றுதான்(cafeteria) இங்கு மாணவர்கள் ஸ்டைலாக சொல்வார்கள்.

ஏன் கேட்கிறது? ஏன் வாட்டுது? ஆனால் அதுவும்...

$
0
0

இளையராஜாவின் இசை மொழி ஆத்மார்த்தமானது.ஆழமாக மனதை உழுவுபவை.நினைவுகளில் அலையடித்துக்கொண்டே இருக்கும்.

இப்படியாக என்னை  உணர்வுபூர்வமாக உலுக்கி எடுத்தப்பாடல் “என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்”  படம்: ரோசாப்பூ ரவிக்கைக்காரி -1979.பாடியவர்: வாணிஜெயராம.பாடல்: கங்கை அமரன் டைரக்டர்: தேவராஜ் மோகன்

32 வருடங்களுக்கு முன்  குட்டி ரேடியோவில் விரும்பிக் கேட்ட பல நேயர்களுடன் நானும் ஒரு நேயர்.அதுவும் இரவு நேரத்தில் தனிமையில கேட்டது. பிறகு  பாடலின் இசைமொழி ஏற்படுத்திய தாக்கம்  எதையோ யாரையோ தரிசித்தது போல ஒரு உணர்வு.ஒரு ஏக்க ஒரு தொலைந்துபோன உணர்வு.

முதல் ஐந்து வருடங்களில்(1979-84)  வயது காராணமாய் தாக்கிய பாடலின் இசைமொழி தெரியாமல்  ”ரொம்ப  சாஃப்ட் மெலடி” என்றுதான் மனதிற்குள் நினைத்துக்கொள்வேன்.பின்னாளில் தெரியவந்தது இதன் விஸ்வரூபம்.


பாடல் காட்சி: 
திருமணமான கிராமத்துப் பெண் வேற ஒரு ஆணுடன் (அந்த ஊர் மைனர்)
 ” என் உள்ளில் ஏதோ ஏங்கும் கீதம் ஏன் கேட்கிறது....ஏன் வாட்டுது...” என்று கேட்டுவிட்டு"ஆனால் அதுவும் ஆனந்தம்" என்று ஒரு சலனத்தில் சஞ்சலத்தில்  பதிலளித்தவாறே கிராம இயற்கை சூழ்நிலையில் பைக்கில் பயணித்து பாடலின் முடிவில் அப்பாவித்தனமாக  தன்னை இழக்கிறாள்.

இந்த இசையின் அடி நாதம் இதில் வரும் இரு கதாபாத்திரங்கள் பயணம் செய்தபடியே மெளனமாக பேசும் மொழி.இளையராஜா சிலுப்பி சிலுப்பி உணர்ச்சிகளை  எடுத்து  மொழிந்துள்ளார்.

பாடலும் காட்சிக்கு ஏற்றவாரு புனையப்பட்டுள்ளது.இசையுடன் இணைந்து மொழியை பேசுகிறது. காட்சியும் ஒன்றி போகிறது.


பாடல்  இதமான  தபலா தாளத்துடன்   பைக்கில் இருவருடன்  பயணிக்கிறது. தாளம் பயணிக்கும் உணர்வைத் தருகிறது.எதையோ நோக்கி எதுவும் புரியாமல்  புரிந்தும் ஒரு பயணம்.

1.20 -1.33 சாரங்கியின் ஓலம் கவித்துவமானது.ஏதோ ஒரு வலி மேல் பூச்சாக ஓடுவதை உணரமுடிகிறது.

அடுத்து 2.50 - 3.15 காட்சியும் இசையின் மொழியும் ஒன்றை ஒன்று போட்டி போடுகிறது.விட்டு விட்டு ஒளிரும் மர நிழல்களின் ஊடே பயணிக்கும் பைக்கும் பயணிப்பவர்களின் உடல் மொழியும் பின்னணியில் அமானுஷ்யமான இசை மொழியும் உயிர் துடிப்பானது.சற்று திகிலாகவும் இருக்கிறது.

மேற்சொன்ன மொழி தமிழ் திரை இசைக்குப்புதிது.

இப்படி போய்க்கொண்டிருக்கும் இசையின் மொழி........

