Quantcast
Channel: ரவி ஆதித்யா
Viewing all 56 articles
Browse latest View live

”ஆண்பாவம்” ரீமேக்??வேணாம் ..உட்ரு..பாவம்டா!

$
0
0
கொஞ்சம் வருடம் முன்பு பழைய பாட்டெல்லாம் ரீமிக்ஸ் பண்ணி காவியமாக்கி இளைய தலைமுறை கேட்டு புல்லரித்து புளாங்காகிதம் அடைந்து இரும்பூது எய்தினார்கள்.

ஒரிஜினல் மான்விழியாள்

அதில் ஒன்று அன்புள்ள மான்விழியே.இந்த அற்புதமான மெலடி(எம் எஸ் வி)ஒரிஜினலில்(குழந்தையும் தெய்வமும்) அடக்க ஒடுக்கமாக காதலர்கள் பாடினார்கள்.

 ரீமிக்ஸில் (ஜக்குபாய்) பிட்டுப் பட ரேஞ்சில் பாடப்பட்டது.
அன்புள்ள மான்விழியாள் ஜட்டியோடு வந்துப் போனார்.புல்லரித்தார்கள். நானும்தான்.எவ்வளவு பேருக்கு இதன் ஒரிஜனல் தெரியும்.

இந்தப் பாட்டை அதே ஒரிஜினல் மெலடியுடன்இப்போது போட்டால் படு பத்தாம்பசலித்தனம்.போட்டாலும் நடுவில்  ah buddy...why why this a ....ah buddy...why why this a....ah buddy...why why this a" என்று கடுக்கன் போட்ட சாயத்தலைகளின் குரல்கள் வருவது மாறி போடவேண்டும்.

ஜக்குபாயின் மான்விழியாள்

பாட்டில் நடந்தது படத்திலும் நடக்கப்போகிறது.நடந்தது.


பாலைவனச்சோலை படத்தை ரீமேக் செய்தார்கள்.அது ஹீசைன் போல்ட் வேகத்தில்  600 நாள் ஓடி  ஒரிஜினலயே பீட் செய்தது. காரணம் படத்தின் காலக்கட்டம் மற்றும் அதன் அன்றைய மொழி(நேட்டிவிட்டி).1981ஐ  2009க்கு கொண்டுவரமுடியாமல் சொதப்பினார்கள்.28 வருடங்களில் எவ்வளவு மாறி விட்டது.அதை சுத்தமாகப் புரிந்துக்கொள்ளவில்லை.


ரீமிக்ஸின் அண்ணான ரீமேக்கில் இப்போது பல படங்கள் இருக்கின்றன.

தில்லுமுல்லு(1981),ஆண்பாவம்(1985),மன்மத லீலை(1976) படங்கள் ரீமேக் ஆகுதாம்.ஆண்பாவம் படத்தை என்ன மதிப்பில் ரீமேக் செய்கிறார்கள்?அதில் இரண்டு அண்ணன் தம்பி அராத்துக் கேரக்டர்கள் ஸோ வீ ஆர் ஆல்சோ அராத்ஸ் என்று  ரீமேக்கில்  உதயநிதியும் சந்தானமும். 2012க்கு தோதாக மாற்றி சந்தானம் வளவளவென்று பேசி இம்சைப் படுத்துவார்.

ஆனால் அந்தப் பழசில் இருக்கும் இதில் ஆத்மா வருமா?பழசை நன்றாக உள்வாங்கி அதில் இருக்கும் நேட்டிவிட்டியை இப்போதைக்கு மாற்றி வெற்றிப்பெற்றால் சந்தோஷம். ஆனால் முடியாது.இது  கதைப் பஞ்சத்திற்காக இந்த ரீமேக். ”நாங்க அராத்து” என்கிற ஒன்லைனுக்காக ரீமேக்.சார்லிசாப்ளின் படங்களை 2012க்கு ஏற்றற்போல் ரீமேக் செய்ய முடியுமா?

ரீமேக் பணால் ஆச்சுன்னா நாரோட சேர்ந்து பூவும் நாறும்.

ஆண்பாவத்தில் அராத்துத்தனம் இருக்கிறது.ஆனால் கதையோடு ஒட்டி  ஒரு மொழி பேசுகிறது.இதில் மற்றும் முக்கியமான விஷயங்கள்.

1.யதார்த்தமான நகைச்சுவை
2.கிராமப் பின்னணி
3.சிறந்த திரைக்கதை
4.வித்தியாசமான தலைப்பு(அப்போதைக்கு)
5.லொகேஷன் மற்றும் செட்டுக்கள்
6.ரேவதி/சீதாவின் இயல்பான நடிப்பு/சீதாவின் வித்தியாசமான அறிமுகம்
7.இளையராஜாவின் பிரமிக்க வைக்கும் பின்னணி இசை


இது மிக சிறந்த தமிழ்ப் பட வரிசையில் ஒன்று.குறைகள் இருந்தாலும் சொல்ல வந்ததை தெளிவாக சொன்னார்கள்.200 நாளுக்கு மேல் ஓடியது.

வி.கே.ராமசாமி வாழ்ந்திருப்பார். கேரக்டர் பெயர்கள் எல்லாம் ஒரிஜினல் பெயர்களே.சீதா,ரேவதி,ராமசாமி,பாண்டியன் இப்படி.இதில் கார் ரிவர்ஸ் காமெடி (பாலத்துல முட்டுதான்னு பாரு)அப்போது ரொம்ப பிரபலம்.

அசோக்குமாரின் கேமராவில் சில கவித்துவமான காட்சிகள் உண்டு.

1.ஒரிஜனல் மாப்பிள்ளை தான் இல்லை என்றதும் சுவற்றில் உயரம் அளப்பதற்கு போடப்பட்ட கோட்டைப் பார்த்துக்கொண்டே அவமானத்தில் வெளியேறுவது.

2.கடியாரத்திற்காக சண்டைப்(வில்லனுடன்) போட்டு பிடுங்கிய அடுத்த நொடி அது ஓடுகிறதா என்று பார்ப்பது.(சீதாவிற்கு ஒரு மணிக்கு ஒரு தரம்  நினைவுப்படுத்த அலாரத்தோடு பாண்டியன் கொடுத்தது)

3.சீதா-பாண்டியன் காதல்-மோதல் காட்சிகள் அதன் பின்னணி இசை


யதார்த்தமான நகைச்சுவை:

1.(பெண் பார்க்கும் வைபவத்தில்) சீதா: யாரு மாப்பிள்ளன்னு தெரிஞ்சுகிறது?
தோழி: நெத்தில மாப்பிள்ளன்னு எழுதி ஒட்டி இருக்கும்.

2.கார் ரிவர்ஸ் எடுப்பவர்: கார் பின்னாடி பாலத்துல முட்டுதான்னு பாரு.
பாண்டியராஜன்: வாங்க... இன்னும் வாங்க...(டமால் டப்பு.கார் பாலத்தை முட்டுகிறது) முட்டிச்சிங்க.

3.சீதாவின் அம்மா: ஏண்டி  ஆத்திலந்து தண்ணீர் கொண்டு வர லேட்டாகுது?இப்பெல்லாம் உன் காலு ரொம்ப யோசிக்க ஆரம்பிச்சிச்சு.

4.ஜனகராஜ்(ஹோட்டல் ஓனர்) சரக்கு மாஸ்டரைப்(உசிலை மணி) பார்த்து : உன் உடம்பைக் குறைக்க ஒரு சான்ஸ்... ஆயிரம் லட்டு செய்யறதுக்கு ஆர்டர் வந்திருக்கு

இளையராஜாவின் பின்னணி இசை







நீதானே என் பொன் வசந்தம்-பாடல்கள் ஒரு பார்வை

$
0
0


"நீதானே என் பொன் வசந்தம்" 1982ல் வெளிவந்த "நினைவெல்லாம் நித்யா"படத்தின் ஒரு சூப்பர் மெலடி.இப்படத்தின் பாடல்கள்புது விதமான கிளாசிகல் பரிமாணத்தில் போடப்பட்டு இசை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தப்பட்டது.தமிழ்த் திரை இசையில் ஒரு மைல் கல்.

அப்போதேல்லாம் காத்திருந்து காத்திருந்து ரேடியோவில்தான்  என்னால் கேட்க முடியும்.



முப்பது வருடம் கழித்து  இதே பாடலின் டைட்டிலில் கெளதம் இயக்கத்தில் ஒரு படம்.இசை இளையராஜா.கெளதமிடம் ஏன் ராஜா என்றால்“ "My music was defined by Raja Sir" என்கிறார்." I missed the bus ...I could have joined Raja  much earlier but I was very shy of approaching him... I don"t know why" என்றும் சொல்கிறார்.

வாரணம் ஆயிரம் படத்திலேயே ராஜாவின் பாடல்கள் பாடப்பட்டது.


இளைஞர்களின்  கனவு டைரக்டர் ராஜாவுடன் இணைவது எதிர்பார்ப்பை உருவாக்கியது. அதுவும் புடபெஸ்ட் இசைக்கலைஞர்களை வைத்து லண்டன் ஸ்டியோவில் ராஜா சூட்டுடன் லைவ் ரிகார்டிங் என்றதும் இன்னும் எதிர்பார்ப்பு எகிறியது.


கடந்த 12 வருடமாக புதிய தலைமுறை(new generation) இயக்குனர்களுடன் சேர்ந்து வேலை செய்வதில்லை.நல்ல கதையோடு வரும் புது  இயக்குனர்களை ஊக்குவிப்பதாக அய்யன்,தாண்டவகோனே,செங்காத்து பூமியிலே,மயிலு,அழகர் மலை போன்ற படங்களும் “ஒன்லைன் ஸ்டோரி யோசிக்கறதுக்கு முன்னமே நீங்கதான் இசைன்னு என் கைல பச்சைக் குத்திக்கிட்டேன்” என்று வரும் இயக்குனர்களுக்கும், இவரை விட்டால் வேற ஆளே கிடையாது என்கிற படங்களுக்கும் (விருமாண்டி,பழசி,நான் கடவுள்,பிதாமகன் நந்தலாலா,ஸ்ரீராமஜெயம்,இவன்,பாரதி)இசையமைத்து வந்தார்.

முதன்முதலாக,  இளையதலைமுறையை கையில் வைத்திருக்கும் மற்றும் ஒரு காதல்கதை அதுவும் ராஜாவின் பழைய படத்தின் டைட்டில் மற்றும் கதாநாயகி பெயர் (நித்யா வாசுதேவன்) தொடர்புடைய கதையின் இசைக்கு ராஜா பொறுப்பேற்கிறார் என்பது ஒரு புது விஷயம்.

எதிர்பார்ப்பு மற்றும் எகிறுவது இருந்தாலும் சில லாஜிக்கான கேள்விகள் இருக்கு.

இசைஞானி இதுவரை போட்டது 5500 மேற்பட்ட பாடல்கள். எவ்வளவு வகையான உணர்ச்சிகள் அதிலும் அரைத்தமாவையே அரைத்த உணர்ச்சிகள்.2000-2012 வரையிலுமே கிட்டதட்ட 65 படங்கள்.கார் ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர் மாதிரி பலவித கலவைகளில் எல்லா உணர்ச்சிகளுக்கும் பாட்டு போட்டாகிவிட்டது.கட்டம் கட்டமாக தாண்டி வந்து ஒரு காட்டு காட்டியாகிவிட்டது.

இப்போது மீண்டும் ஒரு காதல்கதை.பழையபாடல்களின் சாயல் இருக்காதா? அதே குறுக்கும் நெடுக்கும் பின்னணியிலும் பலவித இசைக்கருவிகளின் பின்னல்களா? அதே  பல்லவிகளா?சரணங்களா?மிச்ச மீதி ஸ்டாக் இருக்கா?

சாயல் வராமல் இருப்பது உலக மகா கஷ்டம்.அதை நிறைய தவிர்க்கிறார் தன் திறமையால்.ஆனாலும் அங்கங்குத் தலைக்காட்டும்.

பாடல்களுக்கு வருவோம்...

”நீதானே என் பொன்வசந்தம்” பாடல்களுக்காக லண்டன் போவதற்கு முன் ஹோம்வொர்க் செய்துவிட்டுதான் போய் இருக்கிறார்.யோசித்தபோது என் கவனத்தில் உதித்தவை:

1.மூன்று பாடல்களில் ராஜா ராஜாவை விட்டு விலகி இசைஅமைத்திருக்கிறார்.ஒரு அன்னியத்தனம் (alien)ஆனாலும் ராஜா மின்னல் அடித்துப் போகிறார்.

2.இது எந்த இசையும் கிடையாது இது உங்கள் இசை என்றபடி இருக்கிறது

4.சிம்பனியை மேக்சிமம் பின்னணியில் தோய்த்துக்கொடுப்பது.

5.துல்லியமான  பளிச் பளிச் சவுண்ட் ரிகார்டிங்.

மற்ற இசை அமைப்பாளர்களின் அடுத்த தலைமுறை பாடல்களாக கடந்த 10-15 வருடங்களாக ஆண் அல்லது பெண் பாடும் பாடல்கள் ஸ்டைல் டச் அல்லது பாப் டச்சோடு வருகிறது.ஆனால் 95% பாடல்கள் ஆத்மா இல்லாமல் பிளாஸ்டிக் உணர்ச்சிகளோடு வந்து பயமுறுத்துகிறது.இசையும் தோதாக இல்லாமல் உறுத்துகிறது.

பின் வரும் ராஜாவின் மெட்டுக்களில் வளைவு நெளிவு மற்றும் ஆத்மா எங்கு வெளிப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளேன்.

மொத்தம் எட்டு பாடல்கள். பாடல்களை பார்க்கலாம்.நா.முத்துக்குமாரின் வரிகள் எனக்குப் பிடித்துவிட்டது.

ராஜாவின் பாடல்களை கேட்கும்போது படிப்படியாக உள்ளே இறங்கி  வாழ்ந்துவிட்டு வெளியே வரவேண்டும்.இசையில் நிறைய புத்திசாலித்தனம் இருப்பதால் அனுபவித்துக் கேட்கவேண்டும்.


முதல் முறை பார்த்த ஞாபகம்:


Hey Goutham!This is new generation  romantic singing...! Have it ! என்கிறது பாடல்கள்.

பாடியவர் சுனிதி செளகான்.என்னை ஆகார்ஷித்து அள்ளிக்கொண்ட பாடல்.மேடம் குரல் அட்டகாசம்.soulful stylish singing! Real stunner from Maestro Raja.

ஒரு விதமான தேவதை பாடல்!பின்னணி இசை விறுவிறு என்று மிளகு குத்தலுடன் திகிலாக போகிறது?காதல் வயப்படுவது மாதிரி உணர்வு.”நீதானே என் பொன் வசந்தம்”  கோரஸ் அழகு சேர்க்கிறது பாட்டிற்க்கு.ஒரே ஒரு நீண்ட சரணம்.முழுமூச்சில் பாடி அசத்துகிறார்.அதுவும் இதற்கு காட்சி எப்படி இருக்கும். இது மேடையில் பாடும் பாடல்?

1980லும் இதே புலம்பல் ஆனால் அடக்கஒடுக்க ஹோம்லி புலம்பல்”தூரத்தில் நான் கண்ட உன் முகம்” (நிழல்கள்).உருமாற்றம்.

எங்கு ஆத்மாவை  (எனக்கு)  வருடுகிறது?

“இதயத்தில் ஏனோஓஓஓஓஓஓஓஓ பாரம்.... விழியினில் ஏனோ ஓஓஓஓஒ ஒரு ஈரம்....”
“ஊடலில் போனது காலங்கள்...தேடலில்.......இல்லையே......அடையாளங்களா”வரிகள் முடிந்து “நீதானே என் பொன் வசந்தம்” கோரஸ் அட்டகாசம்.

பாடல் சடக்கென்று முடிந்துவிடுகிறது.

சற்று முன்பு பார்த்த: பாடியவர் NSK Ramya

சற்று முன்பு பார்த்த ஞாபகம்
காதல் பிரிவு/ஏமாற்றம் அல்லது தொலைந்துபோன காதலை மீட்பது மாதிரி பாடலில் உணர்வு.இதுவும் ஒரு தேவதை பாட்டு(angel singing.) சுனிதியை விட நல்ல உச்சரிப்பு.பழைய சிரிப்பு நடிகர் என் எஸ் கிருஷ்ணனின் பேத்தியாச்சே.

பாடல் சிம்பனியில் பின்னப்பட்டிருக்கிறது.கனவுலகில் மிதக்க வைக்கிறது.போதையான குரல்.படுத்துகிறது.

ஆத்மாவை வருடும் இடங்கள்:

திடுக்கென்று பின்னணி தாளத்துடன்” நெஞ்சம் துடிப்பதும்... மின்னல் அடிப்பதும்”

’தன்னந்தனி காஆஆஆஆஆட்டில் இன்ன்ன்பம் காஆஆஆஆன  வாஆஆஆடா....ஆஆஆ....”

”தொட்டுத் தொட்டுப்பேஏஏஏஏஏஏசும் உந்ந்ந்.......தன் கைஇ இ இ இகள் எங்ங்ங்ங் கேஏஏஏஏஏஏ...” வேறு உலகத்திற்குக் கொண்டுபோய் தொப்பென்று கிழே போடுகிறார்.இரண்டு இடங்களிலும் இசை பின்னிப்பிணைகிறது.

ஷ்ரேயா கோஷால்/சாதன சர்க்கம் இருவரையும் தவிர்த்தது ரொம்ப சந்தோஷம். இந்த பீல் சத்தியமாக வராது.

இரண்டு பாடல்களிலிருந்தும் மீண்டு வருவதற்கு கொஞ்ச நேரம் ஆகிறது.

காற்றைக் கொஞ்சம்:
ஆரம்ப ஹம்மிங்கே காற்றோடு பிரயாணம் செய்யும் உணர்வு.தாமரைக்கொடி மற்றும் மலையாள கரையோரம் பாடல்களின் தென்றலும் விசுகிறது.ராஜாவின் அட்டகாசமான இசைக்கோர்வை

ஆத்மா:

(முதல் சரணம்) சாத்தி வைத்த வீட்டில் ..தீபம் ஏற்றி வைக்க நீ வா வா ..மீதி வைத்த .......... பேசி தீர்க்கலாம்.. ” (இரண்டாவது சரணம்)என்னை இன்று மீட்கத்தான் ...உன்னை...”

இரண்டாவது இடைஇசையில் வரும் ஹம்மிங்கும் புல்லாங்குழலும்...ரம்யம்.

என்னோடு வா வா:
இந்தப்பாட்டு யூத்துகளின் செல்லப்பாட்டு ஆகிவிட்டது.கார்திக்கின் மென்மையான ஸ்கூல் பையன் குரலில் ரொம்ப சிநேகமாக இருக்கிறது. ராஜாவிற்கு இதெல்லாம சர்வ சாதாரணம்.”என்னோடு .... வா வா என்று....போகமாட்டேன் “ என்று முடித்தவுடன் புறப்படும் கோரஸ் வயலின்/சிந்த் மற்றும் முதல் சரணம் வரும் வரை இசை சூப்பர்.

ஆத்மா:

”சின்னப் பிள்ளை போல நீயும் ,... என்னைவிட யாரும்.... செல்ல கேட்டுக்கொண்டால்”

சொல்லி அடித்திருக்கிறார் மேஸ்ட்ரோ!

சாய்ந்து ...சாய்ந்து:

இதுவும் சிம்பனியில் தோய்க்கப்பட்ட இனிமையான சிம்பிள் மெலடி.யுவன் பாடுவதை என்னால் ரசிக்க முடியவில்லை.அதனால் மனவாடு பாட்டான ஏதி ஏதி (Yeto Vellipoyindi Manasu)(ஷான் - ரம்யா) கேட்டேன்.அதில்மோகனம் கிளாசிகல் டச் இருக்கிறது.தமிழில் வேறு டச் வருகிறது.இரண்டாவது இடையிசை வெஸ்டர்ன் கிளாசிகள் அட்டகாசம்.


கேட்க கேட்க மனதிற்கு நெருக்கமாகிறது.


பெண்கள் என்றால்:
என்னப்பா இது ரஹ்மான் பாட்டை ஏன் யுவன் பாடுகிறார் என்று திடுக்கிட செய்கிறது.இது நம்ம ஏரியா இல்லையே.”என்னடி மீனாட்சி”பாட்டின் 2012 வெர்ஷன்??.ரஹ்மானை யுவன் இமிடேட் செய்வதை விடவேண்டும்.எவ்வளவு பாடகர்கள் இருக்கிறார்களே. ஏன் யுவன்?

வானம் மெல்ல:
வித்தியாசமான மிகவும் மென்மையான மெலடி.அற்புதம்.ராஜா பாடுவதால் ஏறகனவே கேட்ட மாதிரி இருக்கு.பின்னணி இசை மாய உலகத்திற்கு கொண்டு போகிறது.Bela Shindeவும் நன்றாக பாடி இருக்கிறார். ஆனால் குரல் சில இடங்களில் கீச்சிடுகிறது.

“தென்றல் வந்து தீண்டும் போது” பாட்டை வேறு மெட்டில் பாடுவது மாதிரி ஒரு பீலிங்?


கேட்க கேட்க மனதிற்கு நெருக்கமாகிறது.

புடிக்கல மாமு:

ராக் அண்ட் ரோல் பாணியில் அமர்க்களமாக ஆரம்பம்.சுரஜ் ஜகன் குரல் அற்புதமாக இருக்கிறது.குத்துப்பாட்டு ஸ்பெஷலிஸ்ட்???இவருடன் கார்த்திக்கும் பாடுகிறார். முதல் பாதி ஒரு மாதிரி மெலடி& ரிதம் அடுத்த பாதி வேறு மாதிரி மெலடி&ரிதம்

டெயில் பீஸ்: எந்த படம் பாட்டு ரிலீஸ் ஆனாலும்  ”எண்பதுகள்  பாடல் பீலிங் மாதிரி வராதுங்க.ராஜா அதை மீட்க வேண்டும்” என்று ஒரு கோஷ்டி சொல்லிக்கொண்டிருக்கிறது.

இப்படி பேசுவது வன்முறை.எப்படி முடியும்? 1980க்கு வயது இன்று 32.அதெல்லாம் ராஜாவின் பொக்கிஷங்கள்.

நான்  பதிலுக்கு 1960 பீலிங்கை மீட்டு எடுக்க வேண்டும் என்கிறேன் ."தன்னிலவு தேன் இறைக்க”(படித்தால் மட்டும் போதுமா) ,”அன்பாலே தேடிய செல்வம் “(தெய்வப்பிறவி),"கலையே என் வாழ்கையின்”(மீண்ட சொர்க்கம்).1960 பீலிங்தான் 1980 மீட்டெடுக்கப்பட்டது.மெலடி எங்கும் கைவிடப்படவில்லை.


சற்று முன்பு பார்த்த மினி கதைகள்

$
0
0
ஐந்து மினி கதைகள்


அர்த்தராத்திரில யாருக்குடீ டெடிகேஷன்?-1
டிஸ்கி: படத்திற்கும் கதைக்கும் சம்பந்தம் இல்லை

நடுநிசியில்(22.40hrs) திடுக்கிட்டு தூக்கத்திலிருந்து எழுந்தார் சுப்ரமணியன்.உடம்பு முழுவதும் வியர்த்திருந்தது.டிவியை ஆன் செய்தார்.

ஏதோ ஒரு சேனலில் ஒரு டீன் ஏஜ் பெண்(ரொம்ப ஓவராக இளித்தவிட்டு):”இவ்வளவு நேரம் கலாச்சிட்டேன்.சரி... பாட்ட யாருக்கு டெடிகேட் பண்றேங்க” செல்லமாக கேட்டாள்.

பட்டென்று  டிவியை அணைத்தார்.“சனியன்... நேரம் காலம் கிடையாது.டெடிகேஷனாம்...வெட்டி முண்ட” ஆழ்ந்து தூங்க ஆரம்பித்தார்.” ஏய்..சொட்டை கெழ பாடு! இது ரீபிட் புரோகிராம்.. லைவ் இல்ல.செத்துப்போன உனக்குதான்  டெடிகேஷன்.”மார்பில் குந்தி உட்கார்ந்தபடி கலாய்த்தாள்.

காலையில்  அவர் இறந்திருந்தார்.அவர் வேட்டியில் அங்கங்கு திட்டு திட்டாக ஈரத்துடன் அவரின் ஆண்மை வீர்யம்.


தெரியும் ஆனா தெரியாது -2

மிகமிக பரபரப்பான சிக்னல்.பச்சை விழ இன்னும் 9 வினாடிகள் இருக்கிறது.”இந்த அட்ரஸ் எங்க இருக்கு”.பக்கத்தில் நிற்கும் இரணடு சக்கர ஓட்டுனர்  இவனைக் கேட்கிறார்.பதிலுக்கு இவ்வளவு நீளமான அசட்டுப் புன்னகையை பச்சை விழும்வரை சிக்னலில் காட்டியவன்  இவனாகத்தான் இருக்கும்.

Rear View Mirror - 3

அது ஒரு ரோட் சைட் கார் பார்க்கிங்.அந்த ஏரியா கல்லூரி மாணவன் ஒருவன் ஒரு காரை நோக்கி வருகிறான்.அது அகலமான  Rear View Mirror உள்ள கார்.அதை நேராக்கி குனிந்து அவசர அவசரமாக தலைசீவி மிகமிகமிகமிக அழகாகிக் காத்திருக்க தொடங்குகிறான்.

எதிர்பார்த்தபடி  புன்னகையுடன் அந்த டுயூஷன் போகும் பெண் அந்தக் காரை நெருங்குகிறாள்.கிட்ட வரவர தன் இயல்பான உடல்மொழி செயற்கையாகிறது.செல்போனில் ஏதோ கவனம் செலுத்துவது மாதிரி நடித்து அவனைக் கடக்கிறாள்.அதே புன்னகை ஆனால் செல்லமும் வெட்கமும் கோபமும் கலந்துக்கட்டியாக.

மாணவன் பூரிப்படைந்து மீண்டும் ஒரு முறை கண்ணாடியில் பார்த்து தலைசீவி அழகாக்கி கண்ணாடியை மடித்துவிட்டு கிளம்புகிறான்.

அந்தப் பெண் டுயூஷன் முடிந்து திரும்பி அந்த காரை நோக்கி ஒரு புன்னகையுடன் வருகிறாள்.கண்ணாடியை நேராக்கி குனிந்து “வெவ்வவ்வேவே” முகத்தைக் அஷ்ட கோணாலாக்கி அழகுகாட்டிவிட்டு கண்ணாடியை மடித்துவிட்டு நடக்க ஆரம்பிக்கிறாள்.


சொதப்பல் - 4

மேலே உள்ள இரு சிறுகதைகளயும் முதலில் கவிதையாக முயற்சி செய்துவிட்டு கவிதை ஆகாமல் எங்கேயும் எப்போதும் சிறுகதையாகவே ரொம்ப நாள் (40) தோற்றம் கொண்டு பெண்டிங் பைலில் இருந்தது.

எவ்வளவு அடித்தும் கவிதையாக கனியவில்லை.ஒரு உரைநடையை பத்துவாட்டி திருப்பி திருப்பி திருப்பி எழுதினால் அது கவிதையாகிவிடும் என்பது இதற்குப் பொருந்தாது.

பின் குறிப்பு -1:

”Objects in mirror are closer than they appear" என்ற வரியை மனதில் வைத்துக்கொண்டு எப்படியாவது ஒரு கவிதை எழுத வேண்டும் என்கிற பிடிவாதம்தான் காரணம்.

பின் குறிப்பு -2:
”Objects in mirror are closer than they appear"  இந்த வரியை “Rear View..." கதைக்கு கடைசி வரியாக வைத்தால் அப்படியே ஒரு தூக்குதூக்கிவிடும் என்று நண்பர் சொன்னதை  நான் ஏற்கவில்லை.

பிரசாதம் -5

ராதிகா  ரொம்ப டென்ஷனாள்.காரணம் எதிர்வீட்டு தெலுங்குமாமி கொடுத்த பலவித ஷேத்ர சாமி (தெற்கு+வடக்கு) பிரசாதங்கள் கலவையாக.பிரசாதமாக தரப்படவில்லை.மீந்துப் போனது தரப்பட்டிருக்கிறது.பிரிஜ்ஜில் வைக்கப்பட்டது.உள் சாப்பிட உகந்தது அல்ல.

ஒரே ஒரு துளி குங்குமம் மட்டும்  குத்துமதிப்பாக ஒரு சாமியை நினைத்துக்கொண்டு நெற்றியில் இட்டுக்கொண்டாள்.எப்படி டிஸ்போஸ் செய்வது?அஃறினண அல்லது உயர்தினணகளுக்கு தள்ளிவிட மனசாட்சி அனுமதிக்கவில்லை.திருப்பிக்கொடுக்க முடியாது.

ஒரு சுலப வழி இருக்கிறது.ராதிகா என்ன செய்யப்போகிறாள்???தெலுங்கு மாமி கும்பிட்ட எல்லா ஷேத்ரசாமிகளும் ரொம்ப ஆர்வமாக ராதிகாவைக் நோக்கிக் கொண்டிருந்தார்கள்.

ரெண்டு வேளையாக பய பக்தியுடன் வாயில் வைத்து முழுங்கினாள்.கடவுள்கள் அதிர்ந்தார்கள்.அடி.. மக்கே! இதற்கும் காலாவதி தேதி உண்டு அதன்படி இது குப்பைத்தொட்டிக்குதான் போகவேண்டும்.தெலுங்கு மாமி சாமிகள் ராதிகாவைத் திட்டினார்கள்.

குங்குமம் இட்டுக்கொள்ளும்போது கூட க்ளூ கொடுத்தேனே என்று
திருப்பாச்சூர் தங்காதளி அம்மன் தன்னை ரொம்ப நொந்துகொண்டாள்.

வால்மார்ட் அண்ணாச்சி தற்கொலை குரல் விடும் விஜய் ஆண்டனி

$
0
0
தொடர்பு எல்லைக்கு வெளியில் இருந்தும் 24/7 கவலைகள்

கடந்த பல வருடங்களாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் தற்கொலை அதிகமாவதாக ஒரு செய்தி படித்தேன்.இதில் அதிர்ச்சியான செய்தி ஒன்று “செல்போன்கள் இந்த நிலமையை இன்னும்  மோசமாக்குகிறது” என்பதாகும்.

பல வருடங்களுக்கு முன்பு கடிதத் தொடர்பு மட்டும்தான் இருந்தது.அதன் மூலம்தான் குடும்ப சுமைகள் கஷ்டங்கள்  தெரிய வரும் வீரர்களுக்கு.ஆனால் இப்போது செல்போன்கள் மூலம் அன்றாட குடும்ப பிரச்சனைகள் தெரிய வருகிறது.அதனால் அன்றாடம் மன அழுத்தம்,பயம் பிறகு தற்கொலை.


DO NOT USE CELLPHONE WHILE  "LIVING" ALSO

குரல்கள்  விடும் விஜய் ஆண்டனி



இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி சமீபத்திய தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் “ என் பாடல்களில் இடையிசையில் இசைக்கருவிகளின் ஒலியை விட ஆண்/பெண் குரலிசை நிறைய வரும் அதற்குக் காரணம் இசைக் கருவிகள் வைத்து இசையமைப்பது ரொம்ப காஸ்ட்லி சமாசாரம்.செலவு அதிகமாகும் அதனால் குரல்களைப் பயன்படுத்தி இசையை நிரப்புக்கிறேன்.”

”பாத்தாலே தெரியுது ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கீங்க
நெறப்புங்க...  விஜய் நெறப்புங்க...! பெட்ரோல்,டீசல் வெல ஏறுச்சுன்னா பால்,காய்கறி வெலதான் அதிகமாச்சுன்னா இசைக்கருவிகள் வெலயும் ஏறுது இசைக்கருவி வாசிக்கறவங்களும்  கிடைக்க மாட்டேன்றாங்க”

ரஹ்மான் இசையிலும் நிறைய குரல் இசை வரும்??? கற்பனை வறட்சி? அல்லது டிரெண்ட்? விலைவாசி சத்தியமா கிடையாது.

பெப்பர் அண்ட் சால்டுடன் ஒரு ரோல்(சிவாஜி கணேசன்)

இவரின் 84வது பிறந்த தினத்தின்போது அவரைப் பற்றி நினைவுகள் அலையடித்தது.சிறு வயதில் அவரின் தீவிர ரசிகன்."எங்கே நிம்மதி” பாட்டின் நடிப்பைப் பற்றி பல நாட்கள் brain storm செய்து தூங்காமல் செய்திருக்கிறோம்.குரோம்பேட்டை தவப்புதல்வன் சிவாஜி ரசிகர் மன்றத்தில் உறுப்பினராக இருந்திருக்கிறேன்.

இன்றும் மிகவும் ரசிப்பது அவரின் மிகை நடிப்பு இல்லாத டோப்பா தலை இல்லாத பிளாக் அண்ட் வொயிட் படங்கள்.கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி,பலே பாண்டியா,அறிவாளி,சபாஷ் மீனா,புதையல்,ரங்கோன் ராதா,கலாட்டா கல்யாணம்,ஊட்டி வரை உறவு.அந்தக் கால பிளாக்வொயிட் படங்களில் ஒரு இன்னசென்ஸ் இருக்கும். செயற்கைத்தனங்கள் ரொம்ப கம்மி. அதுவே எனக்குப் பிடிக்கும்.

இவர் கிட்டத்தட்ட முந்நூறு படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.அதுவே இவருக்கு அழிவு காலம்.கிழ் உள்ள அவரின் சினிமா படங்கள் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?பயப்படாதீர்கள்.டிவி சீரியல்கள் இல்லை.
இதெல்லாம் மத்தியான வேளையில் சேனல்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

மாடிவீட்டு ஏழை,ஆனந்தக்கண்ணீர்,என் தமிழ் என் மக்கள்,துணை,பந்தம்,நீதிபதி,சுமங்கலி,நெஞ்சங்கள்,பாரம்பரியம்,இரு மேதைகள்,வம்சவிளக்கு,நீதியின் நிழல்,வெற்றிக்கு ஒருவன்,வா கண்ணா வா,சரித்திர நாயகன்,முத்துக்கள் மூன்று.80-90களில் வந்தப்படங்கள்.

இவர் ஒரு அற்புதமான நடிகர்.பாழாய் போன  டைரக்டர்கள் இவரை மிகை நடிப்பு மற்றும் சூட் கோட் போட்ட 20 வயது இளைஞனாக மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் நடிக்க வைத்து கேலிக்கூத்தாகிவிட்டார்கள் கே.விஜயன்/யோகனந்த்/பாலாஜி போன்றவர்கள்.

கொடுமை என்னவென்றால் இவர் மட்டும்தான் மிகையாக இருப்பார்.சுற்றி நடிப்பவர்கள் இயல்பாக இருப்பார்கள்.

இவர் ஜல்லிக்கட்டு,முதல் மரியாதை ,தேவர் மகன் படங்களில் செய்த ரோல் மாதிரி   வித்தியாசமாக அல்லது தன் பிராண்ட் இமேஜ்ஜை உடைத்து  கெஸ்ட் ரோல்கள் 70வதின் இறுதிகளில் தொடங்கி இருக்கலாம்.எங்கேயோ போய் இருப்பார்.ரசிகர்களும் அடுத்த அடுத்தப்படிக்கு நகர்ந்திருப்பார்கள்.இதை அமிதாபச்சன் இப்போது கடைப்பிடிக்கிறார்.



மேல் உள்ள படத்தில் தோன்றுகிற மாதிரி பெப்பர் அண்ட் சால்டு தாடி,அதே உடை,தோற்றத்துடன் ஒரு ரோல் நடிக்க வேண்டும் என்று என்னுடைய கனவு நிறைவேறவில்லை.


வால்மார்ட் அண்ணாச்சிகளாக:

வால்மார்ட்டினால் பாதிக்கப்பட போவது கிர்ரான கடைகள் அதாவது சின்ன மளிகைச் சாமான் (பொட்டிக்கடைகள்)கள் என்பதுதான் முக்கியம்.விழித்துக்
கொள்வது கடமை.


பொட்டிக்கடைகளாக இருந்தாலும் அண்ணாச்சிகள் முதலில் இந்த பொட்டிக்கடை சிந்தனைகளில் இருந்து வெளியே வரவேண்டும்.ஒவ்வொரு நாளும் உலகம் பலவித மாற்றங்களை மேற்க்கொள்கிறது.ஒரு கார்பரேட் நிறுவனம் போல மார்க்கெட்டிங்(strategy) சிந்தனைகளை உருவாக்கிக் கொள்ளவேண்டும்.இவைகளை மறுஆக்கம் செய்யவேண்டும். ஆச்சா போச்சா  காமராஜர் அண்ணாச்சிக் கால டெக்னிக்கெல்லாம் காலாவதி ஆகிவிட்டது.

இப்போது இருக்கும் தலைமுறை ஸ்டைல் ஆகிவிட்டது.வாங்கும் திறன்/முறை மாறிவிட்டது.கழுத்தை அறுக்கும் வியாபாரப்போட்டி.அண்ணாச்சி ஊர்காரப் பையன்கள் வேறு வேலைக்குப் போய்விட்டார்கள்.ஆட்கள் இல்லை.ஜார்கண்ட்,சட்டிஸ்கர்,ஒரிஸ்ஸா பான்பராக்அண்ணா(ஜி) பையன்கள்தான் கிடைக்கிறார்கள்.