3.16 -3.30ல் அமானுஷ்ய இசை மொழி சகஜமாகி சிதார்-வயலின் -சிதார்-வயலின் -சிதார்-வயலின் மாறி மாறி  பின்னிப் பிணைந்து குழைந்து வர காட்சியில்  பெயர் தெரியாத  மணமில்லாத பூத்திருக்கும் காட்டுச்செடிகளிடையே ரோசாப்பூ ரவிக்கைக்காரி நடந்துவருவது கவிதை.

ஒளிப்பதிவாளருக்குப் பாராட்டுக்கள்.இந்தப் பாடல் “மதுவந்தி” என்ற ராகத்தில் புனையப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.வாணிஜெயராம் உணர்ச்சிகளைக் குழைத்துப்பாடி உள்ளார்.


”மஞ்சளை பூசிய மேகங்களே” வரிகள் வரும்போது  உடனே  காட்சி மஞ்சள் ஆவதுதான்  ரொம்ப  ”லோக்கல்”

டெயில் பீஸ்: 
இப்போது பல வித இசைத் தளங்களை கடந்து வந்துள்ளோம்.அதில் ராஜாவின் இசையிலேயே பல வித கட்டங்களை கடந்தும் வந்தாயிற்று.யோசித்துப் பாருங்கள் 31 வருடங்களுக்கு முன் மேற்கண்ட பாடலின் இசை என்ன மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று.

டைரக்டர்  பாட்டை உள் வாங்கி வெற்றிகரமாக படமாக்கி உள்ளார்.


நித்தியானந்தா,மகான்,சாமியார்,பீடாதிபதி,பாபா,குருஜி பின்னே துறவும்

$
0
0
பல பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் துறவி என்றால் எல்லாவற்றையும் துறந்து தன்னைத்தானே அறிந்து (இதுதான் அது. அதுதான் இது) உடம்புலிருந்து விடுபட்டு மக்களிடமிருந்து விலகி பிரபஞ்சத்தில் ஐக்கியமாதல்தான்.இது ஒரு நிலை.முக்கியமாக “நான் யார்” என்பதை அறிந்தவர்கள்.

(”நானார்? என் உள்ளமார்? ஞானங்களார்? என்னை யாரறிவார் வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல்”) - திருவாசகம்

இப்படி விடுபடுவன் “சீன்” அல்லது “பில்ட் அப்” கொடுத்து பிரபஞ்சத்தில் ஐக்கியமாவதில்லை.அதைப் பற்றியும் கவலைப்பட்டதும் இல்லை.ஊர் பேர் தெரியாமல் தன்னை அறிந்தார்கள்.

18ஆம் நூற்றாண்டில் வந்த அருட்பெருஞ் ஜோதி வள்ளலார் சம்பிராதாயத்திலிருந்து சற்று விலகி காவி தவிர்த்து எளிமையான வெள்ளுடை உடுத்தி மனதில் துறவு பூண்டு மக்களை சாதி,சமய பேதங்களற்ற மற்றும் புலால் தவிர்த்து உயிர்களிடத்து அன்பு செலுத்தும் “சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை” பாதையில் ”என் வழி தனி வழி” என்று கவுன்சிலிங் செய்து அழைத்துச்செல்ல முயற்சித்தார்.

மக்கள் ” மன்னிக்கவும் வள்ளளார் ஸ்வாமிகளே! உங்களின் புதுக் கடையில் எல்லாம் புதுசா இருக்கு.செட் ஆக மாட்டேங்குது.அலர்ஜியா இருக்கு” என்று முகம் சுருக்கினார்கள்.

வள்ளளார் பதிலுக்கு “ கடைவிரித்தேன் கொள்வாரில்லை” என்று வருத்தப்பட்டு கடையை மூடினார்.மக்கள் சந்தோஷமானார்கள்.

இப்படி தன்னைத்தானே அறிந்த துறவிகள்/யோகிகள் ஆண்டுகள் கடந்து சாமியார்,மகான்,பீடாதிபதி,ஜகத்குரு,சன்னிதானம்,அருட் தந்தை,பாபா,குருஜி, சத்குருஎன்று பலவித ரூபங்களில் போலிகள் நிறைந்து அசல்கள் குறைந்து “தன்னைத் தானே அறிதலை” ரிஜிஸ்டர்டு ஆபிஸ்,பிரான்ச் ஆபிஸ்,மார்க்கெட்டிங் ஆபிஸ், வெப் சைட்,டிவிட்டர்,ஈமெயில்,கூகுள்பிளஸ் என்று விரிவுபடுத்தினார்கள். ஆபிசில் தவறாமல் 2 டன் ஸ்பிலிட் ஏசி வைத்துக்கொண்டார்கள்.