எந்த வியாபாரத்திற்க்குமே முன்யோசனை/திட்டம்,தொலைநோக்குப்பார்வை, பணம்,நிர்வாகத்திறன் மிகமிக அவசியம்.முதலில் இவர்கள் ஒன் மேன் ஷோவை விட வேண்டும்.ஒருவரே பல கஸ்டமர்களை அட்டெண்ட் செய்வது.அடுத்து பொட்டிக்கடையிலேயே டிராவல்ஸ்,தண்ணீர் சப்ளை,ரியல் எஸ்டேட்,பால் பாக்கெட் போடுவது தவிர்க்க வேண்டும்.ஆள்கட்டு இருந்தால் உசிதம்.

சுத்தம்/டிஸ்பிளே/வேகம்/பிரஷ்னெஸ் மிக முக்கியமாக கைகொள்ளவேண்டும்.கொள்முதலில் அதிகபட்ச கழிவும்,தரமும்,டோர் டெலிவரியும் செய்துக்கொள்ளவேண்டும்.

இன்னும் சில கடைகள் எடைகற்களையே உபயோகிக்கிறார்கள்.பொட்டலம் கட்டுவது,கடன் கொடுப்பது சுத்தமாக இருக்கக்கூடாது.எல்லாம் பாக்கெட்ஸ்.எனக்கு தெரிந்து 10,8,12 ரூபாய்க்கு எல்லாம்  மளிகைக் கடன்கொடுத்து  3000க்கு கடன் சேர்ந்துவிட்டது ஒரு அண்ணாச்சிக்கு.காரணம் இதெல்லாம் கணக்குவைத்து எழுதமுடியாது.

கால்கிலோ தக்காளி,கொத்தமல்லிக்கெல்லாம் டோர் டெலிவரி கொடுத்தால் வேலைக்கு ஆவது.

எல்லாம் நம் கையில்தான் இருக்கிறது.

கிரவுண்ட் ப்ளோரில் கேண்டிட் பேய் -திகில் கதை

$
0
0

அது ஒரு பெரிய மால்.மேற்குப் பகுதியில் ஆள் நடமாட்டம் சுத்தமாக இல்லை.ஒவ்வொரு தளத்திலும் அந்த லிப்ட் நின்று நின்று இறங்கிக் கொண்டிருந்தது.அதில் புதிதான திருமணமான இளம் தம்பதியர் மட்டும் கொஞ்சி குலாவியபடி.

...........9

...........8

...........7

...........6

...........5

...........4

...........3

...........2

...........1

...........G

கதவு திறந்ததும் யாரோ ஒரு இளைஞன் கொடூரமான கருப்புக் கலர் பேய் மாஸ்க்  அணிந்து “பே...பே....பே..பே....ஹா ஹ்ஹாஹா ஹா ஹ்ஹாஹா ஹா ஹ்ஹாஹா.... ஹிஹிஹிஹிஹி பே பே பே பே பே....”கொடூரமாக கத்தி பயமுறுத்திவிட்டு மின்னல் வேகத்தில் மறைந்தான்.


மனைவி நடுநடுங்கி கைகால் உதறி  வயிற்றைப் பிடித்தபடி (இரண்டு மாதம் கர்ப்பம்) மயங்கி லிப்டில் சரிந்தாள்.கணவன் வேர்த்து வெடவெடத்துப்போய் (பேய் அறைந்தால் போல்???) ஒன்றும் புரியாமல் அவளைப் பிடித்தபடி இருக்க லிப்ட் கதவு மீண்டும் மூட இடது கையால்  தவறுதலாக நான் - ஸ்டாப் பட்டனை அமுக்க,

.........1

.........2

.........3

.........4

.........5 (ஒருவாறு  இருவரும் சகஜ நிலைக்கு வந்தார்கள்.ஆனால் லேசனா நடுக்கம் இருந்தது)

.........6

.........7

.........8

.........9

கதவு திறந்தது.கணவனின் செல்போன் அடித்தது.ஆன் செய்தான்.

“டேய்.... நாயே.. பொறம்போக்கு...எப்படி இருந்தது என்னோட கேண்டிட்  ஷாக் ஷோ? ஞாபகம் இருக்கா.ஆறுமாசம் முன்னாடி ரோட்ல போற எங்க அப்பாவ மலர் டிவி கேண்டிட் ஷோன்னு திடீர்ன்னு நடுரோட்ல  நாதாரி நீ பயமுறுத்தி..அவரு பயந்து போய் ஹார்ட் அட்டாக் வந்து நாலாவது நாள் இறந்துப் போனார்.அவரை நம்பி இருந்த எங்க குடும்பம் தெருவுக்கு வந்தது.”

போன் கட் ஆகியது.


நீதானே என் பொன் வசந்தம்-விமர்சனம்

$
0
0
பொதுவாக நான்பார்க்கப்போகிறேன்என்று முடிவு செய்துவிட்டு பார்க்கப்போகும் படங்களின் விமர்சனத்தை நெட்டில் படிப்பதில்லை.காரணம் அதில் பாதிக்கப்பட்டு படம் பார்த்து சொந்த ரசனை மற்றும் விமர்சனம் போய்விடும் என்பதால்.டிவிட்டரில் என் (சின்ன சின்ன ஒபினியன்கள்தான்) கண்ணில் பட்டதெல்லாம் படம் மிக மோசம் என்று வந்திருந்தது.

நண்பர் ஒருவர் எனக்கு போன் பண்ணி “என் பொண்ணுப்பாத்தாளாம்...படம் போராண்டா...வளவளவன்னு பேசிட்டே இருக்காங்களாம்”.

என்னடா இப்படி சொல்றாங்களே பார்த்தே ஆக வேண்டுமா என்று திடீரென்று ஒரு குழப்பம்.அதே சமயத்தில் ஒவ்வொருவரின் படத்தை நோக்கும் பரிமாணம் (perspective) மாறும்  என்று திடமாக நம்புபவன்.அதனால் குழப்பத்தை தூக்கிக் கடசிவிட்டு “நீதானே என் பொன்வசந்தம்” நி.நித்யா பாட்டை இரண்டு  முறை கேட்டுவிட்டு டிரைவிங்கில் அதேயே முணுமுணுத்தபடி தியேட்டரில் போய் பார்த்தேவிட்டேன். 20/12/12 க்கு பிறகு பார்க்க முடியுமா முடியாதா என்ற கவலை வேறு.
படம் மோசமா? இல்லவே இல்லை.படம் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது.

நித்யா - வருண் இவர்களின்  ஐந்து வயது முதல் இருபத்தி நாலு வரை வாழ்க்கைத் (காதல்) தருணங்கள்தான் படம் என்று டைட்டில் கார்டு வருகிறது.முக்கியமாக உணர்ச்சிகள்தான்.இதை 2.30 மணி நேரத்தில் சொல்ல வேண்டும்.இது மாதிரி படங்கள் ஹாலிவுட்டுக்கு ஓகே நம்ம ஊருக்கு ஓகேயா? அவர்கள் பின்னி பெடல் எடுப்பார்கள்.கோலிவுட் கெளதம் மேனன்?

கெளதம் மேனன் வெற்றிப்பெற்றுவிட்டார். எப்படி?நித்யா வருண் வாழ்ந்திருக்கிறார்கள்.

எமோஷன்ஸ் பின்னிடீங்க ....நித்யா!

காரணம் 1.நித்யா-வருண் தருணங்களைச்சொன்ன விதம் 2.அந்த மாதிரி பருவங்களில் வாழ்ந்து அந்த மாதிரி தருணங்களை அனுபவித்துத் திரையில் பார்த்தது ஒரு சந்தோஷம்3.எப்ப பார்த்தாலும் பேச்சு-வார்த்தைகளை போராடிக்காமல் நகர்த்திக்கொண்டே போவதற்கு திறமை வேண்டும்

ஒரு மிடில் கிளாஸ் பையனுக்கும் (அவரேஜ் அராத்து) ஒரு பணக்காரப் பெண்ணுக்கும்( திமிர் இல்லாத)  இடையே அன்பு,நட்பு,காதல்,பிடிப்பு,காதல், வெறி,காமம்,காதல்-ஹேட்(love-hate),காதல் -ஹேட், காதல்-ஹேட் மீண்டும் காதல் மீண்டும் ....தருணங்களை கிமுவில் ஆரம்பித்து கிபிவரை  சுவராஸ்யமாக சொல்லி இருக்கிறார்.

கடைசியில்தான் கொஞ்சம் ஆற்றிவிட்டு  சூடாக கையில் கொடுப்பார் என்று பார்த்தால் மாற்றி மாற்றி மாற்றி மாற்றி மாற்றி  ஆற்றிக்கொண்டே இருக்கிறார்.

பள்ளித் தருணங்களை இன்னும் கூட நெகழ்ச்சியாக சொல்லி இருக்கலாம்.என்கிட்டே கேட்டிருந்தால் டெம்போவில் அனுப்பி இருப்பேன். பள்ளிப்பருவம் பன்னீர் புஷ்பங்கள் படத்தை ஞாபகப்படுத்துகிறது.பிற்பகுதி  கடைசி விதாவ சாயல்.

தங்கள் சண்டைகளை தாங்கள் சாடிஸ்டிக்காக ரசிப்பது கூட சில இடங்களில் வெளிப்படுகிறது.இது டைரக்டரின் வெற்றி.

சமந்தா நித்யாவாக வாழ்ந்திருக்கிறார்.கொள்ளை அழகு.கொள்ளை எமோஷன்ஸ்.ஜீவாவும் அசத்தல்.ஒரு மிடில்கிளாஸ் பையனின் குற்ற உணர்ச்சியும்,பொறுப்பும்,பயமும் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார்.ஆனால் அவர் குடும்பதான்... அண்ணன் பவுன்சர் மாதிரி இருக்கிறார். இவர் ஒரு தமிழ் பேசுகிறார்.அப்பா “குற்றம் நடந்தது என்ன” ஜி தமிழ் டிவி டப்பிங்  தமிழ் குரல். கொசுறாக இன்னொரு தம்பி.பாலச்சந்தர் படம் போல்.

வருண் தான் வாங்கிய புது காரை நித்யாவிற்கு காட்டும் சீன் ரொம்ப நெகழ்ச்சியான சீன். இதுமாதிரி அங்கங்கே கொண்டு வந்திருக்கலாம்.

சந்தானம் ஷேவாக மாதிரி டப்பு டிப்பென்று மட்டையை சுத்தி கலகலக்க வைக்கிறார்.இவர் இல்லாவிட்டால் படம் சற்று போரடித்திருக்கும்.இவருக்குத்தான் தியேட்டரில் விசில் பறக்கிறது.காலம்!

சந்தானத்தின் காதலியாக வரும் குண்டுப்பெண் வித்யூலேகா ராமன் கலகலக்க வைக்கிறார்.குண்டுப் பெண் கிண்டல்  இது  என்.எஸ்.கிருஷ்ணன் காலத்திலிருந்து இன்னும் தொடருகிறது. க்ளிஷே.

இவர் நடிகர் மோகன்ராமின் பெண்ணாமே?.


இசை இசைஞானி இளையராஜா.பாடல்கள் எல்லாம் தனியாக கேட்டால் அற்புதம்.ராஜா உணர்ச்சிகளை உள் வாங்கிப்போட்டு இருக்கிறார்.பொருத்தம்?காற்றைக்கொஞ்சம்(சூப்பராக) /சாய்ந்து/என்னோடு/படிக்கல மாமு  அற்புதமாக பொருந்தி வருகிறது.

”காதல் என்பது” இது மேல் வெர்ஷன் ஆஃப் ”முதன் முறை”.

முதன்முறை அண்ட் சற்று முன்பு இரண்டு பாட்டும்  அற்புதமான புது மாதிரியான நெக்ஸ்ட் ஜெனரேஷன் இசைக்கோர்ப்பு.உணர்ச்சிக் கொந்தளிப்பு பாடல்கள்.இதை கெளதம் பின்னணி இசை அளவுக்கு பயன்படுத்தி உள்ளார். மாண்டேஜில் விட்டு விட்டு வருகிறது.

இன்னும் கூட கவனமாக ஹோம் ஒர்க் செய்து பொருத்தி இருக்கலாம். எக்கசக்கமாக பாடல்களை  தலைகால் புரியாமல் வாங்கிவிட்டு எங்கே பொருத்துவது என்று தெரியாமல் “சொருகின” மாதிரி இருக்கிறது.என்னோடு வா வா ஆரம்பகால காதல் அரும்பும் காலத்தில் வரப்போகிறது என்று நினைத்தால் வேறு பருவத்தில் வருகிறது.

பின்னணி இசை காலத்திற்கு ஏற்றார்போல் இவ்வளவுதான் இந்தப்படத்திற்கு முடியும் என்று அளவோடு நிறுத்தி இருக்கிறார்.தேவையான உணர்ச்சிகளை ஏற்படுத்துகிறது.

எப்போதுமே ராஜா தனக்குப் பொருத்தமில்லாத பாடலை பாடுவதை நான் ரசிப்பதில்லை.இதில் “வானம் மெல்ல”.இந்தப் பாடல் சம்பந்தம் இல்லாமல் மாண்டேஜில் ஓடுகிறது.இதில் வரும் உணர்ச்சிகள் எல்லாம் எவ்வளவு  பேர் உள் வாங்க முடியும்.(இதில் வரும் மூன்றாவது இண்டர்லூட் அட்டகாசம்.
சிடியில் இல்லை.)

அடுத்து ஒரு சோகமான நித்யா காட்சியில் இவர் பின்னணியில் இரண்டொரு வரி தன் கட்டைக் குரலில்பாடுகிறர்.தியேட்டரில் சிரிக்கிறார்கள்.தேவையா?வேறு அற்புதமான இசைக்கருவி இசையை கொடுத்திருக்கலாம்.ஆனால்“சாய்ந்து” பாடலை யுவன் ஆரம்பிக்கும் போது தியேட்டரில் விசில் பறக்கிறது.

யதார்த்தம் இதுதான் ஞானி சார்!

நான் பார்த்த அன்று இளைஞர்கள் படத்தை ரசிக்கத்தான் செய்தார்கள்.படம் ஓகேதான்.

லைப் ஆஃப் பையும் நானும் பின்னே அதிஷாவும்

$
0
0
பேஸ்புக்கில் லைப் ஆஃப் பை படத்தைப்பற்றி என் கருத்தை எழுதி இருந்தேன்.அது “ படத்தில் முக்கியமான விஷயமான புலிக்கும் அந்தப் பையனுக்கும் இடைய உள்ள ஆத்ம உணர்ச்சிகள் சரியாக வெளிப்படவில்லை மற்றபடி காட்சிகளில் ஒரு வித அமானுஷ்யத்தை என்னால் உணர முடிகிறது.’

இதற்கு அதிஷா ” சேம் பீலிங்” என்று கமெண்ட் போட்டிருந்தார்.அவர் தமிழில் இதைப் பார்த்ததாகவும் வளவளவென்று ஓவர் தத்துவம் பேசுகிறார்கள் என்றும் கூறி இருந்தார். அடடா.. தமிழில் பார்த்திருக்கலாமோ (நமக்கு கொஞ்சம் தத்துவம் பிடிக்கும்) என்று யோசனை வந்தது.ஆனால் தமிழ் பதிப்பு இருக்கும் தியேட்டர்கள் எல்லாம் ரொம்ப ”தொலவு”.

பார்த்திருந்தால் ஒரு வேளை ஆத்ம உணர்வுகள் வெளிப்பட்டிருக்குமோ?

சரி விஷயத்திற்கு வருகிறேன்.பல பல வருடங்களுக்கு முன்பு எனக்கும் ஒரு குளவிக்கும் இடையே நடந்த 7 நிமிட திகில் போராட்டத்தில் ஒரு ஆத்ம/ஆன்மீக உணர்வு அல்லது ஏதோ ஒன்று என் மீது படர்ந்து அமைதியாக்கியது.

அது ஒரு பிரவுசிங் செண்டர்.முடை நாற்றம் வரும் செண்டர்.மத்தியான வேளை.ரொம்ப ரொம்ப குட்டி வொர்க் ஸ்டேஷனில் நான் பிரவுஸ் செய்துக்கொண்டு இருக்கிறேன்.என் தலைக்கு மேல் சின்ன வெண்டிலேட்டர்.ஓனர் சாப்பாட்டிற்கு போய்விட்டார்.நான் மட்டும்தான்.


பிரவுசிங்கில் ஆழ்ந்து இருக்கும்போது வெண்டிலேட்டர் வழியாக விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று ஒரு பூச்சி என் காதருகில் அந்தரத்தில் ஹெலிகாப்டர் போல் சிறகடித்தபடி.அது குளவி (டொக்கென்று கொட்டும்)என்று தெரிந்ததும் உடம்பு உதறி தலையை திருப்பியதும் நேராகப் போய் மானிடரில் ஒரு முட்டுமுட்டிவிட்டு மீண்டும் என் முகத்தருகே அந்தரத்தில் விர்ர்ர்ரென்று  எங்கே லாண்ட் ஆகலாம் என்று யோசித்தப்படி.உயிர் பயத்தில் சட்டென்று மவுசை(மவுஸ் பேட் இல்லாத மவுஸ்) எடுத்து தலை கிழாக(பின் பக்கம் வெயிட் ஜாஸ்தி) திருப்பியபடி சூசூ சூ என்று நடுங்கிக்கொண்டேமுகத்தைத் தள்ளி வைத்துக்கொண்டு  அதை விரட்ட முயற்ச்சித்தேன்.

ஆனால் மவுஸ் எட்டவில்லை.மவுஸ் அடியில் இருக்கும் அழுக்கான ரோலிங் பாலில் கவரப்பட்டு அதை நோக்கி விர்ர்ட்டது.பயத்தில் கையை உதறியவுடன் மவுஸ் சைடில் விழுந்து தொங்கியது.ஏமாற்றத்தில்(கோபத்தில்)அதை விட்டுவிட்டு மீண்டும் என் முகத்தில் விர்ர்ட்டது.
Wasp - Gangnam Style

அடுத்து கழுத்தை பின்னே தள்ளியவாறு ஹார்டு டிஸ்கில் இருக்கும் சிடியை எடுத்து அதை ஆயுதமாக பயன்படுத்த பட்டனை பிரஸ் செய்தேன்.ஒர்க் ஆகவில்லை.அது  டம்மி  டிஸ்க் என்று தெரியவந்தது.

அடுத்த 10 வினாடி அமைதி.குளவி அதே பொசிஷனில்  அந்தரத்தில் விர்ர்ர்ர் அடிக்க நான் அதை கவனமாக பார்த்துக்கொண்டிருந்தேன்.

உதட்டை ஈரமாக்கிக்கொண்டு உற்று பார்த்தபடி  “ ஏய்.. உனக்கு இப்ப என்ன வேணும்.உன்னோட மண் கூட்ட தேடறீயா.....அதோ அங்க இருக்கு பாரு” என்று வெண்டிலேட்டரை கை காட்டினேன்.

அது சற்று நகர்ந்துவிட்டு மீண்டும் தன் பழைய இடத்திற்கே வந்தது.இரண்டு பேரும் கிட்டத்தட்ட இரண்டேகால் நிமிடம் இப்படியே நேருக்கு நேர் ஆத்ம உணர்வுடன் பார்த்தபடி (என் உதட்டில் புன்னகை கொஞ்சம் தவழத்தான் செய்தது) இருக்க திடீரென்று எஸ் வடிவில் மாறி மாறி  விர்ர்ர்ட்டு  பறந்து சடக்கென்று வெண்டிலேட்டர் வழியாக பறந்தது.

வெண்டிலேட்டர் வழியாக  குளவிக்குப் பதிலாக பெங்கால் டைகர் குதித்திருந்தால்?


டெல்லி கேங் ரேப்பும் சினிமா சிங்கிள் ரேப்பும்

$
0
0
டெல்லி கேங்ரேப் கொடூரமானது.நாடே ரெளத்திரமாகி சமூக அக்கறையோடு பொங்கி எழுந்தது.ஆனால் எழுபது  அல்லது எண்பதுகளில் (90களில் கூட??)வந்த சில  இந்திய சினிமாக்களில்  கற்பழிப்புக் காட்சிகள்  கொஞ்சம் கூட சமூக அக்கறை இல்லாமல் வேணுமென்றே திணிக்கப்பட்டு  காமத்தில் காய்ந்துகிடக்கும் ரசிகர்களை வெறியேற்றியது.சென்சார் அதை கலைக்கண்ணோடு பார்த்து சர்டிபிகேட் வேறு கொடுத்தது.எல்லாம் ஒரு காலகட்டம்.

வித விதமான ரேப் சீன்கள்.இந்தியனின் மூளையை வித வித கேங் ரேப் செய்து வக்கிரத்தை பீச்சிவிட்டுப் போய் இருக்கிறார்கள்.இப்போது நினைத்தால் வெட்ககேடாக இருக்கிறது நானும் ரசித்தவன் என்பதில்.


ஒரு படத்தில் கர்ப்பிணிப்பெண்ணை பல பேர் கற்பழிக்க முயல்வதாக காட்டப்பட்டது.வேறொரு படத்தில் இம்சை செய்ய நெருங்குபவனை “ஆணையிட்டேன் நெருங்காதே” என்று டைம்ங்காக பாட்டுப்பாடுவார் கதாநாயகி.


போஸ்டர்களில் வில்லன் புடவையின் முந்தானையை பிடித்து இழுத்தப்படி இருக்க பெண்  தன் புடைத்து நிற்கும் மார்ப்பின் குறுக்கே இரு கையையும் எக்ஸ் வடிவத்தில் வைத்து மறைத்தப்படி பீதியுடன் பார்ப்பார்.ஒரு காலத்தில் டிரெண்டாகவே இருந்தது.ஏன் செண்டிமெண்டாக கூட இருந்தது.
கதாநாயகிகள்  நேர்காணலின்  போது “நீங்கள் கற்பழிப்புக் காட்சிகளில் நடிக்க ஆட்சேபம் தெரிவிப்பீர்களா?” என்று கேட்டால் பதில் “ கதைக்குத் தேவைப்பட்டால் நடிப்பேன்” பதில் என்று வரும்.


அப்போதையஅப்பாவியான புதுமுகங்கள் இதில் இரையாக்கப்படுவார்கள்.வூடு கட்டி கதற கதற கற்பழிப்பார்கள் (வன்புணர்வார்கள்).அப்போதைய தியேட்டர் வரும் ரசிகர்கள் முக்கால்வாசி பெண்கள் என்பதால் இப்படி பெண்கள் வதைப்படுவதை அனுதாபத்தோடுப் பார்த்து படத்தை ஓட விடுவார்கள்.



பார்முலாபடி ராமதாஸ்,அசோகன்,மனோகர்,கண்ணன்,சங்கிலி முருகன்,நம்பியார்(சபரிக்கு மாலை போட்டுக்கொண்டால் தவிர்ப்பார்),தேங்காய் சீனுவாசன்,எம்.ஆர்.ஆர்.வாசு போன்ற வில்லன்கள்  வழக்கமாக இந்த வேலையை செய்வார்கள் என்று இல்லை.எம்ஜியார்,சிவாஜி,முத்துராமன்,கமல்,ரஜினி,ஏவிஎம் ராஜன்,ஜெய்சங்கர்,மம்முட்டி,விஜயகுமார்,ஜெய்கணேஷ் போன்ற கதாநாயகர்களும் புடவையைப் பிடித்து இழுத்திருக்கிறார்கள்.

ஆனால் இந்த கதாநாயகர்கள் ரொம்ப நல்லவர்கள்.போதையிலோ,மனநிலை பிழன்ற நிலையில் தெரியத்தனமாகதான் இந்தத் தப்பை செய்வார்கள்.பின்னால் திருந்தி மன்னிப்பு கேட்பார்கள்.

சில சமயம் இரட்டையராக இருந்து அதில் ஒருவன் கெட்டவனாக இருந்து இதைச் செய்வார்.

சில முன்னணி கதாநாயகர்கள் டுயூட் காட்சிகளைப் பார்க்கும்போது கேங் ரேப்பே  பெட்டர் என்று தோன்றும். 

இதில் மாபெரும் அதிர்ச்சி குடும்பப் படம் என்ற லேபிளில் இவ்வகையான காட்சிகள் இடையே திணிக்கப்பட்டிருக்கும்..


நடிகர் ஸ்ரீகாந்த் இதில் கோல்ட் மெடல் வாங்கி “நவீன துச்சாதனன்” என்ற பட்டமும் இவருக்கு உண்டு.


ஹிந்தியில் தோரஹா என்ற படம்தான் கற்பழிப்புக் காட்சிகளுக்கு முன்னோடி என்று நினைக்கிறேன்.அது தமிழில் “அவள்” என்று  கற்பழிப்புக் காட்சிக்காகவே ரீமேக் செய்யப்பட்டு படம் பணால் ஆகியது.இதை அடுத்து ஜரூரத் என்ற படத்தில் கூட ரேப் சீன் இருந்ததாக கேள்வி.

பெண்களின் இந்திய தேசிய உடையான இந்தப்புடவை  இருக்கிறதே கற்பழிப்புக்கு ரொம்ப user friendlyயாக  (தோதாக) இன்ச் பை இன்சாக ரசிகர்களை உசுப்பேற்றும்.100% உசுப்பேற்றியாயிற்றா என்று கன்பேர்ம் செய்து விட்டுதான் கதாநாயகன் காப்பாற்றுவதற்கு வருவார்.

ரேப்பை மையமாக வைத்து கதை புனைந்த படங்கள் என்று ஒரு சீசன் இருந்தது.






அம்மாவின் இழப்பும் பொசுக்கென்று போவதும்

$
0
0
பதிவுப்போட்டு ரொம்ப நாளாகிவிட்டது.சமீபத்தில் ஏற்பட்ட அம்மாவின்(13-03-13) மறைவு முக்கியமான காரணங்களில் ஒன்று.வயது 87.படுத்தப்படுக்கையாகி  யாருக்கும் தொந்திரவு இல்லாமல் சடக்கென்று பூ உதிர்வது உதிரவேண்டும் என்ற ஆசை நிறைவேறாமல் படுத்தப்படுக்கையாக இருந்துதான் உதிர்ந்தார்.

அம்மா கும்பிடும் கடவுள்கள் அவரை பொசுக்கென்று உதிரவிடாமல் இரண்டரை மாதம் வெயிட்டிங் லிஸ்டில் வைத்துத்தான் அழைத்துச்சென்றார்கள்.

கடைசி பத்து நாள் நினைவு தப்பித்தான் கிடந்தார்.
 

சிதைந்துவரும் கூட்டுக்குடும்ப அமைப்பில் அவுட் சோர்சிங் நர்சுகள் கவனிப்பில் படுத்தப்படுக்கையாக கிடப்பது மிகவும் அவலமான ஒன்று.அம்மா செய்த அதிர்ஷடம் நான் பக்கத்தில் இருந்தது.தினமும் ஒரு மணி நேரம் மட்டும் அவுட்சோர்சிங் நர்ஸ்.உடம்பு துடைத்துவிடுதல் மற்றும் இயற்கையின் உபாதைகளை நீக்கி சுத்தம் செய்தல்.

படுத்தப் படுக்கையில் மிகவும் கொடூரமானது உடம்பில் வரும் படுக்கைப் புண்.பெட் சோர்(bedsore) எனப்படும் pressure ulcer.காரணம் “படுத்தப் படுக்கை”.அதுவும் ஒரே போசில் படுப்பது.அம்மாவிற்கும் வந்து அவஸ்தைப் பட்டார்.இதற்காக காற்றுப்படுக்கை வாங்கி (போட்டோவில் நீலநிறத்தில்). ஆனால் அது ஒரளவுக்குத்தான்.அதனால் தினமும்  எட்டு அல்லது ஒன்பது முறை அப்படியும் இப்படியுமாக அம்மாவைத் திருப்பி  படுக்கும் நிலையை மாற்றுவது.

அவரைத் திருப்பும்போது அவர் எழுப்பும் ஓலம் மிகவும் சோகமானது.

நல்ல வேளையாக என் அம்மா வேறு ஒரு விஷயத்தில் அதிர்ஷடம் செய்தவர்.பல மூத்தகுடிமகள்/ன்கள் வருடகணக்கில் படுத்தபடுக்கையாக கிடக்கிறார்கள் அதுவும் சிலபேர் நினைவில்லாமல் பச்சைகாய்கறியாக.வரும் தலைமுறை படுத்தப்படுக்கை மூத்த குடிமகன்/ள் எதிர்கொள்ளப்போகும் மிகப்பெரிய பிரச்சனை.தனித்துவிடப்பட்ட மற்றும் குழந்தை இல்லா பெற்றோர்களுக்கு மிகவும் சவாலான ஒன்று.

அவுட்சோர்சிங் பற்றி சொல்லும்போது ஒரு விஷயம் நெருடலாக இருக்கிறது.


ஒன்று அல்லது இரண்டு நாள் நர்ஸ் வராவிட்டால்? பொசுக்கென்று தூக்கத்தில் போய்விட வேண்டும்.என் அப்பா அப்படித்தான் போனார்.

மிஸ் ஆனந்தவல்லி இறந்துவிட்டாள்

$
0
0
அன்றைய ஆங்கிலச் செய்தித்தாளை  ஒவ்வொரு பக்கமாக மெதுவாக திருப்பிக்கொண்டே வரும்போது அந்தப் போட்டோவைப் பார்த்தான் ஸ்ரீகாந்த்.உடம்பு உள்ளுக்குள் சற்று அதிர்ந்தது.அதில் இருப்பது ஆனந்தவல்லி.அது நீத்தார் அஞ்சலிக்காக ஒதுக்கப்படும் பக்கம்.

Died peacefully  on 19-04-2013  @  her residence leaving only son A.Kishore.May her soul rest in peace.
 
நாற்பத்து மூன்று வருடம் நான்கு மாதம் பதினைந்து நாட்கள்தான் வாழ்ந்திருக்கிறாள்.மனதில் சோகம் படரஅவள் கண்களையே உற்றுப்பார்க்க அவளும் பதிலுக்கு உற்றுப்பார்த்தாள்.சோகத்தில் காதல் கலந்து இருந்தது. இல்லாததால் காதல் வருகிறதோ?

இப்படி போட்டோவில் பார்ப்பதை கனவிலும் நினைக்கவில்லை.

பக்கத்தை மூடிவிட்டு சிறிது நேரம் கழித்து மறுபடியும் அவளைப் பார்த்தான்.இப்போது புன்னகைத்தவாறு இருந்தாள்.அவனும் புன்னகைத்தான்.போட்டோவில் புன்னகைப் பூத்த ஒரிஜனல் முகம்தான்.சமீபத்தில் எடுத்த போட்டோதான்.புருவம் திருத்தியிருந்தாள்.முகத்தில் அதே அழகு.முடியில் இரண்டொரு நரைகள்.அவள் அணிந்திருந்த புடவையின் கலரும்.... அதே பார்டரில் தைத்த பிளவுசும்.. புன்னகைத்துக்கொண்டான்.மறக்கவே முடியாது.பழசாகவே இல்லை.அவளுக்கும் போல.இதை அணிந்துதான் சமீபத்தில் போட்டோ எடுத்திருக்கிறாள்.பாவமாக இருந்தது.

பேப்பரை சற்று தள்ளிப் பிடித்து  அவளை விழுங்குவது போல பார்க்க ஆரம்பித்தான்.

”என்னங்க அவ்வளவு நேரமா பாக்ககிறீங்க?” மனைவி உஷா.

“இந்தா... நீ பாக்கனம்னு  ரொம்ப வருஷமா சொல்லிட்டு இருப்பயே அவங்க போட்டோவல  ஜம்முன்னு இருக்காங்க” முகத்தில் வலுவாக புன்னகையை வரவழைத்தவாறு சொன்னான்.

“யாரு....?” ஆர்வமாக பார்த்தாள் உஷா.

”ஆனந்தவல்லி”.விவாகரத்து ஆகி பிரிந்து போன முதல் மனைவி.

“ம்ம்ம்ம் .. களையா அழகா இருக்காங்க. ச்சே இவ்வளவு சின்ன வயசிலயா டெத் வரனம்?ரொம்ப பாவங்க”

”கரக்டுதான்...ஆனா சுமங்கலியா போய்ட்டா leaving only son A.Kishore” உஷாவைப் பார்த்து வாய்விட்டு சிரித்தான்.

“எங்க சுமங்கலி...எத உத்து உத்து பாத்துட்டு இருந்தீங்க? இதப் பாருங்க” முறைத்தாள்

பார்த்தான்.போட்டோவின் கிழே  ”மிஸ் ஆனந்தவல்லி” என்று போட்டிருந்தது.


                                             -----------------


ஆறாவது பூதம்

$
0
0

ஆறாவது பூதம்

ஆகாயத்திலிருந்து
தொப்பென்று விழுந்து
புழுதி கிளப்பி
தொடுவானத்தைக் குத்தியபடி
படுத்திருக்கிறது ஒரு தண்டவாளம்


கூர் முனையில் பிரம்மராட்சஸ்
தலைவிரிக்கோலத்துடன் தோன்றக்கூடும்
கோளங்கள்  தீப்பிடித்து உருண்டு வரலாம்
கடல் கொந்தளித்து ஊழி தாண்டவம்
ஆடலாம்

இது சீரியஸ் கவிதையாகையால்
தமிழ்ப் படகாதலர்கள்
பின்னணி கோரஸ் ஹம்மிங்கூடன்
கைகோத்து வர சாத்தியமில்லை

பலபேர் கண்சுருக்கி
எல்லைவரை பார்த்தார்கள்
சில பேர் தண்டவாளத்தில்
காதுவைத்துப்பார்த்தார்கள்

நெட்டுக்குத்தாக ஏணியாக்கி
சொர்க்கத்திற்கு போகலாமா
யோசித்தார்கள்

இரண்டொருவர்
ஜல்லி கற்களை விட்டெறிந்தார்கள்
கற்கள் திரும்பி வரவே இல்லை

நாட்கள் நகருகிறது
பருவங்கள் மாறுகிறது
யுகங்கள் பிரம்மாண்டமாய் பெரிய நிழல்களுடன்
கடக்கிறது

எதுவும் நடக்கவில்லை

அப்படியே உறைந்துபோய்
ஆறாவது பூதமாகிறது
என் டெஸ்க்டாப்பில்









சார்...தந்தி -காட்டன் சாரி- உடல் தானம்- எம்எஸ்வி

$
0
0

சார்.... தந்தி!


அந்தக் காலத்தில் “சார்..தந்தி!” திகில் கிளப்பும் பன்ச் டயலாக்.திகில்செய்தியைப் படித்துவிட்டு உடைந்துவிடக்கூடாது.”ஸ்டார்ட் இம்மியடியட்லி” என்று செய்தி அதட்டும்.போட்டது போட்டபடி வேஷ்டி பனியனோடு அலறியடித்தபடி ஓட வேண்டும்.சீரியஸ்ஸூக்கு ஸ்டார்ட் இம்மிடியட்லி ஓகே “எக்ஸ்பையர்டுக்கு”?அப்போது freezer box கிடையாதோ?

தந்தி மேல் பாசிட்டீவ் பார்வை 10% தான்.

Sow Rani matured என்று கொடுத்தத் தந்தி சேரும் போது How Rani matured என்று சேர்ந்ததாம்.என் வாழ்க்கையில் நாலு அல்லது ஐந்து தந்திகளாவது கொடுத்திருப்பேன்.(ஆபிஸ் தந்திகள்  போனில் கொடுக்கப்படும் போனோகிராம் கணக்கில் நிறைய உண்டு).”We liked your daughter proceed further" உறவுக்காரர்  வீட்டின் தந்தி ஒன்றை நான் வாங்கி இருக்கிறேன்.தாத்தா இறந்தபோது அப்பாவிற்குக் கொடுத்தத் தந்தி “Father expired start immediately". பாதர் இடத்தில் ஏன் கிராண்ட் பாதர் போடக்கூடாது என்ற குழப்பம் தீர ரொம்ப நாளாயிற்று.

கல்யாண மண்டபத்திற்கு வரும் வாழ்த்துத் தந்திகளை சரியாக இலை போடும் நேரத்திற்குக் கொண்டு கொடுப்பார்கள்.அதன் வாசகம் 'சொர்க்கத்திலிருந்து தனியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிர்வாதங்கள் தம்பதிகள் மேல் பொழியட்டும்”

செல்போன்கள்  மற்றும் அதன் டவர்கள் “டிவிட்.. டிவிட்...டிவிட் ”குருவிகளை கொஞ்சம் கொஞ்சமாக அழித்தமாதிரி இந்தக் “கட் கடகட கடகட” தந்தியும் ஜுலை 15 முதல் முடிவுக்கு வருகிறது.கிராமத்து மக்களும் ராணுவத்தில் வேலை செய்பவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது.

சாவப்போவதை முன்கூட்டியே தெரியபடுத்திவிட்டதால் வேஷ்டி பனியோடு ஓட வேண்டாம்.