ஜாதிக்கொரு சாமியார் அவதாரம் எடுத்து உலகத்தை உய்விக்கப் போவதாக அருள்வாக்கு கொடுத்தார்கள்.

பலவித கெட் அப்புகளில் வந்து பிரபஞ்சத்தில் “போஸ்” கொடுத்து ஐக்கியம் செய்துகொண்டார்கள். மக்கள் “ இவர்களை அறிந்துக்கொண்டார்கள்”.

மக்களுக்கு எளிதான ஆன்மிகப்பாதையை காட்டி அழைத்துச்செல்லாமல் லூசுத்தனமாக ஏதேதோ செய்து“லூசுப் பையன்” ஆனார்கள்.

சின்ன வயதில் நான் பார்த்து ஆச்சரியப்பட்ட மகான்/சித்தர்/யோகி பெயர் தெரியாத ஒருவர்.பிரம்மச்சாரியான அவர் திடீரென்று ஒரு நாள் துறவு பூண்டு காணாமல் போனார்.ஏன்? தான் இருக்கும் இடம் மக்கள் அறிந்தால் தன்னை வைத்து பிசினஸ் செய்வார்கள் என்றுதான்.

ஆனால் திடீரென்று தோன்றுவார் சாலையில் பல்லாவரம் மலைக்கருகில்.புன்னகைத்தவாறே யாரையும் சட்டை செய்யாமல் நடப்பார்.”அருள் வாக்கிற்காக” மக்கள் துரத்துவார்கள்.மேலே கை காட்டுவார்.அவ்வளவுதான்.

சில வருடங்கள் கழித்து அவரின் உடல் தாம்பரம்/சிட்லபாக்கம் அருகே காட்டுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இறந்துபோய் 4-5 நாள் ஆகியும் அழுகாமல் இருந்தது. ஆச்சரியம்!

ஒரு வேளை ஸ்பிலிட் ஏசியில் இருந்திருந்தார் அழுகி இருக்குமோ?

 இப்படி “அறியாமை”யில் முழுகிக் கிடக்கும் சாமியார்களை மக்கள்தான் சரியான பாதைக்கு அழைத்துச்செல்ல வேண்டும்.


பள்ளிக்கருகில் எரிந்த பிணங்கள்

$
0
0
பள்ளிக்கருகில் அல்லது கோவிலுக்கருகில்  டாஸ்மாக் இருக்கிறது என்று மக்கள் அடிக்கடி  புலம்புவதையும் போராடுவதையும் பேப்பரிலும் டிவியிலும் படிக்கிறோம் பார்க்கிறோம்.ஆனால் என் பள்ளிக்கருகில் டாஸ்மாக் இல்லை சுடுகாடு இருந்தது.ரெண்டும் ஒண்ணுதான்????


சுடுகாட்டுக்கருகில்பள்ளி இருக்கிறதே என்று யாராவது அப்போது புலம்பினார்களா?படித்த பள்ளிக்கருகில் ரொம்ப ஆக்டிவான சுடுகாடு.நினைத்தால் deadly ஆக இருக்கிறது.

வெகு தூரத்தில், முக்கால்வாசி மதியத்தில்,” டகர டகர டகர டகர...”என்று பொடிப்பொடியாக சாவு மோளம் அடிக்கப்படும் சத்தம் நெருங்க ஆரம்பிக்கும்.கூடவே திகிலான ”புவ்வ்வய்ய்ங் புவ்வ்வய்ய்ங் ”சீவி சீவி வரும் ஊதல்.”விஷ்க் விஷ்க் விஷ்க்” இடை இடையே சீட்டி.கேட்க ஆரம்பித்தவுடன் வகுப்பில் ஒரு மரண அமைதி நிலவும்.திகிலுடன்  மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து ஒட்டியவாறு உட்கார்ந்துக்கொள்வோம்.எல்லாம் மண் தரைதான்.
தகனம் நடைபெறுகிறது-மணிகர்ணிகா காட் -காசி
ஆசிரியர் மூட் அப்செட் ஆகி புத்தகத்தை மூடி வைத்துவிடுவார்.அடுத்த நிமிடம் ”ஏலே அது ஒண்ணும் ஜெய்யாது.அது கூட வரானுவ பாரு அதுங்கதான் வெசம்.. குலிப்பறிப்பானுங்க”என்பார்.