காட்டன் புடவை


ஒரு காலத்தில் (சூடிதார் இல்லாத காலம்) கல்லூரி மாணவிகள் மற்றும் ஆபிஸ் கோயிங் பெண்களிடம் புசு புசு காட்டன் புடவை அணிவது ஒரு பேஷனாக இருந்தது.ஒரு சமயம் டிரெண்டாகவே இருந்தது.பாவாடைத் தாவணிக்கு நல்ல மாற்றாக இருந்தது.

இந்தப் புடவையில் ஆல் இன் ஒன் கிடைத்தது.அதாவது கண்ணியம்+ஸ்டைல்+ரிச்னெஸ்+கவர்ச்சி+பாரதமாத இந்தியத்தனம்+மெயிண்டனென்ஸ்+சிம்பிளிசிட்டி+மிடில்கிளாஸ் மற்றும் பல.

நடையே வித்தியாசமாக மாறிவிடும்.என் அபிமான நடிகை ஸ்ரீப்ரியாக்கு இந்த உடையில் கூடுதலாக ஒரு grace and poise(நேர்த்தி & நிதானம்?) இருக்கும்.


சினிமாவில் ஸ்ரீப்ரியா,சுகாசினி,ஷ்பனா ஆஸ்மி,ஸ்மீதா பாட்டீல்,ஷோபா அர்ச்சனா,அருந்ததி ( மிடில்கிளாஸ் ஆபிஸ்கோயிங் லுக்?) அணிந்து ஒரு டிரெண்டை உருவாக்கினார்கள்.படங்கள் மத்தியதர ரகத்தைச் சேர்ந்த படங்கள்தான் காரணம்.

இப்போது இரண்டுமே காணாமல் போய்விட்டது.
இவங்க மிடில் கிளாசா?








காண்டு:

திரைப்பட இசையில் எந்த இசையை மேற்கோள் காட்டினாலும் தொண்ணூறு சதவீதம் இளையராஜாவின் இசையை மேற்கோள் காட்டுவதால் அதற்கு முன் இருந்த ஜாம்பவான் எம்.எஸ்.விஸ்வநாதன் ரசிகர்கள் “காண்டு” ஆகிறார்கள்.

“மவனே ..ராஜாதான் இசையே கண்டுபிடிச்சாருன்னு சொல்வானுங்க போல”

எம் எஸ் வி சினிமா பாடல்களில் இருந்த கர்நாடக கடினத்தை மெலிதாக்கி மெல்லிசையாக்கியவர்.பல புதுமைகள் செய்தவர்.இவர் இளையராஜாவுக்கு முன்னோடி.அடுத்தக் கட்டத்திற்கு கடத்தியவர்.ஆனால் அதற்கு அடுத்தக் கட்டத்திற்கு கடத்தவில்லை.

தங்கத்தில் முகம் எடுத்து.... சந்தனத்தில்
சிவாஜி(தெய்வமே.... தெய்வமே...) மற்றும் எம் ஜி யார் (என் அண்ணாவை ஒரு நாளும்) உடல் மொழிக்கு டியூன்களைப் போட்டு போட்டு போட்டு போட்டு இளைத்து போய்விட்டார்.ராஜா ரசிகர்கள் எம் எஸ் வியும் மற்றும் அவரின் முன்னோடிகளையும் கேட்பது  எம் எஸ்விக்கும்  மற்றும் ராஜாவிற்கும் நல்லது.

விரிவான கட்டுரை மற்றொரு நாளில்.


உடல் தானம்

இறந்தப் பிறகு உடலை  பரிசோதனைக்கு மருத்துவக் கல்லூரிக்கு தானம் கொடுப்பதாக சில பிரபலங்களும் மற்றவர்களும் உறுதி அளித்துள்ளார்கள். இந்தத் தானத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.எங்கிருந்து வந்தோமோ அதே இயற்கையுடன் (நெருப்பு அல்லது மண்) கலப்பதுதான் உடல் மற்றும் ஆன்மாவுக்குச் செய்யும் மரியாதை.A decent funeral என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.

அனதைப் பிணங்களைக் கூட அதற்குரிய  சகல மரியாதையுடன் புதைப்பது அல்லது எரிப்பதை சமூக நல சங்கம் ஒன்று செய்கிறது.

மருத்துவ கல்லூரியிலும் எவ்வளவு நாள் அதை பாடம் செய்து பாடம் நடத்துவார்கள்.அது கிழிக்கப்பட்டு திறக்கப்பட்டு மீண்டும் மூடப்பட்டு மக்கிப்போய். இப்படி மருத்துவ கல்லூரி வளாகத்தில் இன்னும்  இருந்துக்கொண்டே இருக்க வேண்டுமா? இதற்கும் ஆயுள் உண்டு என்று நினைக்கிறேன்.பிறகு (In)decent funeral???

டாக்டர்கள் யாரும் ஏன் உடல் தானம் செய்வதில்லை?

படைத்தானே....

ஒருகாலத்தில் ஒரு கும்பலில் இருந்து தனியாக படைத்தவர்கள் பின்பு அடுத்து வந்த கும்பலில் இருந்து  தனியாகாமல் காலாவதியாகி ஆகிவிடுகிறார்கள்.ஏன்?

எல்லாம் மாறிப்போச்சு!

பாரதிராஜா தன் செல்ல சப்ஜெக்ட்டான கிராமத்துக் கதையை எடுத்து சொதப்பிவிட்டார். நன்றாக எடுத்திருந்தாலும் பழைய கெத்துடன் மீண்டும் படங்களை இயக்கி இருப்பாரா?

படைப்பாளிகள் என்று சொல்லிக்கொள்ளும் சினிமா இயக்குனர்கள்  பலர் பல படங்கள் இயக்கிவிட்டு அப்புறம் காணாமல்போய்விடுகிறார்கள்.காணாமல்
போனாலும் முன்னாள் இயக்குனர் பந்தாவில் வலம் வருகிறார்கள்.

படைப்பாளிகள்(creative artists)  புதுசு புதுசாகப் படைத்துக்கொண்டே இருக்க வேண்டாமா?காணாமல் போவதற்கு முக்கிய காரணம்(முதுமை/உடல் உபாதை என்றால் தவிர்க்கமுடியாதது).தங்களை இதுதான் எங்கள் பிராண்ட் என்று நிருபித்துவிட்டதால் இதிலிருந்து வெளியே வந்து காலத்திற்கேற்றார் போல் சிந்திக்கமாட்டோம்.இதான் காரணமா? அல்லது கற்பனை வற்றிப்போய்விட்டதா?

விடியும் வரை காத்திரு/நூறாவது நாள்/ராசா மகள்/சிவப்பு ரோஜாக்கள்/டிக் டிக் டிக்/ஆண்பாவம்/மலையூர் மம்பட்டியான்/முந்தானை முடிச்சு/உதிரிப்பூக்கள்/
ராஜபார்வை/ஜானி/இதுமாதிரி இன்னும் விலகி வந்து கொடுத்தவர்கள் ஏன் மீண்டும் கொடுக்கவில்லை.

இப்போது இருக்கும் குறும்பட கும்பலின் கற்பனைத் திறம் எவ்வளவு நாள் தாக்குப்பிடிக்கும்.

டெயில் பீஸ்:

ஒகே...ஒகே.... ரெடியா இருந்தாலும் யாருப்பா பைனான்ஸ் பண்ண தயாரா இருக்காங்க இவங்கள நம்பி?

கனகா/சேரன் பெட்ரூம்/ஜார்ஜியானா/சப்பாத்தி சில்வர் ஜூப்ளி

$
0
0
சமீபத்தில் படித்த சில செய்திகளைக் கடந்து போகும்போது ஏன் இப்படி என்று ரொமப யோசிக்கவே செய்தது.அறிவுக்கு அடங்காமல்  செய்திகளின் மையம் பிராண்டியது.செய்திகளின் நாயகர்கள் ஏன் இவ்வளவு உணர்ச்சிபூர்வமாக அணுகிறார்கள்.இது சரியா தவறா?


இவைகள் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் சற்று திகிலாகவும் இருக்கிறது.எல்லா செய்திகளும் ஜீனியர் விகடனில் படித்தது.

செய்தி - 1

செல்வி ஜார்ஜியான தாம்சன்( வயது 19) படிப்பில் கெட்டிக்காரி.மிகவும் துறுதுறுப்பான பெண்.பதினாறு வயதில் அமெரிக்கா நாசாவால் அழைக்கப்பட்டார்.அவருடைய கனவு விண்வெளி ஆராய்ச்சி,ராக்கெட் விஞ்ஞானம் இவற்றில் கொடிகட்டி பறப்பது.இதையொட்டி விண்வெளி படிப்புக்காக லண்டன் சென்றவர் அங்கு ஹாஸ்டலில்  தூக்கி மாட்டி இறந்துபோனார்.கொலையா தற்கொலையா விசாரணையில் இருக்கிறது.

அப்பா... ப்ளீஸ் சாரிப்பா...!


இனி செய்தியின் மையம்:
தன் பெண்ணின் கனவு நிறைவேறுவதற்கு அப்பா தாம்சன் இவரின் படிப்பு விஷயமாக செய்த ஒரு செயலை சொல்கிறார்....

“12ம் வகுப்பு தேர்வு நடக்கும்போது என் மனைவி இறந்துவிட்டாள்.அந்தச்சாவு என் மகளை பாதித்துவிடக் கூடாது என்பதற்காக மனைவியின் இறந்த உடலை வீட்டுக்கு எடுத்துவராமல் தனியார் குளிரூட்டும் நிலையத்தில் நான்கு நாட்கள் வைத்திருந்தேன்.தேர்வு முடிந்த பிறகுதான் அஞ்சலி செய்து அடக்கம் செய்தேன்”

செய்தி -2

இயக்குனர் சேரன்தன் மகளின் காதல் விவகாரத்தில் தன் பெண் காதலனுடன் செல்போனில் பேசுவதைப்பற்றி  குறிப்பிடும்போது ....

“ நிறைய பணக்காரங்க வீட்டில மகள்,அப்பா,அம்மா எல்லோருக்கும் தனித்தனியா பெட்ரூம் இருக்கும்.ஆனா எனக்கு கல்யாணம் ஆனதில் இருந்து நான், மனைவி, என் ரெண்டு மகள் நாலு பேருக்கும் ஒரே பெட்ரூம்தான்”



செய்தி -3
நடிகை கனகா இறந்ததாக வதந்தியும் அதன் பிறகு நடந்த பரபரப்பான நிகழ்ச்சி ஒன்று... 

தட கள போட்டிமுடிவு. வின்னர் இஸ் ..........
 ”(கனகா வீடு)வீட்டுக்குள் நுழைய முடியாதபடி கேட்டில் இரண்டு பூட்டுக்கள்.தட்டிப்பார்த்துத் திறக்கப்படாததால் பத்திரிக்கையாளர்களும் போலீஸாரும் கேட்டைத் திறக்குமாறு சத்தம் போட்டனர்.வீட்டுக்குள் இருந்து எந்த ரியாக்‌ஷனும் இல்லை.கேட்டை தாண்டிக்குதித்து போலீஸார் உள்ளே செல்ல,அவர்களோடு மீடியாக்களும் சென்றன.........

வீட்டின் கதவும் பூட்டப்பட்டிருந்ததால்,பின்பக்கம் சென்று பார்த்தனர்.பின்பக்க கதவும் உட்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருக்கவே, கதவை உடைத்துத் திறந்து பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர் போலீசார்”

செய்தி(கொஞ்சம் பழசு)-4

நீயா நானாவில்  ஒரு பெண்மணியின் பேச்சு:  
ஏய் சப்பாத்தி ....நீயா நானா ஒரு கை பாத்திடலாம்
 
கணவன்: இருபது வருஷமா சப்பாத்தி சரியா பண்ணதே இல்ல இவங்க

மனைவி:என்னமோ தெரியல நானும் டிரை பண்றேன்.ஒண்ணு தண்ணி கூடிடுது.அதுக்கப்பறம் எடுத்து தேய்ச்சா வரமாட்டேங்குது.நானும் மாவத்தொட்டு தொட்டு தேய்ச்சுப் பாக்கறேன் வரவே மாட்டேங்குது.இந்த ஜூலை வந்தா 25 வருஷம் ஆகப்போகுது.

பெண்ணின் பேச்சு 8.11 - 8.50



செய்தி(ரொம்ப பழசு)-4
முல்லைக்கு தேர் கொடுத்தான் மன்னன் பாரிவள்ளல்.


time being கொடுத்திருப்பாரோ?

_______________________________________


நீயா நானாவில் நான் ரொம்ப ரசிப்பது பங்கேற்பவர்களின் முகபாவங்கள்.விஜய் டிவி இதற்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்து க்ளோஸ்-அப்பில் நிறைய முகங்களை காட்டுவார்கள்.இதில் கணவனோ மனைவியோ தங்களின் அன்றாட வாழ்வின் லூசுத்தனமான அல்லது காமெடியான நடவடிக்கைகளை சொல்லும்போது  மற்றவர் sadistic pleasureஓடு ரசித்தவாறே சிரிப்பது.

உண்மையான கலாய்த்தல்(கணவனை புலம்ப விட்டுட்டு ரசிப்பது)
மற்றவகை முகபாவங்கள்:


ரொம்ப ஓட்டாதிங்கடி




என்ன பண்றது இந்தக் காஸ்ட்யூம்க்கு இப்படித்தான் நளினமா சிரிக்கனும்



வெரி நைஸ்...

நான் மெட்ராஸில்தான் இருக்கிறேன்.

$
0
0
நான் மெட்ராஸில் இருந்துக்கொண்டே மெட்ராஸில்தான் இருக்கிறேன் என்று ஐந்து அல்லது ஆறு வயதில்தான் தெரியும்.

மெட்ராஸுக்குத் தள்ளி நூற்றுக்கணக்கான மைல்கள் தூரத்து ஊர்காரர்கள் ஆவலோடு ”மெட்ராஸ்” போகிறேன் என்று சொல்கிற மாதிரி சும்மா 10 கி.மீ தள்ளி அதே சென்னை பின்கோடில் குரோம்பேட்டைக்காரர்களில் (வசித்த ஊர்) படிக்காதவர்கள் சிலர்  ”மெட்ராஸ்” போகிறேன் என்று சொல்வதுண்டு.படித்தவர்கள் “சிட்டி” போகிறேன் என்று சொல்வார்கள்.எங்களுக்கும் அவ்வளவு மோகம் மெட்ராஸ் மேல்.


மெட்ராஸின் நிறுவன நாள் 22-08-1639 என்று சொல்லப்படுகிறது.மெட்ராஸூக்கு 374 வயது முடிந்து 375 வயது ஆரம்பித்துவிட்டது.22-8-13முதல் 25-08-13 வரை மெட்ராஸ் வாரம் கொண்டாடப்படுகிறது.

ஈஸ்ட் இந்தியா கம்பேனி தெலுங்கு (அரசர்)நாயக்கர்களிடமிருந்து வாங்கி இருக்கிறார்கள்.அதனால்தானோ என்னவோ சென்னையின் நிலப் பத்திரங்களின்(Parent document) ஓனர்கள் நாயுடு அல்லது நாயக்கர் பெயர் கண்டிப்பாக இருக்கும்.

இப்போது வாங்கினால் சென்னையின் விலை என்னவாக இருக்கும்?ஒரு கொசுகூட இல்லாத 15 வருஷம் கேரண்டி கொடுத்தால் நான் வாங்குவதற்குக் தயார்.

மெட்ராஸ் எத்தனை மெட்ராஸடி..!

மின்சார ரயிலில் 15வது நிமிடத்தில் குரோம்பேட்டையிலிருந்து கிண்டியை நெருங்கும்போது மெட்ராஸ் வந்துவிடும்.ஆனால் சினிமாவில் மெட்ராஸ் என்றால் சென்ட்ரல் ரயில்வே அல்லது எல்.ஐ.சி. கட்டிடம்.

பள்ளிச்சுற்றுலாவில் மீயூசியம் (செத்த காலேஜ்),ஜு(உயிர் காலேஜ்),அடையாறு ஆலமரம்,அண்ணா சமாதி,செயின் ஜார்ஜ் கோட்டை.

வீட்டோடு பார்த்த மெட்ராஸ் ரங்கநாதன் தெரு,நல்லி,குமரன்,பாட்டா,மிதிலாபுரி,ஆனந்தவல்லி கல்யாண மண்டபம்,அடஞ்ஞான் முதலி தெரு,அறுபத்துமூவர் மைலாப்பூர்,அயோத்திய மண்டபம் மேற்கு மாம்பலம்.

தலைவர்கள் இறந்துவிட்டால் தெரியும் மெட்ராஸ் மவுண்ட்ரோடு மற்றும் ராஜாஜி ஹால்.

கல்லூரி பருவத்தில் பார்த்த மெட்ராஸுக்கு ஆங்கிலம் மற்றும் இந்திப்படங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.தியேட்டர் சத்யம், சபையர்,தேவி காம்ளக்ஸ்,உட்லெண்ட்ஸ் டிரைவ் இன் ஓட்டல்,புவுண்டன் பிளாசா,தி.நகர் ஐஸ்கிரீம் பார்லர்.


தேவி தியேட்டர்
தேவி தியேட்டரில் படம் பார்ப்பது ஒரு கெளரவம்.கொடுக்கும் காசுக்கு தரமான ஜிலுஜிலு ஏசி, செண்ட்,ஒலி-ஒளி,இருக்கைகள்.உள்ளே நுழைந்தது முதல் வெளிவரும் வரை மிதந்தபடி இருப்போம்.மூன்று வகையான ஜனங்கள் கலந்துகட்டியாக படம் பார்க்க வருவார்கள்.தேவி பாரடைஸ்(தமிழ்),தேவி(ஆங்கிலம்/தமிழ்/ஹிந்தி), தேவிபாலா(ஹிந்தி/தமிழ்).
காமதேனு தியேட்டர்-லஸ் கார்னர்

1978-நான் (உட்கார்ந்தபடி வலது கடைசி)கைக்கட்டி இருப்பவரின் இடதுபக்கம்
பைக்கிராப்ட்ஸ் ரோடில் இருந்த சந்திரிகா ஸ்டியோவில் எடுத்தது.இப்போது  அங்கு இருக்கிறதா????


போட்டோவில் எல்லோரும் அப்போதைய ஹேர்ஸ்டைலான “ஸ்டெப் கட்டிங்” வைத்திருப்போம்.நுங்கம்பாக்கத்தில் உள்ள ரஞ்சித் பியூட்டி பார்லரில் ரூ25 (சாதா கட்டிங் 3.00 குரோம்பேட்டையில்) கொடுத்து செய்துக்கொள்வோம்.
ஹிந்தி ஹீரோக்களின் பாதிப்பு.

அப்போது மெட்ராஸில் மல்லிகைப்பூ விற்பவர்கள்  நிறைய பேர் தென்படுவார்கள்.பெரும்பாலும் பெண்கள்.இப்போது குறைந்துவிட்டார்கள். கல்லூரி மற்றும் அலுவலக  பெண்கள் மல்லிப்பூ சூடுவது குறைந்துவிட்டது. காரணம் உடை?
பின்னால் ஷோகேசில் இருக்கும் பெண்களுக்கு மல்லிப்பூ செட் ஆகுமா?



மாம்பலம் ஸ்டேஷனில் “இந்த வாரம் ஆனந்தவிகடன் வாசித்துவிட்டீர்களா” நீல கலர் இரும்புபோர்டு இருக்கும்.

இப்போது  இது உயிருடன் இல்லை





 காலத்தின் ஓட்டத்தில் பழையன எல்லாம் கழிந்து புதியன புகுந்து விட்டது. பழையன நினைவில் ஏக்கத்தோடு அவ்வப்போது நிழலாடும்.பெருமகிழ்ச்சி என்னவென்றால் நாம் இழந்ததை எல்லாம் நெட்டில் பொக்கிஷமாக கொட்டிவைத்து  நினைவுகளில் சர்ஃப் செய்ய வைக்கிறார்கள்.

ராஜா ராணி - விமர்சனம்

$
0
0
ஓநாயும் ஆட்டுக்குட்டியும்  இளையராஜாவின் பிஜிஎம்மும் நொந்த ரெவிசெங்கரும் பின்னே ராஜா ராணியும்......


ரொம்ப ஆர்வமாக ஓ-ஆயும் படத்திற்கு முதல்நாள் முதல் ஷோ(12.00 Noon) சங்கம் தியேட்டரில் நெட்டில் புக் செய்து வைத்திருந்தேன்.தானைத் தலைவரின் பிஜிஎம் இந்தத் த்ரில்லர் படத்திற்கு எப்படி செட் ஆகிறது என்று மிக ஆர்வமாக  நுழைந்தால் “ சார்.... பொட்டி வரல..! க்யூப் எண்டர்டெயின்
மெண்டுக்கும் தயாரிப்பாளருக்கும் ஏதோ பிரச்சனை.ரீபண்ட் கொடுக்குறோம் இல்லேன்னா “ராஜாராணி”(இன்றுதான் ரிலீஸ்(27-09-13) படம் போடறோம் பாருங்க”.


படம் இல்லையா? நொந்தே போனேன்.ஓநாய் மாதிரி உள்ளுக்குள் ஓலமிட்டு ஆட்டுகுட்டி மாதிரி ம்ம்ம்மேமே என்று முடித்தேன். பின்னணியில் ஓ-ஆகுட்டியின் பிஜிஎம் “I Killed an angel" சோகமாக.அந்தக்காலத்தில்தான் “இதயவிணை” “அடிமைப்பெண்” ”உலகம் சுற்றும் வாலிபன்” போன்ற படங்களின் பொட்டி வராது.வரும் ஆனால் மூணு மணி என்றால் ஆறுமணிக்கு வரும்.

மிஸ்கினுக்கும் ராஜாவிற்கும் எட்டாம் பொருத்தம்.நந்தலாலா படம் ரெண்டு வருஷமா வரல.இது தியேட்டருக்கு வந்துவிட்டது. ஆனால் பொட்டி வரல.போஸ்டர்தான் வந்திருக்கு.


ஓநாய் இல்லை. ஆட்டுக்குட்டி இல்லை. ராஜாராணி? பார்ப்பதா வேண்டாமா? இதுமாதிரி வழக்கமான படங்களை பார்ப்பதை நிறுத்தி ரொம்ப நாள் ஆயிற்று. இப்போதெல்லாம் ரசிக்கமுடியவில்லை.ஏன்? என் எண்ணத்தை அப்படியே சுகாசினி சமீபத்தில் வெளிப்படுத்தி இருந்தார்.

 //Unless we get out of these mindless comedies and a good-for-nothing fellow trying to win over the heroine kind of films,Tamil cinema will not be taken seriously//

இந்தப் படம் அதை அப்படியே அச்சுஅசலாக பின்பற்றுகிறது.

ஏதாவது வித்தியாசமாக இருந்ததால்தான் சினிமாவுக்கு போவது என்ற முடிவு எடுத்து ரொம்ப நாள் ஆச்சு.மனதை சமாதானப்படுத்திக்கொண்டு ஓநாய் -ஆட்டுக்குட்டி  பதிலாக ராஜா-ராணி.நல்ல காம்பினேஷன்.எதிர்பாராத ரிலீசால் ஆர்யா ரசிகர்களின் விசில் கத்தல் சத்தம் இல்லை.


விமர்சனம்

மெளனராகம்  படத்தை  கொஞ்சம் கூட சீரியஸ்னெஸ் இல்லாமல் வெட்டித்தனமாக எடுத்தால் எப்படி இருக்கும்.அதுதான் ராஜா ராணி.காதல் தோல்விக்கு பிறகும் காதல் உண்டு. வாழ்கை உண்டு.இதுதான் படத்தின் ஆங்கில டைட்டில் கார்டு மெஸ்ஸேஜ். ஆர்யா-நயன் திருமணம்.இருவருக்கும் இதில் இஷ்டமில்லை.இருவரும் ஒட்டாமல் டாம் அண்ட் ஜெர்ரி கணக்காக இருக்கிறார்கள்.படம் விழுகிறது. ரொம்ப சீரியஸ்ஸாக ஓட்டாமல் மெளனமாக இருப்பதாகக்  காட்டினால  மெளன ராகம் சாயல் வந்துவிடும் என்று டாம் அண்ட் ஜெர்ரி.

ஏன் ஒட்டவில்லை? இருவருக்கும் திருமணத்திற்கு முன் காதல் தோல்வி.பிளாஷ்பேக்.கட்டுடல் ஸ்மார்ட்டான ஆர்யா.லட்டான  அழகான நயன்.”சீக்கிரம் சேர்ந்து வாழுங்கப்பா.என்ஜாய் லைப்” என்றாலும் பொறுமையை சோதித்துவிட்டு சேருகிறார்கள்.

ஆரம்பிக்கும்போது ரொம்ப பிரமாதமாய் ஆரம்பிக்கிறார்கள்.ஆகா என்று நிமிர்ந்தால் கொஞ்ச நேரத்தில் படம் தொய்கிறது.


கதாநாயகன் - நாயகி-பிரெண்ட்(சரக்கு சந்தானம் அல்லது டாஸ்மேக் சந்தானம்)-அப்பா-கோபி எல்லோரும் ஜாலியாக இருக்கிறார்கள்.நன்றாக நடிக்கிறார்கள்.குடிக்கிறார்கள்.பெண்களை கலாய்க்கிறார்கள்.காதலிக்கிறார்கள்.குடிக்கிறார்கள்.சைட் டிஷ் சாப்பிடுகிறார்கள். மக்காக லாஜிக் சுயசிந்தனை ஒன்றும் இல்லாமல் இருக்கிறார்கள் அழுகிறார்கள்.செல் பேசுகிறார்கள். காதலிகளைப் பிரிகிறார்கள்.பின்னால் மீண்டும் அழுகிறார்கள்.

சந்தானம் வந்தால் தியேட்டர் அதிர்கிறது. வழக்கமான அவரின் “மச்சான் பொண்ணுன்ன” என்கிற prefixஓடு ஆரம்பிக்கும் வசனங்களை பேசி கைத்தட்டல் பெறுகிறார்.படத்தின் டைட்டில்தான் மாறுகிறது சந்தானம் மாறவில்லை.

கானா பாலா காதில் தோடுகளோடு வருகிறார். நல்ல வேளை பாடவில்லை. ஸ்டிரியோ டைப் ஆகிவிடும் என்று விட்டுவிட்டர்கள் என்று நினைக்கிறேன்.

நூறு ஆண்டு ஆன சினிமாவில் இன்னும் காமெடியன் கதாநாயனுக்கு பிரெண்ட் ஆக இருக்க வேண்டிய கட்டாயம்.கடந்து பத்துவருடமாக add-on ஆக சரக்கு அடிக்க வேண்டும்.அதுதான புதுமை.



ஜெய் இதில் மிகவும் “வித்தியாசமான” ரோல் பயந்தாங்கொள்ளி.நன்றாக செய்திருக்கிறார்.மனதில் நிற்கிறார்.படம் ரொம்ப ரிச்சாக இருக்கிறது.அட்டகாசமான கேமரா காட்சிகள்.பாடல்களில் அருமையான விஷுவல்ஸ் பாடல் காட்சிகள். ஆனால் இசை பொருத்தமில்லாத ஜி வி பிரகாஷ்குமாரின்  ஹை டெசிபல் இசை.கத்தல் பாடல்கள்.

ஆர்யா-நயன்-ஜெய் ரசிகர்களுக்குப் பிடித்த படம்.பொழுதுபோகிறது.


ஓநாயும் ஆட்டுக்குட்டியும் -விமர்சனம்

$
0
0
த்ரில்லர் கதை ஒரு மதத்தின் தத்துவார்த்தங்களோடு கொடுக்கப்பட்டுள்ளது.”தத்துவார்த்தங்களோடு” படத்தில் வரும் சில குறியீடுகளும் பெயர்களும் ராஜாவின் பின்னணித் தொகுப்பு ஆல்பத்தில் வரும் இசையின் பெயர்களும் படத்தின் டைட்டிலும் இப்படி நம்ப வைக்கின்றன.கடைசி முடிச்சு அவிழ்க்கும்போது அவரின் மீட்சி அல்லது விமோசனம் அல்லது /வருத்தப்பட்டு பாரம் சுமப்பது வெளிப்படுகிறது.

ரொம்ப பொறுத்திப்பார்த்தால் குழப்பம்தான் வருகிறது.

சமீபத்தில் Life of Pi  படம் கூட ஆன்மிகத் தத்துவ பின்னணியோடு வந்தது.கமல் “கடவுள் பாதி மிருகம் பாதி” என்று அசட்டுத்தனமாக பாடியபடி ஒரு பாசாங்கு படம் வந்தது.மற்றும் நான் கடவுள், குணா.


மிஷ்கின் சினிமாவின் மொழி தனி.சராசரி படங்கள்போல் உள் வாங்க முடியாது.கதையும் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளும் சடாரென்று யதார்தத்திலிருந்து விலகி நிற்பார்கள்.நாமும் விலகி நிற்போம் மீண்டும் சேருவோம்.டிராமா போல் இருக்கும்.அந்தக் கால அடையார் பிலிம் கல்லூரி மாணவர்கள் எடுக்கும் த்ரில்லர் படங்களில் இப்படி வேண்டாத டிராமாக்கள் இருக்கும்.இப்படிப்பட்ட டெம்பிளேட்டுகளும் இதில் உண்டு.


படத்திற்கு வருவோம். கதை இரண்டு நாள் இரவில் நடக்கிறது (ஓடுகிறது).இரவு மிஷ்கினுக்குப் பிடித்த கேரக்டர்.அதுவும் மஞ்சள் இரவு.

இரவு.ரோடில் குண்டடிப்பட்டு ஒருவன் விழுந்துக்கிடக்கிறான்.அவன் பெயர் Wolf என்கிற எட்வேர்ட்.அவனை மருத்துவம் படிக்கும் சந்துரு (என்கிற ஆட்டுக்குட்டி?)  சிகிச்சை செய்து காப்பாற்றுகிறான்.அன்றைய இரவே Wolf தப்புகிறான்.அடுத்த நாள் இரவில் சந்துருவை Wolf பிடித்துவைத்துக்கொண்டு போலீஸ்ஸிடமிருந்து இடத்திற்கு இடம் மாறி மாறி சென்னைக்குள்ளேயே தப்பிச்செல்கிறான். சந்துருவும் அவனுடன் கைதியாக ஓடுகிறான்.இப்படி ஓடுவது யாரையோ காப்பாற்ற..! யாரைக் காப்பாற்ற?

அதே சமயத்தில் அவனை வேட்டையாட வேறொரு மிருக  கும்பல் அதே மயிலாப்பூர் மஞ்சள் இரவில் mindless ஆக மண்டையைப்பிய்த்துக்கொண்டு துரத்துகிறது.துரத்தலின் இடையே நிறைய பேர் சாகிறார்கள்.அடிபடுகிறார்கள்.

இதற்கிடையே சந்துருவும் தப்பிக்கிறான்.ஆனால் இப்போது அவன் ஆட்டுக்குட்டியாக  Wolfஐ வேட்டையாட துரத்துகிறான்.

போலீஸ்+Wolf+சந்துரு+கும்பல்.பிரேமுக்கு பிரேம் இப்படி துரத்தல் விறுவிறுப்பாக சொல்லப்படுகிறது.கடைசியில் துரத்தல் நிற்கிறது. முடிச்சு அவிழ்க்கப்படுகிறது.படம் நிற்கிறது.காட்டுவாழ்கை உருவகமாக கடைசியில் சொல்லப்படுகிறது.பார்வையாளர்களுக்கு குறியீடுவைத்து க்விஸ் வைக்காமல் கோனார் நோட்ஸ் போட்டு அவரே முடிச்சை அவிழ்க்கிறார்.
Threshold Guardian

அவிழ்க்கும் முடிச்சு யூகிக்கமுடியாதப்படி இருப்பது மிஷ்கினின் திரைக்கதை அமைப்பு.
 
படத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை.குறிப்பாக ரயில் நிலையம் மற்றும் தெருவில் துரத்தும் காட்சிகள்.இரவு ,சுடுகாடு, வெறிச்சோடிய ஸ்டேஷன்,தெருக்கள் படத்திற்கு ஆழம் சேர்கிறது. திகில் கூடுகிறது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் ஹோம்வொர்க் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

Grim Reaper-(சாவின் உருவகம்)
 ஸ்ரீ, மிஷ்கின் அசத்துகிறார்கள்.ஷாஜியும் நன்றாக நடித்திருக்கிறார்.கேமரா பாலாஜி ரங்கா இரவை நம் முன் நிறுத்துகிறார்.

எல்லாம் ஓகே.ஏதோ மிஸ்ஸிங் என்கிற பீலிங் வருகிறது.கடைசியில் அவிழ்க்கப்படும் முடிச்சை நோக்கித்தான் கதை துரத்தப்படுகிறது.படத்தின் நாயகன் அதற்காகத்தான் பாரங்களை சுமந்தப்படி மீட்சிக்காக ஓடுகிறான். பார்வையாளர்களும் அதே அனுதாபத்தோடு ஓட வேண்டாமா?அதன் பிளாஷ்பாக் காட்டினால சாதாரண மசாலா படம் ஆகிவிடும் அல்லது துரத்தலில் விறுவிறுப்பு இருக்காது என்றுதான தவிர்த்திருக்கிறார்களோ?

ஆனால் படத்தின் பின்னணி இசை   Wolfக்குள் இருக்கும்  விமோசனத் தேடலை ஆழமாக வெளிக்கொணர்கிறது.

வீணப்போன கருப்பு மெண்டல் காமெடிப்படங்களுக்கு இந்தப்படம் 1000 மடங்கு மேல்.

இளையராஜா
இந்தத் த்ரில்லர் கதைக்கு இவரை விட்டால் இந்தியாவில் யாரும் கிடையாது. காரணம் தத்துவார்த்த(??) பின்னணியோடு கதை ஓடுகிறது.இவருக்கு இந்தத் தத்துவார்த்தம் எல்லாம் ஒரு விஷயமே கிடையாது. காரணம் அவர் இசையில் வழக்கமாகவேஇருக்கும் ஆத்மா(soul).மற்றும் இதில் வேறு ஒரு ஆச்சரியமான விஷயமும் இருக்கிறது.


அது இதில் இசைக்கப்படும் இசையின் இழைகள்.இதுவரை இசைக்கப்படவில்லை.வழக்கமான தமிழ்ப்பட உணர்ச்சிகள் இல்லை.இல்லாமல் இன்னும் ஆழமாக போகிறது.பழக்கப்பட்டுப்போன ஜானகியோ எஸ்பிபியோ ஷ்ரேயாலோ கார்த்திக்கோ ராஜாவோ இல்லாமல் கருவிகள் நம்மை சிலிர்க்க வைப்பது புதுமைதான்.அதற்காக அன்னியமாகவில்லை. இன்னும் ஆழமாக்குகிறது.குறிப்பாக Walking through life and death இசை படத்தின் ஆன்மாவை  துளைக்கிறது..

திகிலுக்கும் பரபரப்புக்கும் தத்துவார்த்திற்கும் இடையே சர்வ சாதாரணமாக எதையும் கலைக்காமல் மாறி மாறி இசைக்கிறார்.தனி genre ஆகவே இருக்கிறது.

எவ்வளவோ படத்தின் இறுதிக் காட்சிகள் கட்டடத்தின் பேஸ்மெண்டில் தீவிரமாக இயங்கும்.ஹாலிவுட் படங்களும் இதில் அடங்கும். இதில் வரும் பேஸ்மெண்ட் காட்சியில்  ராஜா புகுந்து விளையாடியிருக்கிறார்.

இளையராஜா இசையை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தி இருக்கிறார்.ரொம்ப ரொம்ப லேட்டாக நிகழ்ந்திருக்கிறது.காரணம் அவர் இல்லை.இயக்குனர்கள்.



பி்ளாக் ஆரம்பித்து ஐந்து வருடம்....சகட்டுமேனி- சமந்தா!

$
0
0
06-10-2008 அன்று தமிழ்மணம் வ(ம)லை ஏறினேன்.உச்சிக்கு வந்தேனா?ஐந்து வருடம் ஓடிவிட்டது.வலையேற்ற உதவிய அதிஷாவிற்கும் பதிவுகளைப் பாராட்டி/விமர்சித்து ஊக்கம் கொடுத்த தமிழ்ப்பறவைக்கும் (முதல் பாலோவர்) நன்றி.

அப்பா...
  
 Ervamatin போடுகிறரா?

வலைக்கு வருவதற்கு முன்பும் எழுத்தில் ஆர்வம் உண்டு.பத்திரிக்கைகளில் சிறுகதைகள் எழுதிய அனுபவம் உண்டு.சமூகவலைத் தளங்கள், தொலைக்காட்சி சேனல்கள் வரவால் எழுத்து ஊடங்களில் சிறுகதைகள் சுருங்கிப்போய்  பழைங்கதையாகியது.ஒரு கதவு மூடியது.இன்னொரு கதவு திறந்தது.அது எனக்கே எனக்கான வலைத்தளம் இலவசமாக.வடிகால் ஆயிற்று.உண்டான மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.


திரும்பிப்பார்த்து என்ன சாதனை செய்தேன் என்று யோசிக்கிறேன்.