சில மணி நேரத்தில் திகுதிகு தீயில் பிணங்கள்  எரிந்தவாறு பள்ளி முழுவதும் புகை அப்பும்.பச்சைத் தசைகள் எரிந்து குமட்டும் நாற்றம்.பிணம் சூடு தாங்காமல் “அய்யோ அம்மா அய்யோ அம்மா” என்று கத்தியவாறு எங்களை நோக்கி ஓடி வருவது மாதிரி பிரமை ஏற்பட்டு திகிலடிக்கும்.


ஆனால் இதெல்லாம் பள்ளி ஆரம்பித்த புதிதில்.பிறகு இதெல்லாம் பழகிப் போய் “டகர டகர டகர டகர...”தாளத்தை ஆர்வமாகக் கற்றுக்கொண்டோம்.இது கிழடா குமரனா ஆணா பெண்ணா என்று எரியும் பிணங்களைப் பார்த்தவாறு படிக்க ஆரம்பித்தோம்.குழந்தையாக இருந்தால் சீக்கிரம் முடிந்துவிடும்.புகை மண்டாது.

எல்லா ஜாதிகளின் சம்பிராதயங்களை தெரிந்துக் கொண்டோம். கிட்டத்தட்ட 50-60 பிணங்களின் புகையை சுவாசித்திருக்கிறோம்!காசியில் இருந்தாலாவது புண்ணியம் உண்டு.


பிறகாலத்தில் சித்தர் பாடல்களில ஆர்வம் வந்தது “இதோட” இன்ஸ்பியரேஷனாக கூட இருக்கலாம்.


“மரப்பாவை போலவொரு மண்ணுருச் செய்து 
வளமான சீவனென்னுந் சூத்திர மாட்டித் 
திரைக் குள்ளிருந்தசைப் போன் தீர்ந்த பொழுதே 
தேகம் விழுமென்று தெளிந் தாடு பாம்பே”


இந்தப் பள்ளி குரோம்பேட்டை ராதா நகரில் (மெயின்) இருந்த வெங்கடேஸ்வரா பள்ளிதான். குரோம்பேட்டைக்கும் பல்லாவரத்திற்க்கும் இடைப்பட்ட இடத்தில் இதன் பிரான்ஞ்ச்.பக்கத்தில் சுடுகாடு. மழை வந்தால் ஏரி ஆகிவிடும். பள்ளி இங்கு மிதந்தக்கொண்டிருக்க பள்ளி ராதா நகருக்கு இடம் பெயர்ந்துவிடும்.ஏரி வற்றியவுடன் மீண்டும் சுடுகாடு.


”ஏரிக்கரை ஸ்கூல்” என்று அழைப்பதுண்டு.


பள்ளியிலிருந்து சுடுகாட்டைப் பார்த்துக்கொண்டிருந்த கோணம் போய் சுடுகாட்டிலிருந்து நெய் பந்தம் பிடித்தபடி  பள்ளியைப் பார்வையிட்ட நாள் ஒன்று வந்தது. அது என் தாத்தா இறந்து போய் அங்குதான் தகனம் நடந்தது.


அப்போது ஓடும்  மின்சார ரயிலில் இருந்து பார்த்தால் ஏரி பெரிசாகத் தெரியும்.பெருமழைப் பெய்தால் தண்டவாளம் வரை தண்ணீர் அலை அடிக்கும்.அதில் மிதந்தவாறு சில வீடுகள்.அதிலும் வழக்கமான கிறிஸ்துவ ஜப வீடு ஒன்றும் உண்டு.

இப்போது ஏரி இல்லை.ஏரி ”டகர டகர டகர டகர டகர...புவ்வொய்ங் புவொய்ங்” ஆகிவிட்டது.சுடுகாடு? வெங்கடேஸ்வரா பள்ளி?