கட்டட்ற சுதந்திரத்தோடும் சகட்டுமேனிக்குஎழுதித் தள்ளிய கதைகள்,கவிதைகள்,விமர்சனங்கள்,இளையராஜா இசை ரசிப்புகள்,எல்லா சப்ஜெக்ட்டிலும் சகட்டுமேனிக்குக் பதிவுகள்,சினிமா விமர்சனங்கள் துணுக்குகள்,விளையாட்டு  etc. etc. etc., etc., என்று போகிறது.அரசியல்,மதம் லேசாகத் தொட்டுப்பார்த்ததோடு சரி.ஆர்வமில்லை.ஏன் ஆர்வமில்லை? ஏன் வம்பு என்றுதான். ஏதோ எழுதினமா... மக்கள் படிச்சாங்களா.... கமெண்ட் போட்டாங்களா... நாம சந்தோஷம் ஆனமா என்கிற சுயநலம்தான்.

புதிதாக முக்கியமாக இளையராஜா பதிவுகளை ஆத்மார்த்தமாக செய்தேன்.ரசித்தார்கள்.பின் தொடர்ந்தார்கள்.அடுத்து கவிதை எழுதப் பழகினேன்.10 நல்ல கவிதைகளும் 105 மொக்கைக் கவிதைகளும் எழுதினேன்.

சொந்தமாகவே சகட்டுமேனிக்கு ரசனை இருப்பதால் எதையும் ரசித்துப் பதிவு எழுதமுடிகிறது.தி.ஜானகிராமனின் எழுத்து வாசிப்பில் இன்னும் கொழுந்துவிட்டு எரிந்தது.


ஆரம்பித்த புதிதில் கமெண்டுகளுக்கும் பாலோவர் வேண்டி பல்லிளித்ததும் உண்டு.ரூம் போட்டு மற்றவர் பதிவுகளுக்கு பின்னூட்டம் போட்டேன். பதில் மரியாதை செய்தார்கள்.பதிவர் சந்திப்பிற்கெல்லாம் போய் “காட்டி”க்கொண்டேன்.

ஐந்து வருடத்தில் பதிவுலகம் பேஸ்புக் டிவிட்டர் வந்தபிறகு மாறிவிட்டது.இதில் இண்டர் ஆக்‌ஷன் குறைந்துவிட்டது. தூரத்து உறவாகிப்போனது தமிழ்மணம்.

மறக்க முடியாதது ராஜா-ரஹ்மான் சண்டை.நான் ராஜா ரசிகன்.பிளாக் ஆரம்பித்த புதிதில் ஏதோ டீக்கடையில் நின்று கதையளப்பது போல் எழுத பிரச்சனை ஆகி டமால் டிமீல் ஆகிவிட்டது.Fuck,Asshole,Bastard போன்ற வசவுகள் தாறுமாறாக வந்தது. இதில் மன உளைச்சல் என்னவென்றால் கமெண்ட்டுக்கு பதிலிளிக்க “மறுபடியும் முதலிலிருந்து” ஆரம்பிக்க வேண்டி இருந்தது.


சினிமா இசையை நேற்று கேட்டுவிட்டு இன்று கமெண்ட் போடும் மொக்கைகள்தான் தாங்கமுடியவில்லை.இவர்கள் எந்த இசையையும் ஒழுங்காக கேட்டதில்லை என்று முடிவுக்கு வந்து விட்டுவிட்டேன்.எது ஆழம் எது மேலோட்டம் என்று சுத்தமாக தெரியவில்லை இவர்களுக்கு.
போறாளே பொன்னுத்தாயி....

எல்லாம் போல் இதுவும் கடந்துப் போயிற்று. 

கிழே என் முதல் பதிவு.எதையோ எதிர்பார்த்து இதைப் படித்த அதிஷா “ சரி... இவருக்கு அரை சதவீதம் எக்ஸ்டரா வட்டி கிடைக்கும்  போலிருக்கு” நெளிந்தார்.அவசரத்திற்கு பிளாக் ஆர்வத்தால் எழுதிய பதிவு.வலையேற்ற மூன்று பதிவு கட்டாயமாக எழுதவேண்டும்.எனக்கும் பிடித்துத்தான் எழுதினேன்.

இதற்கு ஒரு கமெண்ட் இல்லை.நொந்துபோனேன்.

பாகவதரின் சாயலில் டி.எம்.எஸ். பாடிய சில பாடல்கள்:


ஸ்டாக் டேங்கில் மொத்தம் 524 பதிவுகள்.சிறுகதைகள் 50. கவிதை 115.இளையராஜா 35. 294 பாலோயர்ஸ். இது போதும் எனக்கு ... இது போதும் எனக்கு.(அய்யோ....ரஹ்மான் பாட்டா??)

நான் ரொம்பவும் சிலாகித்து எழுதிய சிறுகதை இரண்டு.சலூன் கதையைக் குறும்படமாக இயக்கலாம். சூப்பராக இருக்கும்.கதைகளுக்கு  படமாக நெட்டில் சுட்டு ஆண் பெண் போட்டோக்களைப் போடுவது உடன்பாடு இல்லை.அது படிப்பவர்களின் கற்பனையில் குறுக்கிடுவது.

சாந்தி சலூனுக்கு வந்த மகேஸ்வரி

திருப்பிக் கொடுக்கப்படாத காதல் கடிதம் 

எனக்குப்பிடித்த திகில் கதை
பேய் வீட்டில் விழுந்த செல்போன்

எனக்குப்பிடித்த கவிதைகள்

ஹாலில் பெய்த மழை

மொட்டை மாடி

பிடித்த ஹைகூ கவிதை

குட்டையில் விழுந்த
நிலாவைப் பார்க்கும்
மற்றொரு நிலா
 

ஹைகூக்கள்



சமந்தா புராணம்

ஸ்ரீப்ரியாக்கு பிறகு என் மனதில் இடம் பிடித்தவர் சமந்தா.காரணம் நீஎபொவில் இவர் வெளிப்படுத்திய முகபாவங்கள்... குறுகுறுப்புகள்.Stunning ! கெளதம்மேனன் நிறைய ஹோம்வொர்க் செய்து எடுத்திருக்கிறார்.ஸ்ரீப்ரியா போல் இயற்கையிலேயே இவருக்கு சினிமாவுக்கான முகம்(?) உடல் மொழி இருப்பதாக என் யூகம்.


மெளனம்தான் பாடலா
வலி எல்லாம் தரும் ஊடலா
இதுபோதும் இதுபோதும்
ஒரு வார்த்தை சொல்வாய் நண்பா
உயிர் தேடும் உயிர் தேடும்
ஒரு கூடல் செய்வாய் நண்பா

கண்ணில் தாகம தீருமோ  மித்ரா.... மித்ரா...

ஒரு குறும்படம்  “கடிதம்”

 குறும்படம் அருமை.ஆரம்ப இசை படத்தின் ஒரு கதாபாத்திரமாக ஏதோ ஒரு வலியை ஏற்படுத்துகிறது.(படத்தின் இசையமைப்பாளர் என்று டைட்டிலில் யாரும் இல்லை.)

கடிதம் என்ற சொல்லில் உயிர் இருக்கிறது.ஆத்மா இருக்கிறது.திறந்த மனம் இருக்கிறது.நிறைய எழுத்தாளர்களுக்கு தலைப்பாக இருந்திருக்கிறது.







You  Tubeல் முதல் அடி.....

ரொமப வருடமாக யூ டுயூபில் சொந்தமாக  இடம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏதோ ஒரு காரணத்தினால் தள்ளிப்போய்போனவாரம்தான் கைகூடியது.

நான் வலையேற்றிய முதல் பாடல். பழைய சிலோன் ரேடியோவில் கேட்பது மாதிரி ஆடியோ. 2.22 வில் ” என்னாளும் நீ தொட்டால் அடி அம்மாடி” ஜானகி மயக்கும் குரலில் வசீகரிக்கிறார்.

1.30 -2.03 இதெல்லாம் ராஜாவைத் தவிர யாரும் மீட்ட முடியாது.

சமந்தாவின் காதலர்கள் அவர் முகத்தை பார்த்தவாறே பாட்டைக் கேட்டால் தாக்கம் இருக்கும்.




பொறியியல் படிப்பு,கேங் ரேப்,மாணிக்கம்,மாராப்பு

$
0
0
பொறியியல் கல்லூரிகள் மொபைல் ரீசார்ஜ் பொட்டிக்கடைகள் போல திறந்து வைத்துக்கொண்டு பொறியியல் பட்டத்தை சுண்டல் கொடுப்பது போல கொடுக்கிறது.இதனால் நல்ல(???) நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட கல்லூரிகளும் பாதிக்கப்படுகிறது.கட்டுக்கட்டாக பணமும் மெரிட்டும் கலந்து கல்வி வியாபாரம் ஆகி பலவருடம் ஆகிவிட்டது.

மேலே பழைய கதை.புது கதையை தெரிந்துக்கொள்ள வேண்டும்.


விளைவு சப்ளை (இன்ஜினியர்கள்)அதிகமாகி தரம் குறைந்து டிமாண்ட்(வேலை)குறைந்துவிட்டது.பி.இ. வெறும் ”பீ” அல்லது அந்தக்கால பி.ஏ.ஆகிவிட்டது.

இப்போது பி.இ.படித்தவர்கள் ரயில்வே-வங்கி-பிபிஓ கிளார்க் வேலைக்கெல்லாம் அடித்துப்பிடித்துக்கொண்டு ஓடுகிறார்கள்.காரணம் வேலைக்கிடைப்பதில்லை.அடி வயிறைக் கலக்கும் படிப்புக் கடனை வேறு அடைக்கவேண்டும்.கிராமம் சார்ந்த பி இ க்கள் ரொம்ப மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.தரம் பாதிக்கப்பட்டதால் பிளேஸ்மெண்ட் கம்பெனிகள் பலவித டெஸ்ட் வைத்துதான் வடிகட்டி எடுக்கிறார்கள்.ஆங்கிலமீடியமே தடுமாறுகிறது.இதில் தமிழ்மீடியம் வேறு.கொடுமைடா சாமி...!

கடுமையான போட்டியில் மீண்டு எப்படி ஜெயிப்பது?இதுதான் இப்போதைய  நிதர்சனம் அல்லது  யதார்த்தம் அல்லது ground reality. கருப்பு எழுத்தில் இருப்பவைகள செய்தே ஆக வேண்டும்.இது வழக்கமான பரம்பரை பரம்பரையான பெரிசு புலம்பல்இல்லை.பின்னால் வருத்தப்பட்டு பிரயோஜனமில்லை.

1.படிக்கும்போதே சைட்பை சைட் தன் பிரிவுக்குண்டான (EEE,MECH,CSE,E&I,ECE etc.,etc.,) (job skill) விவரங்களைத் தெரிந்துகொள்வது

2.கடைசி வருடத்தில் தான் படிக்கும் பிரிவின் வேலையை தினமும் செய்வது மாதிரி அணுகி கற்றுக்கொள்வது.


3.CommnicationSkill(verbal/writing),Aptitudeசத்தியமாக
வளர்த்துக்கொள்ளவேண்டும் பிளேஸ்மெண்ட்டில் தடுமாற்றம் இருக்காது.செல்,பேஸ்புக்,டிவிட்டர்,பிளாக்கில் எழுதும் கொத்துபரோட்டா எழுத்துவகைகள் எங்கும் உதவாது.பள்ளி, கல்லூரியின் சுகமான நினைவுகளாக மனதில் இருத்திக்கொண்டு மறந்துவிட வேண்டும்.

இந்தத் திறமையை எல்லாம் சொல்லிக்கொடுக்க கம்பெனிக்கு ஆளும் இல்லை நேரமும் இல்லை.

4.நாலாவது வருடம் எந்தவித அரியர்ஸ் இல்லாமல் முதல் இருபது இடத்தில் இருப்பது.

5.ஒவ்வொரு வருடமும் படிக்கும் பிரிவின் வேலை டிரெண்ட் எப்படி போகிறது என்று கவனிக்க வேண்டும்.

5.வேலைக்கு சேர்ந்த பிறகோ அல்லது முன்னமோ சூழ்நிலைக்கு ஏற்றார் போல் முதுகலை அல்லது எம்பிஏ படிப்பது.இதுஅடுத்தடுத்த கட்டங்களுக்கு தாவிப்போக முடியும்.
_________________________________________________



சரி ஜே ஜே  மாணிக்கத்திற்கு வருவோம்.யார் இவர்?திரைப்பட ஒலிப்பதிவாளர்.சவுண்ட் இன்ஜினியர்.

இவர் பெயரை  முக்கால்வாசி சினிமா டைட்டில்களில் கிட்டத்தட்ட 50 வருடமாக பார்த்து வந்திருக்கிறேன். 1990-95க்கு பிறகு அவ்வளவாக காணப்படுவதில்லை.இவர் தனி ஒரு ஆளாக கொடிக்கட்டி பறந்திருக்கிறார்.அப்போது இந்தத் துறையில் ஆட்கள் குறைவா?

இவர் பி.இ. சவுண்ட் இன் ஜினியரிங்?



_________________________________________________


மெய்நிகர் ஆடை வெள்ளோட்ட அறை(virtual trial dressing room)



சென்னையில் சில ரெடிமேட் கடைகள் வாங்கும் துணி அளவு சரியாக இருக்கிறதா என்று அணிந்துப் பார்க்க  அனுமதிக்கிறார்கள்.அதுவும் ஒரு கடையில் கொத்துகொத்தாக trial room எடுத்துக்கொண்டுபோய் சரிபார்க்கலாம்.வெளியே வரும் போது வதங்கி கசங்கி சுருங்கி gang raped லெவலுக்கு வரும்.பிடிக்கவிட்டால் மடித்துவைக்கப்படுகிறது.

அடுத்த  கஸ்டமர் அதை  வதங்கி கசங்கி சுருங்கி gang rape..........வெள்ளாவியில் வேகவைத்து  ரின் - சர்ப்- நிர்மா-பொன்வண்டு சோப்பில் தோய்த்து பிறகு அணிந்துகொள்வது  நலம்.ஆனால் நான் எதுவும் செய்யாமல்தான் அணிந்துக்கொள்கிறேன்.

என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்?

 _________________________________________________

மவனே .... அடி  பின்றண்டா இன்னிக்கு....!

ரொம்ப நாளைக்கு  பிறகு  நான் பார்க்கும் உள்ளே ஒரு  killer instinct (வெறி) டோடு விளையாடும் வீரர் விராட் கோலி.பீமன் போல் கடாயுதத்தை (மட்டையை) சுற்றியபடி பந்தை துவம்சம் செய்து  ரன் அடித்துக்குவிக்க எப்போதும் முனையும் போக்கு. இப்படி இல்லாமல் சாதாரண மூடுக்கும் வருவார். மேற்கந்திய தீவுகள் அணியில் இப்படி ஒரு காலத்தில் பெளலிங் செய்வார்கள்.

dashing batsman.
 _________________________________________________

முந்தானை... மாராப்பு...பல்லு...!

இனிமேதான் கட்டிக்கபோறாங்க

புடவை அழகு பாஷன் போட்டிகளில்புடவை அணிந்து நடந்து நடந்து நடந்து போவார்கள்.ஆனால் பாதி போட்டிகளில் முந்தானையை காற்றில் பறக்கவிட்டு புடவைக்குப் பதிலாக வேறு எதையோ  பாஷனாக காட்டியவாறு புடவையின் மகத்துவத்தையே கலைப்பார்கள்.அச்சுபிச்சுத்தனமாக சுற்றிக்கொண்டு ”பேஷனாக” நடப்பார்கள்.நடுவர்கள் நோக்கர்கள் கிழே குழியில் உட்கார்ந்தவாறு கலைக்கண்ணுடன் நோக்குவார்கள். மார்க் போடுவார்கள்.

இதெல்லாம் பல வருடமாக நடந்து வருகிறது.இதில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை இது அவர்களின் பிசினஸ் நுணுக்கம்-அணுகுமுறை-ரூல்...


இவங்க கச்சிதமா கவர்ச்சியா இருக்காங்க.எல்லாம் மூடி இருக்கிற இந்த பேஷன் புடிச்சிருக்கு.
இவங்க  புடவையை அணிந்து இருக்காங்க

ஏம்பா... அதுக்காக இழுத்துபோர்த்திக்கொண்டு “மணமகளே மணமகளே வா.... வா’ ன்னு நடக்க முடியுமா.ஹல்லோ.... இது பேசன் சோப்பா....! ஊர் நாட்டானா இருக்க.

நீயா நானா நீலம் ரகசிய ராத்திரி குரல் டைரி பலன்கள் இளையராஜா

$
0
0
வருடா வருடம்  உலகம் உருண்டு புதுபுது வருடம் வந்து முன்னேறினாலும் டைரிகளில்  இன்னும் சில அவசியமற்ற தகவல்களை சம்பிரதாயமாக பிரசுரிக்கிறார்கள்.அதுவும்  லோகல் இன்ஜினியரிங் கம்பெனிகளில்.

அவை: இண்டர்நேஷனல் பேப்பர் சைஸ்,பல நாட்டின் நேரங்கள், உஷ்ண நிலை,டயர் பிரஷர், பலநாட்டின் கரன்சி பெயர்கள்,விமான தூரங்கள்,மெட்ரிக் அளவு கன்வெர்ஷன்கள்,உணவுகளில் கலோரி கணக்கு,அமெரிக்க,பிரிட்டிஷ்,ஆஸ்திரேலிய கோட்/சர்ட்/பேண்ட்/ஷூ சைசுகள்.


தேவையா?

நல்லவேளை போஸ்டல் பின்கோடு,இன்காம்டாக்ஸ் ரேட்ஸ்,வாழ்த்து தந்தி விவரங்கள்,இன்லெண்ட் கவர்,கார்டு, ரிஜிஸ்டர்டு தபால் விவரங்கள்,ரோமன் நம்பர்கள் வேறு வழி இல்லாமல் தவிர்த்திருக்கிறார்கள்.




ஒரு சிறுகதை:  Guest Role


தன் பெயரை டைப் செய்தாலே நெட் முழுவதும் தன்னைப்பற்றிய செய்திகள் போட்டோக்கள் சினிமா ஸ்டில்கள் போட்டோக்கள் மீண்டும் சினிமா ஸ்டில்கள் குடும்ப போட்டோக்கள்.அதிலும் இவள்தான்.ரொம்ப அலுப்பாகவும் கூடவே திகட்டவும் செய்தது.

வித்தியாசமாக ஒன்றும் இல்லை முகத்தைச் சுருக்கினாள் இன்றைய சினிமா ரசிகர்களின் 22 வயது கனவுகன்னி.

நொந்துக் கொண்டே லேப்டாப்பை மடியிலிருந்து சரிக்கையில் குறுகுறுப்பாக ஒரு எண்ணம் மின்னல் போல் தோன்ற தன் பெயரையும் அதனுடன் சில ஆபாச சொற்களை சேர்த்து டைப் செய்தாள்.

கூகுள் அட்ரஸ்களை கொட்டியது.முதலில் அதிர்ந்து பிறகு ஆர்வத்துடன் கிளிக்கினாள்.கண்கள் விரிந்தது.வெட்கம் பிடுங்கித்தின்றது. சீ.... போ...புன்னகை கலந்த லஜ்ஜையுடன் முறைத்தாள்’.பச்சையான ஆபாச உடல் உறவு காட்சிப்படங்கள்.

எல்லாவற்றிலும் இவள்தான் கதாநாயகி.

மிகவும் கட்டுமஸ்தான எட்டு கருப்பு இளைஞர்களும் ஒரு வெள்ளை ஆணும்.அவன் பின் ஒரு கருப்பு டீன் வயது பெண். எல்லோரும் பச்சை நிர்வாணம்.இவர்களின் நடுவில் இவளும் நிர்வாணமாக படுத்திருந்தாள்.வேறு ஒரு மேல் நாட்டின் பெண்ணின் முகத்தில் தன் முகம் நேர்த்தியாக மார்ப் செய்யப்பட்டிருந்தது.

வெரி நைஸ்... குறுகுறுப்பு கலந்த லஜ்ஜையுடன் தொடர்ந்து பக்கங்களை பிரவுஸ் செய்ய ஆரம்பித்தாள்.

                                       முற்றும்

ராத்திரி நேரத்து ரகசிய குரல்:

கடந்த பத்து ஆண்டுகளாக  பலதமிழ்த் திரைப்பாடல்கள் டூயட்டோ சோலோவோ “பாப்” அல்லது ”கிளப்டான்ஸ்” பாடல்கள் போல் போதை கலந்த அல்லது ராத்திரி நேரத்து ரகசிய குரலில் பாடப்படுகிறது.ஆங்கிலத்தில் husky voice என்று சொல்லலாம்.இதை ஆரம்பித்து வைத்தவர் ஹாரிஸ் ஜெயராஜ்? தொடர்பவர்கள் விஜய் ஆண்டனி,ஜிவி பிரகாஷ் மற்றும் பலர்.

தமிழ்ப்பட விதிகள்படி விரகதாபப் பாடலுக்குத்தான் இப்படிப் பாடுவார்கள்.வி.தாபம் இல்லாமலேயே நிறைய பாடல்கள் வருகிறது.

உதாரணம் 1. காக்க காக்க “ தூது வருமா”  2. உன்னாலே உன்னாலே “ஜூன் போனால் ஜுலை” 3. காதலி விழுந்தேன் “உன் தலை முடி உதிர்வதை இப்போது லேட்டஸ்ட்டாக 4. என்றென்றும் புன்னகை ”கடல் நான் தான்”

தூது வருமா

ஜூன் போனால்

உன் தலைமுடி

கடல் நான்தான்

இளையராஜாவின் நீஎபொ  “சாய்ந்து” “ சற்று முன்பு” “முதல் முறை” பாடல்களை ராத்திரி நேரத்து ரகசிய குரலுக்கு மாற்றிவிட்டார்.”அந்தப்புரத்தில் ஒரு மகாராணி அவன் அன்புக்கரங்களில்” என்கிற ரேன்ஞக்கெல்லாம் பாடமுடியாது.

ஏன்?


கதாநாயகன் - நாயகிகள் மாறிவிட்டார்கள்.உடைகள் மாறிவிட்டது.புடவை ஜாக்கெட் இல்லை.தலைவாரி பின்னல் இல்லை பொட்டு இல்லை. நாயகன் கடுக்கன்போட்டு தலைமுடியில் சாயம் அடித்து எண்ணெய் அப்பி குச்சிகுச்சியாய் நிற்கவைத்தபடி தோன்றுகிறான்.திருமணத்தில் தாலிகட்டும் நேரத்தில் மட்டும் புடவை-வேஷ்டி.மொததத்தில் சினிமா மாறிவிட்டது.அதனால் டிரெண்ட் மாறிவிட்டது.

 கிழே சேட் ரேவதிதான் இப்போதைய கதாநாயகி பேஷன் டிரெண்ட்

ஆனால் அவ்வப்போது ரகசிய குரல் இல்லாமுலும் பாடுகிறார்கள்.

இளையராஜாவும் ஆத்மாவும்

பொத்தி வச்ச மல்லிகை மொட்டு....பூத்திருச்சு  வெட்கத்தவிட்டு...

ஹாப்பி

”பொத்தி வச்ச மல்லிகை மொட்டு....வாடுதடி வாசனை கெட்டு..
ரொம்ப சேட்(தேங்க்ஸ் த்ரிஷா)
இது சோகத்தில் பாடும் பாட்டு (மண்வாசனை).மகிழ்ச்சியான தருணத்தை அப்படியே உல்டாவாக சோகமாக்க வேண்டும்.

ஆக்கிவிட்டார். ஆனால் இதில் என்ன ஸ்பெஷல்? 

உதாரணமா பாண்டியன் ரேவதியை கயிற்றில் இழுப்பது (0.18-0.33) எப்படி சோகமாக இசைக்கப்படுகிறது.0.18-0.28 வரை பெரிய  விஷயம் இல்லை.


 0.29-0.33ல்  ஒரு வித்தியாசமான உணர்ச்சி உந்தப்படுகிறது. இது தமிழ்சினிமாவிற்கு புதுசு.




தலைமுறை இடை.............................வெளி் (generation......gap):

01-12-13  விஜய் டிவி நீயா நானாவில்“ எழுபதுகளின் (1970)  திரைஇசையை இப்போதைய இளையதலைமுறையுடன் பகிர்தல்”.ஒரு பக்கம்  அந்தக்கால இசைப்பிரியர்கள்.பிரியைகளே கிடையாது. மறுபக்கம் நவீன இசைப்பிரி(யை)யர்கள்..

 நாங்க டி எம் எஸ் மட்டும்தான்

கோட் கோபிநாத்தும் இவர்களுடன்(70) இடைவெளி இருந்தது.இசை  ஜாம்பவான் ஜி.ராமநாதன்பற்றிக் குறிப்பிடவே இல்லை.

இரண்டாம் உலகம் படம் ரெண்டாவது தடவை போயிருக்கலாமோ?

மூத்த குடிமகன்கள் இவர்களுக்காகவே போட்டுவைத்த நீண்டகால வைப்பு நிதி மாதிரியான  டி எம் எஸ் பாடல்களைப் பாடினார்கள்.பெண்குரல் பாடல்கள் 99% இல்லை.இவர்களே நிறைய நேரம் பாடிக்கொண்டிருந்தார்கள்.

கேட்ட நவீன இசைப்பிரியர்களிடம் விளக்கெண்ணெய் குடித்தாற்போல் முகபாவம்.மயான அமைதி.இன்னும் கேப் ஜாஸ்தியாயிற்று.திடீரென்று ஒரு  பெண் “ நான் பார்த்ததிலே உன்” பாடலைப் பாடி போர்ரைக் குறைத்தார்.ஆறுதலாக இருந்தது.இன்னொரு பெண்ணும் “ இலந்தபயம்” பாடலைப் பாடி அசத்தினார்.

அந்தக்கால சுதர்சன்,கோவர்தன்,சலபதிராவ்,குமார்,விஜயபாஸ்கர்,
சங்கர்-கணேஷ்,எஸ்.தக்‌ஷிணாமூர்த்தி  பாடல்களைப் பற்றி அந்தக்காலஇசைப்பிரியர்கள் ஏன் பாடவில்லை. 

இவர்களுக்கும் இந்தக்கால இசையைப்பற்றி தெரியவில்லை. தெரிந்துக்கொள்ளவும் ஆர்வம் இல்லை.எப்போதுமே எந்தக்காலத்திலுமே தலைமுறை இடைவெளி இருந்துக்கொண்டேதான் இருக்கும்.இல்லாவிட்டால் வாழ்க்கை சுவராஸ்யமாக இருக்காது.

இப்போதைய தலைமுறை இவர்கள் மாதிரி இருந்தால் ஏதோ கோளாறு என்று அர்த்தம்.

ஹைலைட்: 
கோவை முரளி
மூச்சு விடாமல் பாடுவதை(அம்பிகாவதி-1957) படத்தில் வரும் “வடிவேலும் மயிலும் துணை”) பற்றி டி எம் எஸ் சொன்னதாக இவர் சொன்னது: 

“மூச்சு பிடிச்செல்லாம் பாடல.தமிழ்ல நமக்கு சில வசதிகள் இருக்கு. ச், ப் த், ன், ட், க்  இதிலெல்லாம் ரெஸ்ட் எடுத்திட்டு அப்படியே ஜெர்க் பண்ணி போயிடலாம்”

மூச்சு விடாம நான் பாடலீங்க..பின்னாடி(playback)தான் டி எம் எஸ் பாடி அசத்திட்டாரு

 அந்தப்பாடல்:







ரஜினி-என் வானிலே ஒரே வெண்ணிலா

$
0
0
டைரக்டர் மகேந்திரன் தமிழ்த்திரையுலகில் (1978-90)ஒரு முக்கியமான ஆளுமை.சினிமாவை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தியவர்களுள் ஒருவர்.

முக்கியமாக சினிமா ஒரு காட்சி ஊடகம் என்பதை காட்சிகளினூடே பார்வையாளனை பயணிக்க வைத்துக் கதைச் சொல்பவர்.காட்சிகளே கதாபாத்திரமாக,ஓவியமாக  திரையில் தீட்டப்பட்டு உணர்ச்சிகள் பார்வையாளனைத் தீண்டும்.அவன் கதாபாத்திரங்களுடன் உலாவுவான்.

மிக முக்கியமாக காட்சிகளில் விரவிக்கிடக்கும் மெளனம் அர்த்தபுஷ்டியானது.
வெள்ளை உடையில் மகேந்திரன்
இப்படிப்பட்ட படைப்பைப் படைப்பவன்தான் உண்மையான படைப்பாளி. சிருஷ்டி கர்த்தா.டைரக்டர் மகேந்திரன் ஒரு சிருஷ்டி கர்த்தா.பார்த்துப் பார்த்துச் செதுக்கும் ஓவியர்.இப்படி இவருடன் இரண்டு சிருஷ்டி கர்த்தாக்கள் கைக்கோர்த்து ஒரு கவிதையை  ஓவியமாக தீட்டி இருக்கிறார்கள் அல்லது ஒரு ஓவியத்தைக் கவிதையாக எழுதி இருக்கிறார்கள்.

அந்தக் கவிதை  ஜானி திரைப்படத்தில் வரும் “என் வானிலே ஒரே வெண்ணிலா” என்ற பாடல் காட்சி.இவருடன் இணைந்த மற்ற இரண்டு சிருஷ்டி கர்த்தாக்கள் இசைஞானி இளையராஜா ஒளிப்பதிவாளர் அசோக்குமார்.

இந்தப் பாடலின் காட்சி உள்ளும் புறமுமாக விரிக்கப்படுவதில் அசோக்குமாரும் ராஜாவும் தங்கள் கற்பனைத் திறனை அள்ளித்
தெளித்திருக்கிறார்கள்.பாடலை எழுதிய கங்கை அமரனும் பாராட்டுக்குரியவர்.நேரடியாக எதையும் சுட்டாமல் கவித்துமாக உள்ளது.

காட்சி நேர்த்தியாக romanticise செய்யப்பட்டு இருக்கிறது.




இந்தக் கவிதைக்கு  யதார்த்தமான  பின்னணி உண்டு.

குற்றப் பின்னணி உள்ள கதாநாயகன் ஜானி ஒரு இசை ரசிகன்.பிரபல பாடகி அர்ச்சனாவின் ரசிகன்.அன்று கேட்ட”ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்” பாடல் இவனுக்காகவே பாடப்பட்டதுபோல் உணர்கிறான்.மனம் குதூகலிக்கிறது.இசை நிகழ்ச்சி முடிவில் அவளைப் பாராட்டி பூங்கொத்து கொடுக்க முடியாமல் கூட்டம் இவனை தடுத்து விடுகிறது.

மறு நாள் அவள் வீட்டிற்கு தொட்டி தொட்டியாக வண்ண வண்ண பூக்கள் பூத்துக் குலுங்கும் பூந்தோட்டமே அனுப்பி வைக்கிறான்.மற்றொரு நாள் இருவருக்கும்  இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.கடற்கரையில் அர்ச்சனா உலா போகையில் தான் பாடிய  “ஒரு இனிய மனது” பாடல் காற்றில் அலைந்து வருகிறது.அதை நோக்கி போகையில்  ஒரு படகில் ஜானி மெய் மறந்துப் பாடலை கேட்டுக்கொண்டிருக்கிறான்.பரஸ்பர அறிமுகத்தில் இவன்தான் பூக்கள் அனுப்பியவன் என்று தெரிகிறது.தானும் அர்ச்சனாவைப் போல தனி இருவருக்கும் தங்களைத் தவிர யாரும்இல்லை என்பதில் இருவருக்குள்ளும் மெலிதான பிணைப்பு ஏற்பட்டு ஒரத்தில் ஒரு மொட்டு அவிழ்கிறது.

”ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை... எனக்கு மட்டும் எனக்காக மட்டும்.. தனியாக நீங்க பாடனும்.தனியா கேட்கனும்.எல்லார்கிட்டயும் சொல்லி பெருமைப் படனும்” ஜானி ஆர்வத்துடன் கேட்கிறான்.

”நிறைவேறுவது கஷ்டம்தான்...மாட்டேன்னா என்ன செய்வீங்க....” செல்லமாக சீண்டிவிட்டு ...”நாளைக்கு வீட்டுக்கு வாங்க"புன்னகையுடன் சம்மதிக்கிறாள்.ஜானியின் மனம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது.

(ஒரு பாமர ரசிகனின் வெகுளித்தனமான ஆசையை நிறைவேற்றுவதில் அர்ச்சானவுக்கு ஒரு fatal attraction இருக்கிறது)


மறுநாள்:ஜானி சட்டைக்குள்ளே “MUSIC THE LIFE GIVER"என்ற வாசகம் எழுதிய மஞ்சள் பனியன் (பாமரத்தனமாக??) அணிந்து அவளை சந்திக்கச் செல்கிறான்.

வீட்டில் நுழைந்ததும் ஒருஅழகான  பியானவும் அதைச் சற்றி அவன் கொடுத்த வண்ணப் பூக்களும்  பார்வையில்பட்டு ”பியூட்டி புல்... பியூட்டி புல்...” நெகிழ்ந்துப்போய்விடுகிறான்.

பியானோ வாசிக்க முயற்சிக்கச் சொல்லி அவனும் மொன்னையாக  மெட்டுவாசிக்க முயற்சிக்க ” no.. no... just listen..!"என்று பியானவில் அவள் விரல்கள் மீட்ட நாதங்கள்  மீன்களாய் துள்ளி  கவிதையாக எழ ஆரம்பிக்கிறது.

பாடல் முழுவதும் அவன்  உடல்மொழி இயல்பாக இருக்கிறது.

காட்சி......



கேமரா ஊர்ந்து தூரிகையால் ஓவியத்தை தீட்ட ஆரம்பிக்க  உயிர் துடிப்புடன் இயங்க ஆரம்பிக்கிறது காட்சி.இசை மென்மையான வெஸ்டர்ன் கிளாசிகலில் காட்சியை நகர்த்துகிறது.அர்ச்சனாவின் வானில்  வெண்ணிலாவும் காதல் மேகங்களும் கவிதை தாரகைகளும் ஊர்வலம் போக ஆரம்பிக்கிறார்கள்.

அர்ச்சனாவின் உடை ஒரு தனி மொழியே பேசுகிறது.காட்சியின் பின்னணி ஒரு பாத்திரமாக பரவசப்படுத்துகிறது.காட்சிகள் உள்ளேயும் வெளியேயுமாக வழுக்கிக்கொண்டு பயணித்தப்படி போகிறது.ஜானி ” எல்லாம் எனக்குத்தான் எனக்குத்தான் ... எனக்குத்தான்...”கற்பனைச் சிறகடித்துப் பறக்கிறான்.

அர்ச்சனாவின் குரலில்(ஜென்சி) இருக்கும் மழலைத்தனத்தில் காதல் இருக்கிறது.காட்சியை ஆழப்படுத்துகிறது.


முதல் இடை இசையில் ரஜினி மனம் குதூகலித்தப்படி மேகத்தில் பறக்கிறது. உச்சக்கட்டமாக 1.22 ல் சொர்க்கத்திலிருந்து ஆசிர்வதிக்கப்படுகிறான்.Absolutely bliss..!


முதல் சரணத்தில் ”நீரோடை போலவே’ 1.30 -1.56 ஆரம்பித்து முடியும் வரை ரஜினி,ஸ்ரீதேவி,பிரேமி மூவரும் வாழ்ந்திருக்கிறார்கள்.
குறிப்பாக 1.46-1.47ல் கேமரா திரும்ப, படிக்கட்டில் கன்னத்தில் கைவைத்து உட்கார்ந்தபடி பிரேமி ஸ்ரீதேவியைப் பார்க்கும் (பெருமிதம்?) பார்வை யதார்த்தம்.

அடுத்து 1.56ல் ”நீராட வந்ததே என் மென்மை” என்று ஸ்ரீதேவி தன் குண்டு விழிகளில் எதையோ தேக்கி (காதல்?காமம்?)புன்சிரிப்போடு காட்டிவிட்டு தலைகுனிவது அருமை.

3.26ல் வாசித்துக்கொண்டே பிரேமியை எட்டிப்பார்க்கும் இடம் ரொம்ப சுட்டி.



இளையராஜாவின் வெஸ்டர்ன் கிளாசிகல் வயலின்/பியானோ இழைகள் காட்சி  முழுவதும் சில்லென்று வீசிக்கொண்டே இருக்கிறது.

பாட்டை அதன் பரிமாணத்தில் உள்வாங்கி மகேந்திரனும் அசோக்குமாரும்  கவிதையாக செதுக்கி இருக்கிறார்கள்.

காவியக் காதல்களில்இரவு, நிலவு,பூஞ்சோலை, அருவி,அன்னம், புறா,மயில்,உப்பரிகை என்று காதலர்கள் உலா வருவார்கள்.

தமிழ் திரையுலகில் இப்படி உணர்வுபூர்வமாக மென்மையாக மிகைப்படுத்தாமல் இருவருக்கும் இடையில் இருக்கும் காதலை பின்னணியுடன் பின்னி பினைந்து இசை வழியாக சொல்லி காட்சியை ஆழப்படுத்தியது அபூர்வமான ஒன்று.



Viewing all 56 articles
Browse latest View live