மனசுல பெரிய ராஜேஷ்கன்னான்னு நெனப்பு

$
0
0
70களில் யாராவது ஒரு இளைஞன் ரொம்ப ஸ்டைல் காட்டினால் “மனசுல பெரிய ராஜேஷ்கன்னான்னு நெனப்பு” என்று கலாய்ப்பார்கள்.அந்த அளவிற்கு ஹிந்தி நடிகர் ராஜேஷ்கன்னா தமிழ்நாட்டில் புகழ் பெற்றிருந்தார்.

இந்தியா முழுவதும் பெண் ரசிகர்கள் அதிகம்.தமிழ்நாட்டில் கொஞ்சம் ஸ்பெஷல்.

அந்தக் காலத்தில் சென்னை தி.நகர்  ஹோட்டல்  ஒன்றின் வாஷ் பேசின் முகம் பார்க்கும் கண்ணாடிக்கு அருகில் இப்படி ஒரு அறிவிப்பு நான் பார்த்திருக்கிறேன்.”நீங்கள் ஒரு ராஜேஷ்கன்னாதான்.தயவு செய்து இங்கு தலை சீவாதீர்கள்”.

இப்போது மாதிரி சிக்ஸ் பேக்ஸ் அல்லது எய்ட் பேக்ஸ் உடம்பில் ஏற்றி macho லுக் இல்லாமல் இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டவர்.ரொம்ப அலட்டிக்கொள்ளாமல் அலுங்காமல் நலுங்காமல் மைக் மோகன் மாதிரி நடித்துவிட்டுச் செல்வார்.இங்கு அதைத் “தத்தித்தனம்” என்று சொல்வோம்.இவரின் தலைசாய்த்தல் மற்றும் சிறு புன்னகை ரொம்ப பேமஸ்.

நம்ப ஊர் ஏ.வி.எம்.ராஜனுக்கு இவரின் பாதிப்பு உண்டு????

இவர் அஞ்சு மகேந்திரா என்கிற பெண்ணை ரொம்ப டாவடித்துவிட்டு தடால் என்று கைவிட்டு டிம்பிள் கபாடியாவைக் கைப்பிடித்தார்.அஞ்சு மகேந்திரா நொந்து நூலானார்.

இவரை நான் அறிந்தது இவர் படத்தின் பாடல்கள் மூலம்தான்.எல்லாம் மெலடி.சிவாஜிக்கு டிஎம்எஸ் எப்படியோ அப்படி இவருக்கு கிஷோர் குமார்.கன்னபின்னாவென்று ஒரு கெமிஸ்ட்ரி(பிரமை??) இருவருக்கும்.ராஜேஷ்கன்னாவே சொந்த குரலில் பாடுவது மாதிரியே இருக்கும்.முக்கியமாக Yeh Jo Mohabbat Hai  (Kati Patang)என்னும் பாடல் இவரே பாடுவது மாதிரி இருக்கும்.

Kishore
ஹிந்தியில் சுத்தமாக ஒரு அட்சரம் கூட தெரியாமால் "Daag" என்ற படம் மூன்று முறை பார்த்தேன். காரணம் அதில்”Mere Dil Mein Aaj Kya Hai" வரும் இனிமையான பாடல்.”ரூப்பு தேரா மஸ்தானா”(ஆராதனா) தமிழ் நாட்டில் சூப்பர் ஹிட்.


படங்களில் மல்டி ஸ்டார் ஆக்டிங் டிரெண்ட் வந்ததும் இவருக்கு கொஞ்சம் மவுசு குறைய ஆரம்பித்தது. இவர் கொஞ்சம் தனிதன்மை கொண்டவரால் இவர் மல்டி ஸ்டார் படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை.

இவருக்கு இன்னொரு சிறப்பு உண்டு “A" எழுத்தில் ஆரம்பிக்கும் படங்கள் நிறைய உண்டு.Aaradhana,Aap Ki Kasam,Anand,Amar Deep,Ajnabee,Adhikaar,Avishkar,Aanchal.

இவரின் பாடல்களைக் கேட்க:

http://www.saavn.com/s/#!/play/featured/hindi/Tribute+to+Kaka

சின்ன வயதில் எப்போவோ ஒரு மத்தியான வேளையில் பொட்டிக்கடை டிரான்ஸிஸ்டரில் கேட்ட “Kora Kagaz Tha Yeh Man Mera” ஆராதனா படப் பாடல் நினைவில் அலையடிக்கிறது.


Viewing all 56 articles
Browse latest View live